தாவரங்கள் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 3rd Science : Term 2 Unit 3 : Plants
தாவரங்கள் (இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு அறிவியல்)
மதிப்பீடு
1. இலையின் பணி __________
அ) ஆதாரம் கொடுப்பது
ஆ) மண்ணில் ஊன்றி நிற்கச் செய்கிறது
இ) உணவு உற்பத்தி செய்வது
ஈ) ஏதுமில்லை
விடை: இ) உணவு உற்பத்தி செய்வது
2. __________ ஆணிவேருக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
அ) நெல்
ஆ) புல்
இ) மா
ஈ) கேழ்வரகு
விடை : இ) மா
3. முழு தாவரத்தையும் தாங்கி நிற்கும் ஆதாரமாக __________ உள்ளது.
அ) வேர்
ஆ) பூ
இ) இலை
ஈ) தண்டு
விடை: ஈ) தண்டு
4. பெரும்பாலான தாவரங்கள் __________ லிருந்து உருவாகின்றன.
அ) வேர்
ஆ) இலை
இ) மலர்
ஈ) விதை
விடை: ஈ) விதை
5. குறைவான வளர்ச்சி கொண்ட வேர்கள் __________ தாவரத்தில் காணப்படுகின்றன.
அ) ஆகாயத் தாமரை
ஆ) வேம்பு
இ) தேக்கு
ஈ) பேரிச்சை
விடை: அ) ஆகாயத் தாமரை
6. ஒரு தாவரத்தில் X என்ற பகுதி இல்லையெனில், புதிய தாவரங்களை உருவாக்க இயலாது. அந்த X என்ற பாகம் எது?
அ) தண்டு
ஆ) வேர்
இ) மலர்
ஈ) இலை
விடை : இ) மலர்
7. பின்வரும் எந்த தகவமைப்பை வறண்ட நிலத் தாவரங்கள் கொண்டுள்ளன?
அ) சதைப்பற்றுடன் கூடிய தண்டு
ஆ) ஊசி போன்ற வேர்
இ) இலைகள் முட்களாக மாறுதல்
ஈ) அ மற்றும் இ இரண்டும்
விடை: ஈ) அ மற்றும் இ இரண்டும்
8. பல விதைகள் கொண்ட கனிக்கு உதாரணம் ---------------
அ) மாதுளை
ஆ) மா
இ) சீமை வாதுமை (ஆப்ரிகாட்)
ஈ) பேரிச்சை
விடை: அ) மாதுளை
9. பின்வரும் படத்தில் குறிக்கப்பட்டுள்ள பாகங்களுள் முறையே எது நீர் உறுஞ்சுவதற்கும் வாயுப் பரிமாற்றத்திற்கும் பயன்படுகிறது?
அ) P மற்றும் R
ஆ) R மற்றும் S
இ) S மற்றும் Q
ஈ) T மற்றும் P
விடை: ஈ) T மற்றும் P
ஆ. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
1. கேரட் முள்ளங்கி (தக்காளி) பீட்ரூட்
2. முட்டைக்கோசு கீரைகள் (மஞ்சள்) பசலைக்கீரை
3. (வேம்பு) சப்பாத்திக்கள்ளி கற்றாழை பேரிச்சை
4. தேங்காய் மா சீமை வாதுமை (ஆரஞ்சு)
5. ஹைட்ரில்லா (சப்பாத்திக்கள்ளி) ஆகாயத்தாமரை வாலிஸ்னேரியா
இ. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
1. தாவர பாகங்களின் பெயர்களை எழுதுக.
வேர், தண்டு, இலை, மலர், கனி மற்றும் விதை.
2. வேரின் வகைகள் யாவை?
ஆணிவேர், சல்லிவேர்.
3. இலையின் ஏதேனும் இரு பணிகளை எழுதுக.
• தாவரங்களின் இலைகளிலுள்ள மிகச்சிறிய துளைகளின் வழியாக நீரானது நீராவியாக வெளியேறுகிறது. இந்நிகழ்விற்கு நீராவிப்போக்கு என்று பெயர். இது தாவரங்களுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
• சில தாவரங்களின் இலைகள் உண்ணக்கூடியவை மற்றும் சத்துகள் நிறைந்தவை.
• எ.கா: கீரைகள், முட்டைக்கோசு.
4. மலரின் பாகங்கள் யாவை?
அல்லிவட்டம், புல்லிவட்டம், மகரந்தம், சூலகம்.
5. வாழிடங்களின் அடிப்படையில் தாவரங்களின் வகைகளைக் குறிப்பிடுக.
• வறண்ட நிலத் தாவரங்கள்.
• மலை வாழ்த் தாவரங்கள்.
• சமவெளியில் வாழும் தாவரங்கள்.
• கடலோரத் தாவரங்கள்.
6. வறண்ட நிலத் தாவரங்களின் ஏதேனும் இரு தகவமைப்புகளை எழுதுக.
• நீர் இழப்பைக் குறைக்க இலைகள் முட்களாக மாறியுள்ளன.
• தண்டு பச்சை நிறத்தில் சதைப்பற்றுடன் காணப்படும். தண்டானது உணவைத் தயாரித்தல் மற்றும் நீரைச் சேமித்தல் ஆகிய பணிகளைச் செய்கிறது.
• வறண்ட நிலத் தாவரங்களில் வேரானது நீளமாகக் காணப்படும். அவை மண்ணில் அதிக ஆழம் வரை செல்லும்.
7. நீர் வாழ்த் தாரவங்களின் பெயர்கள் சிலவற்றை எழுதுக.
• நீரில் மிதக்கும் தாவரங்கள் - எ.கா: ஆகாயத் தாமரை, பிஸ்டியா.
• வேரூன்றி நீரில் மிதக்கும் தாவரங்கள் - எ.கா: அல்லி, தாமரை.
• நீரில் மூழ்கி வாழும் தாவரங்கள் - எ.கா: வாலிஸ்நேரியா, ஹைட்ரில்லா.
ஈ. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
1. பின்வருவனவற்றிற்கு அவற்றின் பணிகளில் ஏதேனும் இரண்டினை எழுதுக.
அ) தண்டு :
• முழுத் தாவரத்தையும் தாங்கும் ஆதாரமாக உள்ளது.
• இலையிலிருந்து உணவையும், வேரிலிருந்து நீரையும் தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துகிறது.
ஆ) வேர் :
• தாவரம் மண்ணில் ஊன்றி நிற்க உதவுகிறது.
• நீர் மற்றும் கனிமங்களை மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது.
இ) மலர் :
• கனியாக மாற்றமடைகின்றன.
• தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவிபுரிகின்றன.
2. 'இலையை தாவரங்களின் சமையலறை' என்று அழைப்பது ஏன்?
• தாவரங்கள் இலைகளின் மூலமாக தமக்குத் தேவையான உணவை நீர், கார்பன் டைஆக்ஸைடு, சூரிய ஒளி மற்றும் பச்சையம் ஆகியவற்றின் உதவியுடன் தயாரிக்கின்றன. இந்நிகழ்விற்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர்.
• ஆதலால் இலைகளைத் தாவரங்களின் சமையலறை என அழைக்கலாம்.
3. ஆணி வேர், சல்லி வேர் - வேறுபடுத்துக.
ஆணி வேர்
தடித்த முதன்மை வேர், மண்ணில் அதிக ஆழம் வரை செல்லும்.
முதன்மை வேர்கள் முளைவேரிலிருந்து (நிலையானது) தோன்றுகின்றன.
இலை நீண்ட ஆணி போன்ற வடிவத்தில் காணப்படும்.
எ.கா: புளிய மரம், கொய்யா
சல்லி வேர்
முதன்மை வேர் காணப்படாது. வேர்கள் மண்ணில் அதிக ஆழம் வரை செல்லாது.
சல்லி வேர்கள் தண்டின் அடிப்பகுதியில் வளர்கின்றன. (முளை வேர்கள் குறுகிய காலத்தில் அழிந்துவிடும்)
இவை கொத்தாகக் காணப்படும். .
எ.கா: மக்காச்சோளம், கரும்பு.
4. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
அ) ஒரு விதை கொண்ட கனி
மா, தேங்காய்.
ஆ) பல விதைகள் கொண்ட கனி
பப்பாளி, தர்பூசணி.
5. நீரில் மிதக்கும் இரண்டு தாவரங்களின் பெயர்களை எழுதுக.
ஆகாயத் தாமரை, பிஸ்டியா.
6. அல்லி படத்தை உற்றுநோக்கி, பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
அ) தாவரத்தின் எப்பகுதிகள் மேலே தெரிகின்றன?
இலைகள் மற்றும் மலர்.
ஆ) இத்தாவரத்தின் தண்டு மற்றும் வேர் எங்கு காணப்படுகின்றன?
• இத்தாவர தண்டு மற்றும் வேர் எதிர்நிலையின் அடிப்பரப்பில் வேரூன்றி நீரின் மேற்பரப்பில் மிதந்து காணப்படுகின்றன.
• இத்தாவரங்களின் தண்டில் காற்றறைகள் காணப்படுவதால் இலை நீரில் மிதக்கின்றன.
உ. செயல்திட்டம்.
உன் நண்பர்களுடன் கலந்துரையாடி அவர்களின் வீட்டில் கடந்த இரண்டு நாள்களில் சமைக்கப் பயன்படுத்தப்பட்ட காய்கறிகளின் பெயர்களை அட்டவணைப்படுத்துக.
அட்டவணையிலிருந்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
அ) எத்தனை வீடுகளில் கீரைகள் சமைக்கப்பட்டுள்ளன?
கீரை சமைக்கப்படவில்லை.
ஆ) எந்த காய்கறி அதிக அளவு சமைக்கப்பட்டுள்ளது?
கிழங்கு வகை உணவுகள்.
ஆயத்தப்படுத்துதல்
இடம் மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி, தாவரத்தின் பாகங்களைக் கண்டறிந்து எடுத்து எழுதுக.
(டுண்த, ர்வே, லைஇ, னிக, லர்ம, தைவி)
செய்து பார்ப்போமா!
இரண்டு தொட்டிச் செடிகளை எடுத்துக் கொள்ளவும். இவற்றுள் ஒரு செடியின் வேர்ப்பகுதியை வெட்டி நீக்கியபின், மீண்டும் அதைத் தொட்டியில் நடவும். இரண்டு செடிகளுக்கும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு நீர் ஊற்றி வரவும். பின் என்ன நிகழ்கிறது என உற்றுநோக்கு. வேர் இல்லாத காரணத்தால் வேர் வெட்டிய செடி வதங்கி காணப்படுகிறது.
இந்த செயல்பாட்டின் மூலம் வேரானது நீர் மற்றும் தாது உப்புகளை மண்ணிலிருந்து உறிஞ்சுகிறது என்பது உறுதியாகிறது.
செய்து பார்ப்போமா!
இரண்டு தேங்காய் ஓடுகளில் மண்ணை நிரப்பிக் கொள்ளவும். ஒன்றில் பச்சைப்பயறையும் மற்றொன்றில் நெல் விதைகளையும் போடவும். விதைகள் இடப்பட்ட தேங்காய் ஓடுகளை சூரிய ஒளிபடும்படி நீர் ஊற்றி வைக்கவும். ஒரு வாரத்திற்குப்பின் அதில் வளர்ந்துள்ள தாவரத்தைக் கையால் பிடுங்கி அவற்றின் வேரின் பண்பை ஆராய்ந்து அறிக.
(மாணவர் செயல்பாடு)
சல்லிவேர்த் தொகுப்பு காணப்படுகிறது.
எழுதுவோமா!
சரியா, தவறா எனக் கண்டுபிடி.
1. வேர்கள் மண்ணிற்கு அடியில் வளரும்.
விடை : சரி
2. சல்லி வேரில் முதன்மை வேர் காணப்படும்.
விடை : தவறு
3. வேர்கள் மண்ணிலிருந்து நீரை உறிஞ்சுகின்றன.
விடை : சரி
4. உருளைக்கிழங்கு தனது வேரில் உணவை சேமிக்கிறது.
விடை : தவறு
5. புற்களில் சல்லி வேர்கள் காணப்படுகின்றன.
விடை : சரி
விளையாடுவோமா!
கொத்துமல்லி, புதினா, தைலமரம், புளியமரம், நெல்லி, வேம்பு மற்றும் துளசி போன்ற தாவரங்களின் இலைகளைச் சேகரிக்கவும். பிறகு இரண்டு மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களின் கண்களை சிறு துணி கொண்டு மென்மையாகக் கட்டவும். ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு இலையைக் கொடுத்து அதனைத் தொட்டோ அல்லது முகர்ந்தோ அது என்ன இலை என்று கண்டுபிடிக்கச் செய்ய வேண்டும். யார் அதிக இலைகளைக் கண்டுபிடிக்கின்றனர் எனக் கண்டறியவும்.
எந்த முறையில் அதிக இலைகளைக் கண்டுபிடிக்க முடிகிறது?
தொடுதல் / நுகர்தல்
விடை: நுகர்தல்
செய்து பார்ப்போமா!
பல்வேறு தாவரங்களின் இலையைச் சேகரித்து பின்வரும் செயல்களை மேற்கொள்க.
1. சிறியது முதல் பெரியது வரை அடுக்குக.
2. இலைகளை நிறத்திற்கேற்ப வகைப்படுத்துக.
(மாணவர் செயல்பாடு)
எழுதுவோமா!
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. சூரிய ஒளியை நோக்கி __________ வளரும்.
விடை : தண்டு
2. இலைகள் __________ லிருந்து தோன்றுகின்றன.
விடை : தண்டி
3. தாவரங்களில் உணவைத் தயாரிக்கும் பசுமையான பகுதிக்கு __________ என்று பெயர்.
விடை : இலை
4. முழு தாவரத்தையும் தாங்கி நிற்கும் தாவர பாகம் __________
விடை : தண்டு.
5. __________ உணவு மற்றும் நீரினை தாவரங்களின் பிற பகுதிகளுக்குக் கடத்துகிறது.
விடை : வேர்
சிந்தித்து எழுதுவோமா!
1. விதைகள் இல்லாத கனிகள் சிலவற்றைப் பட்டியலிடுக.
வாழைப்பழம், அன்னாசிப்பழம்.
2. நீங்கள் இதுவரைக் கண்டிராத, ஆனால் அவற்றின் பழத்தைச் சுவைத்திருக்கிற மரங்களின் பெயர்கள் சிலவற்றை எழுதுக.
மங்குஸ்தான், ரம்பூட்டான்.
பொருத்துவோமா!
இலைகளோடு அவற்றின் கனிகளை இணைக்கவும்.
இணைப்போமா!
தாவரங்களை அவற்றின் வாழிடத்துடன் பொருத்துக.
முயற்சிப்போமா!
அ) பின்வருவனவற்றுள் தவறான கூற்றைக் கண்டுபிடி.
1. வறண்ட நிலத் தாவரங்கள் வெப்பம் மிகுந்த, வறட்சியான, மணல் நிறைந்த பகுதிகளில் வளர்கின்றன.
2. கடலோரத் தாவரங்கள் மிக அதிகமான காற்றைத் தாக்குப்பிடிக்க ஏதுவாக இறகு போன்ற இலைகளைக் கொண்டிருக்கின்றன.
3. மலை வாழ்த் தாவரங்களில் ஊசி போன்ற இலைகள் காணப்படும்.
4. தேக்கு பாலைவனங்களில் வளரும் தாவரம் ஆகும்.
தவறான கூற்று : 4. தேக்கு பாலைவனங்களில் வளரும் தாவரம் ஆகும்.
ஆ) பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
1. தேக்கு புளியமரம் மாமரம் (சப்பாத்திக்கள்ளி)
2. சப்பாத்திக்கள்ளி கற்றாழை (பைன்) பேரிச்சை
இ) நில வாழிடங்களை வட்டமிடுக.
1. (காடு) குளம் (மலை) ஆறு
2. (மரம்) பெருங்கடல் (பாலைவனம்) குகை
முயற்சி செய்வோமா!
அ) நிலத்தில் வாழும் தாவரங்களுக்கு ‘நிலம்' என்றும் நீரில் வாழும் தாவரங்களுக்கு ‘நீர்' என்றும் எழுதுக.
.
வேம்பு - நிலம்
தாமரை - நீர்
சப்பாத்திக்கள்ளி - நிலம்
வாலிஸ்னேரியா - நீர்
ஆகாயத் தாமரை - நீர்
ஹைட்ரில்லா - நீர்
பேரிச்சை - நிலம்
அல்லி - நீர்
ஆ) ஆகாயத் தாமரை தாவரத்திற்கு வண்ணம் தீட்டுக.
இ) சரியா, தவறா என எழுதுக.
1. வேரூன்றி மிதக்கும் தாவரங்கள் நீர்நிலைகளில் காணப்படுகின்றன.
விடை : சரி
2. தாமரையின் இலைகள் நீரில் மூழ்கிக் காணப்படும்.
விடை : தவறு
3. தாமரை பெரும்பாலும் குளங்களில் காணப்படும்.
விடை : சரி
4. ஆகாயத் தாமரையில் பஞ்சு போன்ற காற்றறைகள் இருப்பதால் நீரில் மிதக்கிறது.
விடை : சரி