குடும்பம் | முதல் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 3rd Social Science : Term 1 Unit 1 : Family
குடும்பம் (முதல் பருவம் அலகு 1 : 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல்)
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. சமுதாயத்தின் அடிப்படை அலகு __________ ஆகும்.
அ) கிராமம்
ஆ) நகரம்
இ) குடும்பம்
விடை: இ) குடும்பம்
2. நமது அடிப்படை தேவைகளின் ஒன்று.
அ) சோபா
ஆ) இருப்பிடம்
இ) கார்
விடை: ஆ) இருப்பிடம்
3. தாய், தந்தை மற்றும் குழந்தைகள் சேர்ந்து வசிப்பது __________.
அ) சிறிய குடும்பம்
ஆ) பெரிய குடும்பம்
இ) கூட்டுக்குடும்பம்
விடை: அ) சிறிய குடும்பம்
4. __________ தமிழர்களின் மிகச்சிறந்த பண்பு.
அ) விருந்தோம்பல்
ஆ) விழாக்கள் கொண்டாடுவது
இ) கோவிலுக்கு செல்லுவது
விடை: அ) விருந்தோம்பல்
5. குடும்பத்தை நடத்த __________ திட்டமிடுவது பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
அ) செல்வம்
ஆ) பணம்
இ) வரவு - செலவு
விடை: இ) வரவு - செலவு
II. பொருத்துக:
1. பண்பு - அ) ஒற்றுமையுடன் வாழ்வது
2. வேலையை பகிர்வது - ஆ) சகோதரன் மற்றும் சகோதரி
3. இரத்த உறவுமுறை - இ) காய்கறி வியாபாரி
4. வெளியாட்கள் - ஈ) உறவுமுறையை வலுப்படுத்துவது
5. அண்டை வீட்டுக்காரர் - உ) மரியாதை
விடைகள்
1. பண்பு - உ) மரியாதை
2. வேலையை பகிர்வது – அ) ஒற்றுமையுடன் வாழ்வது
3. இரத்த உறவுமுறை – ஆ) சகோதரன் மற்றும் சகோதரி
4. வெளியாட்கள் – இ) காய்கறி வியாபாரி
5. அண்டை வீட்டுக்காரர் - ஈ) உறவுமுறையை வலுப்படுத்துவது
III. சரியா / தவறா
1. ஒரு குடும்பமானது அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும். ( ✓ )
2. நமது அண்டை வீட்டுக்காரர்கள் நமது உறவினர்கள். ( x )
3. நமது வரவு - செலவைத் திட்டமிடுவதால் பொருளாதாரம் உயரும். ( ✓ )
4. நாம் நமது பொருள்களை எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ( x )
5. எளிமையே ஒவ்வொரு குடும்பத்தின் சிறந்த கொள்கையாகும். ( ✓ )
IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி:
1. குடும்பத்தின் வகைளை எழுதுக.
சிறிய குடும்பம், பெரிய குடும்பம், கூட்டுக்குடும்பம்.
2. கூட்டுக்குடும்பம் என்றால் என்ன?
இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் ஒன்றாக வாழ்வதே கூட்டுக் குடும்பம்.
3. நமது குடும்பத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பண்புகள் யாவை?
அன்பு, மரியாதை, பாதுகாப்பு, பகிர்ந்து கொள்ளல்.
4. அண்டை வீட்டுக்காரர்கள் என்பர் யார்?
நமது வீட்டருகே உள்ளவர்கள் அண்டை வீட்டுக்காரர்கள்.
5. குறிப்பு வரைக: வரவு - செலவுத் திட்டம்
வீட்டில் உள்ளவர்களால் கிடைக்கும் வருமானம் வரவு. நமது அன்றாட தேவைகளுக்கு செலவு செய்வது செலவு. வரவிற்குள் செலவு செய்வதே வரவு - செலவுத் திட்டம்.
செயல்பாடு நாம் எழுதுவோம்
உனது குடும்பத்தில் உள்ள தாய்வழி உறவுமுறை, தந்தைவழி உறவுமுறை உறவினர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
தாய்வழி உறவினர்கள்
மாமா, தாத்தா, பாட்டி (ஆச்சி), சித்தி, பெரியம்மா
தந்தை வழி உறவினர்கள்
அத்தை, தாத்தா (பாட்டையா), பாட்டி (அப்பத்தா), சித்தப்பா, பெரியப்பா
சிந்தனை செய்
இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுடன் வசிக்கும் குடும்பங்களை நீ கண்டதுண்டா?
இல்லை. இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுடன் வசிக்கும் குடும்பங்களை நான் கண்டதில்லை.
செயல்பாடு நாம் எழுதுவோம்
உனது குடும்பத்தில் உள்ள உறவினர்களிடையே காணப்படும் சில மதிப்புகளைப் பட்டியலிடுக.
சகிப்புத்தன்மை, அன்பு, இரக்கம், மன்னிப்பு, உதவி செய்தல்.
நீ உனது உடமைகளை எவ்வாறு பராமரிக்கிறாய்? உனது நண்பர்களுடன் விவாதி.
❖ எனக்குத் தேவையான நேரம் மட்டுமே என்னுடைய உடைமைகளைப் பயன்படுத்துவேன்.
❖ என்னுடைய உடைமைகளைக் கவனமுடன் பயன்படுத்துவேன்.
❖ என் தேவைக்கு நான் குறைந்த அளவு பொருள்களையே பயன்படுத்துவேன்.
உனது உறவினர்களை எவ்வாறு அழைப்பாய்?
1. அம்மாவின் அம்மா - பாட்டி
2. அப்பாவின் அப்பா - தாத்தா
3. தந்தையின் சகோதேரி - அத்தை
4. தாயின் சகோதரன் - மாமா
உன் உறவினர்கள் வரும்பொழுது நீ எவ்வாறு நடந்து கொள்வாய்?
❖ அன்பாக நடந்து கொள்வேன்.
❖ நீர் கொடுத்து வரவேற்பேன்.
❖ அவர்களோடு குசலம் விசாரிப்பேன்.
❖ அவர்களோடு அமர்ந்து உரையாடுவேன்.
செயல்பாடு நாம் எழுதுவோம்
உனது வீட்டில் ஏதாவது செல்லப்பிராணி உள்ளதா?
ஆம், என்னுடைய வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்று உள்ளது.
சிந்தனை செய்
நீ ஒரு பொருளை வாங்குவதற்கு முன் இது நமக்கு தேவையா என்று யோசித்தது உண்டா?
ஆம், நான் எந்தப் பொருளையும் வாங்குவதற்கு முன் அது தேவையா எனப் பலமுறை யோசித்தது உண்டு.
1. உனது குடும்பத்தில் எத்தனை நபர்கள் சம்பாதிக்கின்றனர்?
என் அப்பா, அம்மா இருவரும் சம்பாதிக்கின்றனர்.
2. நீ பணத்தை சேமிக்கிறாயா?
ஆம், நான் என் பெற்றோர் தரும் சிறு பணத்தை சேமிக்கிறேன்.
செயல்பாடு
செயல்திட்டம்
உனது குடும்ப வரவு-செலவு திட்டத்தை கீழ்க்கண்ட அட்டவணையின்படி தயாரிக்கவும். பின் சரியான இடத்தில் குறியிடவும்.
❖ வரவும் செலவும் சமமாக உள்ளது. ( )
❖ வரவு செலவைவிட அதிகமாக உள்ளது. ( ✓ )
❖ வரவு செலவை விட குறைவாக உள்ளது. ( )