வடிவியல் | பருவம் 1 அலகு 1 | 1 ஆம் வகுப்பு கணக்கு - வடிவங்கள் | 1st Maths : Term 1 Unit 1 : Geometry
வடிவங்கள்
பயணம் செய்வோம்
கலைச்சொற்கள்
வளைவு, தட்டை, மூலை, விளிம்பு
மேற்காணும் பொருட்கள் போன்ற சிலவற்றை மேசையின் மீது பார்வைக்கு வைத்து, அவற்றினை மாணவர்கள் அடையாளம் காண ஆசிரியர் உதவுதல். மேலும், ஒவ்வொரு பொருளையும் தொட்டுப் பார்த்து, அப்பொருளின் பெயரைக் குறிப்பிட்டு அது வளைவானதா? தட்டையானதா? என மாணவர்கள் கூற ஆசிரியர் உதவுதல்.
கற்றல்
பந்து வளைவானது
புத்தகம் தட்டையானது
எழுது பலகை தட்டையானது
சாத்துக்குடி வளைவானது
செய்து பார்
வளைவான மற்றும் தட்டையான பொருட்களுக்கேற்பக் கீழ்க்காணும் பொருட்களை (✔) செய்க.
மூலை, விளிம்பு
கற்றல்
செய்து பார்
மூலைகளுக்கு வண்ணமிடுக
நீயும் கணித மேதைதான்
வளைவான பொருட்களுக்கு மூலை உண்டா? இல்லை
வளைவானதும் தட்டையானதுமான பொருட்கள் உண்டா? உண்டு