Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | மீள்பார்வை, கலைச்சொற்கள்

பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் | பருவம் 1 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 6th Social Science : Geography : Term 1 Unit 1 : The Universe and Solar System

   Posted On :  27.08.2023 08:00 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 1 அலகு 1 : பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

மீள்பார்வை, கலைச்சொற்கள்

சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரு வெடிப்பின் போது பேரண்ட உருவானது.

மீள்பார்வை

சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரு வெடிப்பின் போது பேரண்ட உருவானது.

பேரண்டத்தில் எண்ணிலடங்கா விண்மீன்திரள் மண்டலங்கள் காணப்படுகின்றன.

  நமது சூரியக் குடும்பம் பால்வெளி விண்மீன் திரள் மண்டலத்தில் காணப்படுகிறது.

சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் சூரியன் மட்டும் 99.8 சதவிகிதம் உள்ளது.

வெள்ளி மற்றும் யுரேனஸ் கோள்களைத் தவிர பிற கோள்கள் அனைத்தும் சூரியனை எதி கடிகாரச் சுற்றில் சுற்றி வருகின்றன.

சிறுகோள்கள் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கிடையே காணப்படுகின்றன.

புவி சுழலுவதன் காரணமாக இரவு பகல் ஏற்படுகிறது.

புவி சூரியனைச் சுற்றி வருவதன் காரணமாக பருவ காலங்கள் ஏற்படுகின்றன.

கோடைக்காலக்கதிர் திருப்பம் வட அரைக்கோளத்தில் நீண்டபகல்பொழுதைக் கொண்டிருக்கும்

புவியில் காணப்படும் நிலம், நீர் மற்றும் காற்று ஆகியவற்றோடு தகுந்த காலநிலையும் புவியி உயிரினங்கள் வாழக் காரணமாகின்றன.

 

கலைச்சொற்கள்

1 விண்மீன்திரள் - விண்மீன் கூட்டம்

2 சிறுகோள்கள் -  செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கோள்களுக்கிடையே காணப்படும் பாறைத்துகள்கள்.

3 விண்கல் - சூரியக் குடும்பத்தில் காணப்படும் சிறுகற்கள் மற்றும் உலோகப் பாறைகளின் எஞ்சியுள்ள விண்பொருள்கள்.

4 வால் விண்மீன்கள் - பனிக்கட்டி தூசு மற்றும் சிறிய பாறைத்துகள்களால் ஆன விண்பொருள்கள்.

5 துணைக்கோள்கள் - கோள்களைச் சுற்றி வரும் விண்பொருள்கள்.

6 சுற்றுப்பாதை - கோள்கள் சூரியனைச் சுற்றிவரும் பாதை.

7 புவியின் அச்சு - புவியின் வட துருவத்திலிருந்து புவி மையத்தின் வழியாக தென் துருவம் வரை செல்லக் கூடிய ஒரு கற்பனைக் கோடு.

8 சுழலுதல் - புவி தன்னைத்தானே தன் அச்சில் சுழலுதல்.

9 சுற்றுதல் -  புவி தன் நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும் நகர்வு.

10 சமப்பகலிரவு - இரவும் பகலும் சமமாகக் காணப்படும் நிகழ்வு.

11 கதிர் திருப்பம் - கடகரேகை மற்றும் மகர ரேகை மீது சூரியனின் செங்குத்துக் கதிர்கள் விழும் நிகழ்வு.

12 தரை ஊர்தி - விண்பொருள்களை ஆராய்வதற்காக அதன் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லும் ஊர்தி.

13 சுற்றி வரும் கலங்கள் - விண்பொருள்களின் மீது இறங்காமல் அதனைச் சுற்றி வரும் கலம்


இணைய வளங்கள்

1.    www.nationalgeographic.org/encylopedia/ seasons

2.    www.slideshare.net

3.    www.britannica.com

4.    www.geography4kids.com

5.    https://sangamtamilliterature.wordpress.com/ வான _இயல



இணையச் செயல்பாடு

பிரபஞ்சமும் சூரியகுடும்பமும்

உலகத்தைச் சுற்றி வருவோமா.


படிநிலைகள்:

இணைய உலாவியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலியை தட்டச்சு செய்யவும் அல்லது துரித துலங்கல் குறியீட்டை ஸ்கேன் செய்யவும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள செல்பேசி செயலியை தரவிறக்கம் செய்து நிலைநிறுத்தவும்.

வலது மேல் பக்கத்தில் உள்ள தேடு பொறியில் மாநிலத்தின் பெயரை தட்டச்சு செய்து தேடி அதன் தனிது த்தன்மைகளை ஆராய்ந்து அறியவும்.

அந்த பக்கத்தை துலாவி "Explore in 360° " என்ற தேர்வினை பயன்படுத்தி புகழ்பெற்ற கட்டிடக்கலைகளை 360° கோணத்தில் கண்டுகளிக்கலாம்.

உங்களுக்கு தேவையான நிலத்தோற்றங்களை தேடுபொறியில் தேடி ஆராயவும்.


உரலி

https://earth.google.com/web/

Tags : The Universe and Solar System | Term 1 Unit 1 | Geography | 6th Social Science பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் | பருவம் 1 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Geography : Term 1 Unit 1 : The Universe and Solar System : Wrap Up, Glossary The Universe and Solar System | Term 1 Unit 1 | Geography | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 1 அலகு 1 : பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் : மீள்பார்வை, கலைச்சொற்கள் - பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் | பருவம் 1 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 1 அலகு 1 : பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்