வடிவியல் | பருவம் 3 அலகு 1 | 1 ஆம் வகுப்பு கணக்கு - உருளுதல் மற்றும் சறுக்குதல் | 1st Maths : Term 3 Unit 1 : Geometry
உருளுதல் மற்றும் சறுக்குதல்
கலைச்சொற்கள்
உருளுதல், சறுக்குதல்
பயணம் செய்வோம்

மே! மே! நாம விளையாடுவோமா?
சரி... நண்பா! நாம விளையாடுவோம்.
ஐ! இது உருளுது.
ஓ... இது உருள மாட்டேங்குதே!
இது நல்லா உருளுதே.. நீ முயற்சி செய்து பாரேன்.
அப்போ... நீ இதை முயற்சி செய்
ஆமாம் ஆமாம்.. இது நல்லாவே உருளுது.
ஆனா.. இது ஏன் உருள மாட்டேங்குது?"
ஆசிரியருக்கான குறிப்பு
மேலே உள்ள படங்களிலிருந்து வளைவான பொருள்கள் மட்டுமே உருளும் தன்மை வாய்ந்தவை என்பதை ஆசிரியர் உணர்த்தலாம்.
கற்றல்
சறுக்குப் பலகையில் வளைவான பொருள்கள் உருளும்.
சறுக்குப் பலகையில் தட்டையான பொருள்கள் சறுக்கும்.

வளைவு மற்றும் தட்டை ஆகிய தன்மைகளைக் கொண்ட பொருள்கள் சறுக்குப் பலகையில் அதன் தன்மைக்கேற்ப உருளவோ அல்லது சறுக்கவோ செய்யும்.

செயல்பாடு

அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் உருளுமா, சறுக்குமா என்பதைச் சறுக்குப் பலகை மூலம் சோதனை செய்து,
பொருத்தமான இடத்தில்
வரைக.

நீயும் கணித மேதைதான்

எந்தப் பெட்டியை நகர்த்துவது எளிமையானது? ஏன்?
செய்து பார்
உருளும் தன்மை வாய்ந்த பொருள்களை மட்டும் வட்டமிடுக.

சறுக்கும் தன்மை வாய்ந்த பொருள்களை மட்டும் வட்டமிடுக.

உருளுதல், சறுக்குதல் ஆகிய இரண்டு தன்மைகளையும் கொண்ட பொருள்களை (✔) செய்க.
