பருவம்-2 அலகு 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - ஐம்பூதங்கள் | 2nd EVS Environmental Science : Term 2 Unit 4 : The Pancha Bhutas

   Posted On :  12.05.2022 08:03 pm

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-2 அலகு 4 : ஐம்பூதங்கள்

ஐம்பூதங்கள்

நீங்கள் கற்க இருப்பவை * நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

அலகு 4


ஐம்பூதங்கள்


நீங்கள் கற்க இருப்பவை

* நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்


 

பெரிய ஆலமரத்தின் அருகே ஒரே சத்தம் கேட்டது. அங்கு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (ஐம்பூதங்கள்) தங்களுக்குள் யார் சிறந்தவர் எனச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. நாமும் அதை கவனிப்போமா!

 

நிலம்

"உயிரினங்களுக்கு இருப்பிடமாகவும் தாவரங்கள் வளர்வதற்கும் நான் இடம் தருகிறேன். எனவேநானே சிறந்தவன்".

 

நீர்

"இல்லைஇல்லை! பூமியின் பெரும்பாலான பகுதியில் நானே நிரம்பியுள்ளேன். உயிர்கள் வாழ நானும் முக்கியப் பங்காற்றுகிறேன். நானின்றி உயிர்கள் வாழவே இயலாது. ஆகவேநானே சிறந்தவன்".

 

நெருப்பு

"இல்லை! தாவரங்களும் மனிதர்களும் என்னைப் பயன்படுத்தியே உணவு தயாரிக்கின்றனர். அது மட்டுமின்றிவாழ்வதற்குத் தேவையான வெப்பத்தையும் ஒளியையும் நானே அளிக்கிறேன். ஆகையால் நானே சிறந்தவன்".

 

காற்று

"நான் தான் காற்று. அனைத்து உயிரினங்களும் என்னைச் சுவாசிப்பதால் மட்டுமே உயிர் வாழ்கின்றன. அதனால் நானே சிறந்தவன்".

 

ஆகாயம்

"நானே நீங்கள் அனைவரும் இருப்பதற்கான இடத்தை அளிக்கிறேன். இந்த பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற அனைத்தும் என்னுள் அடக்கம். எனவே, நானே மிகச் சிறந்தவன்". 

ஐம்பூதங்களின் சீரிய வாக்குவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ஆலமரம் அவர்கள் ஐவரையும் பார்த்துஇவ்வுலகில் உங்களில் ஒருவர் இல்லை என்றாலும் பிறர் வாழ இயலாது. எனவே உங்களில் ஒருவரும் மற்றவரை விட உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. எனவே நீங்கள் அனைவரும் முக்கியமானவர்களே என்றது.

ஐம்பூதங்களும் இப்பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் தாங்கள் அனைவரும் அவசியம் என்பதை அப்போது தான் உணர்ந்தன. எனவே தங்களுக்குள் போட்டியிடுவதை நிறுத்திக் கொண்டு அன்புடன் உரையாடி மகிழ்ந்தன.

மண்பாண்டம் செய்பவர் பானை செய்யும் பாங்கினை உற்றுநோக்கி கோடிட்ட இடங்களை நிரப்புக. (நீர், களிமண், காற்று, நெருப்பு, சக்கரம்)
 

நிலம்


மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் போன்ற அனைத்திற்கும் நிலம் வாழிடமாக விளங்குகிறது. நமக்குத் தேவையான உணவை நாம் நிலத்தில் பயிரிடுகிறோம். நாம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு மட்டுமின்றி, விளையாடவும் நிலத்தையே பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பல்வேறு விதமான பொருள்களை உருவாக்கத் தேவையானவற்றை நமக்கு நிலமே தருகின்றது. 

நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்நீர்


பூமியின் பெரும்பான்மையான பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ நீர் அவசியம். நாம் மழையிலிருந்து நீரைப் பெறுகிறோம். நாம் பருகவும், சமைக்கவும், பொருள்களைத் தூய்மைப்படுத்தவும், குளிக்கவும், நீந்தவும், பயிர்களை வளர்க்கவும் நீரைப் பயன்படுத்துகிறோம். உங்களுக்கு நீந்தத் தெரியுமா? இல்லையெனில், பெரியவர்களின் உதவியுடன் கற்றுக் கொள்ளுங்கள்.

பல்வேறு வகையான தாவரங்களும் விலங்குகளும் நீரில் வாழ்கின்றன. 

சிந்தனைப் பகுதி

ஒவ்வொரு துளி நீரும் விலை மதிப்பற்றது.அதனை வீணாக்காதீர்.

அதிக மழை பெறுவதற்கு எது சிறந்த வழிஉரிய கட்டத்தில் () குறியிட்டுக் காட்டுக.கொடுக்கப்பட்டுள்ள சொற்களைப் பயன்படுத்தி கோடிட்ட இடங்களை நிரப்புக.

(சாலை, இருப்புப்பாதை, வயல்வெளி, விளையாட்டுத் திடல்)


 


 

காற்று

 

உற்றுநோக்கிக் கலந்துரையாடுவோமா!

இந்த படங்களில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்?நம்மைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் காற்று உள்ளது. நம்மால் காற்றைப் பார்க்க இயலாது. ஏனெனில்அதற்கு குறிப்பிட்ட வடிவமோ வண்ணமோ கிடையாது. ஆனால் காற்றை நம்மால் உணர முடியும். காற்று இல்லையெனில் உயிருள்ளவைகளால் சுவாசிக்க இயலாது.

காற்று இருப்பதாலேயே நம்மால் பொருள்களின் மணத்தை நுகரவும் ஒலிகளைக் கேட்கவும் முடிகிறது.பறவைகளும் வானூர்தியும் காற்றில் நகர்கின்றன.

 காற்று நகரக் கூடியது. இது நமக்குப் பல வழிகளில் பயன்படுகிறது.ஈரத்துணிகளை உலர்த்துதல்

காற்றாலைகளில் இருந்து மின்சாரம் பெறுதல்

 

உங்களுக்குத் தெரியுமா?

புயல்சூறாவளியின் போது காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். சூறாவளி கட்டடங்கள்மரங்கள் போன்றவற்றைச் சேதப்படுத்தும்.ஆசிரியருக்கான குறிப்பு: இயற்கைப் பேரிடர்களின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடவும்.

 

நெருப்பு

 

ஆதிமனிதர்கள் நெருப்பைக் கண்டறிந்து அதன் வெப்பத்தையும் ஒளியையும் தங்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்தினர்.

கற்களை உரசி நெருப்பை உருவாக்குதல்

தீப்பந்தங்கள் மூலம் ஒளியைப் பெறுதல்

இக்காலத்திலும் பல்வேறு பொருள்களின் தயாரிப்பில் நாம் நெருப்பைப் பயன்படுத்துகிறோம்.

 

ஆகாயம்


ஆகாயம் என்பதனுள் அனைத்தும் அடங்கும்.நெருப்பு பயன்படுத்தப்படும் இடங்களை () குறியிட்டுக் காட்டுக. 

 

Tags : Term 2 Chapter 4 | 2nd EVS Environmental Science பருவம்-2 அலகு 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்.
2nd EVS Environmental Science : Term 2 Unit 4 : The Pancha Bhutas : The Pancha Bhutas Term 2 Chapter 4 | 2nd EVS Environmental Science in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-2 அலகு 4 : ஐம்பூதங்கள் : ஐம்பூதங்கள் - பருவம்-2 அலகு 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-2 அலகு 4 : ஐம்பூதங்கள்