நமது சமுதாயம் | பருவம்-2 அலகு 3 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - பதில்களுடன் கூடிய கேள்விகள் | 2nd EVS Environmental Science : Term 2 Unit 3 : Our Society
நமது சமுதாயம் (பருவம்-2 அத்தியாயம் 3 | 2வது EVS சுற்றுச்சூழல்
அறிவியல்)
மதிப்பீடு
1. நாட்டுப்புறக் கலைகளின் பெயர்களை எழுதுக.
(சிலம்பாட்டம், கரகாட்டம்,
பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம்)
விடை : கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை
2. விழாக்களை வகைப்படுத்துக.
(தீபாவளி, சுதந்திர தின
விழா, ஓணம், மகாவீரர் ஜெயந்தி, குடியரசு தினம், பொங்கல், காந்தி
ஜெயந்தி, பக்ரீத்)
விடை :
மத விழாக்கள்: தீபாவளி, ஓணம், பொங்கல், பக்ரீத்
தேசிய விழாக்கள்: சுதந்திர தின விழா, மகாவீரர் ஜெயந்தி,
குடியரசு தினம்,
காந்தி ஜெயந்தி
3. நான் யார்? (குழாய் செப்பனிடுபவர், இராணுவ வீரர், நடத்துநர், தச்சர், தையற்காரர்)
அ.
மரக்கட்டைகளில் இருந்து பொருள்களைச் செய்பவர். தச்சர்
ஆ.
ஒழுகும் குழாயைச் சரி செய்பவர். குழாய் செப்பனிடுபவர்
இ.
உங்களுக்கான ஆடைகளைத் தைப்பவர். தையற்காரர்
ஈ.
தேசத்தைக் காப்பவர். இராணுவ வீரர்
உ.
பேருந்தில் பயணச்சீட்டு வழங்குபவர். நடத்துநர்
4. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ.
நமது நண்பர்களைச் சந்திக்கவும் வாழ்த்தவும் விழாக்கள் உதவுகின்றன. (வாழ்த்தவும் / விடைபெறவும்)
ஆ.
நாம் சிறப்பு உணவு வகைகளை உண்ணும்போது மகிழ்ச்சி அடைகிறோம். (வருத்தம் /
மகிழ்ச்சி)
இ.
நாம் தேசியக் கொடியினை தேசிய விழாக்களின்போது ஏற்றுவோம். (தேசிய /
மத)
ஈ.
ஈஸ்டர் கொண்டாடப்படும் நாள் ஞாயிறு. ( திங்கள் /
ஞாயிறு )
உ.
நாம் ஒரு நாணயத்தை நீருக்குள் போட்டால் அது மூழ்கும். (மூழ்கும்
/ மிதக்கும்)
ஊ.
தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள் பிப்ரவரி 28. (பிப்ரவரி 24 / பிப்ரவரி 28)
தன்
மதிப்பீடு
• மத, தேசிய
விழாக்களுக்கு இடையேயான வேறுபாடுகளை நான் அறிவேன்.
• நமது நாட்டுப்புறக் கலைகளை நான் போற்றுவேன்.
• நமது சமுதாய நண்பர்களை நான் மதிக்கிறேன்.
• அறிவியல் நம் அன்றாட வாழ்வுடன் தொடர்புடையது
என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.