பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் | பருவம் 1 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - புவிக்கோளங்கள் (Spheres of the Earth) | 6th Social Science : Geography : Term 1 Unit 1 : The Universe and Solar System
புவிக்கோளங்கள் (Spheres of the Earth)
உயிரினங்கள் வாழத் தகுதியான கோள் புவியாகும். புவியில் காணப்படும்
மூன்று தொகுதிகள் பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகும். இத்தொகுதிகளுடன்
தகுந்த காலநிலையும் நிலவுவதால் உயிரினங்கள் வாழத் தகுதியுள்ள இடமாக புவி மாறியுள்ளது.
உயிரினங்கள் வாழக்கூடிய குறுகிய மண்டலம் 'உயிர்க்கோளம்' என்று அழைக்கப்படுகிறது.
பாறைக்கோளம்
(Lithosphere)
பாறை என்ற பொருள்படும் 'லித்தோஸ் (Lithos) என்ற கிரேக்கப் பதத்தில்
இருந்து பாறைக்கோளம் (Lithosphere) என்ற சொல் பெறப்பட்டது. புவியின் மேற்பரப்பில் காணப்படும்
பாறைகள் மற்றும் மண் அடுக்கைப் பாறைக்கோளம் என்று கூறுகிறோம். இந்த நிலப்பரப்பில் உயிரினங்கள்
காணப்படுகின்றன.
நீர்க்கோளம்
(Hydrosphere)
'ஹைட்ரோ' (Hydro) என்ற கிரேக்கச் சொல்லிருந்து பெறப்பட்ட சொல்லே
ஹைட்ரோஸ்பியர் (Hydrosphere) ஆகும். இதற்கு நீர்க்கோளம் என்று பெயர். இது பெருங்கடல்கள்,
கடல்கள், ஆறுகள், ஏரிகள், மலையுச்சிகளில் காணப்படும் பனிக் கவிகைகள், வளிமண்டலத்தில்
காணப்படும் நீராவி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
வளிமண்டலம்
(Atmosphere)
'அட்மோ' (Atmo) என்ற கிரேக்கப் பதத்திற்கு வளி அல்லது காற்று
என்று பொருள். புவியைச் சுற்றி காணப்படும் பல்வேறு காற்றுத் தொகுதி வளிமண்டலம் எனப்படுகிறது.
வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்களில் நைட்ரஜன் (78%) மற்றும் ஆக்ஸிஜன் (21%) முதன்மையான
வாயுக்களாகும். கார்பன்-டை- ஆக்ஸைடு, ஆர்கான், ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் ஓசோன் வாயுக்கள்
குறைந்த அளவில் காணப்படுகின்றன.
உயிர்க்கோளம்
(Biosphere)
பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய
உயிரினங்கள் வாழக்கூடிய ஒரு பகுதி 'உயிர்க்கோளம் ' எனப்படுகிறது. 'பயோ' என்ற கிரேக்கச்
சொல்லிற்கு 'உயிர்' என்று பொருள் உயிர்க்கோளம் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மண்டலமும் ஒப்பற்ற காலநிலை, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட பகுதியாக
இம்மண்டலங்கள் சூழல்\ உள்ளது. மண்டலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா
மன்னார்
வளைகுடா உயிர்க்கோள் பெட்டகம் இந்திய பெருங்கடலில் 10,500 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.