வடிவியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 3 ஆம் வகுப்பு கணக்கு - புதிர்வெட்டுக் கட்டங்கள் | 3rd Maths : Term 3 Unit 1 : Geometry
புதிர்வெட்டுக் கட்டங்கள்
புதிர்வெட்டுக் கட்டங்களைப் பற்றி நினைவு கூர்வோம்.
ஒரு சதுரத்திலிருந்து எடுக்கப்பட்ட 7 வடிவத் துண்டுகளைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட வடிவத்தை ஒத்து அடுக்கக்கூடிய பாரம்பரிய சீனப் புதிராகும். இந்த 7 துண்டுகளைக் கொண்டு விலங்குகளின் உருவங்கள், மனித உருவங்கள் மற்றும் பல வடிவங்களை உருவாக்கலாம்.
புதிர்வெட்டுக் கட்ட ஏவுகணை புதிர்வெட்டுக் கட்ட நடன மங்கை புதிர்வெட்டுக் கட்ட குதிரை
புதிர்வெட்டுக் கட்ட மாதிரிப் படத்தில் உள்ளது போல் வண்ணமிட்டும் எண்களை எழுதியும் கொடுக்கப்பட்ட வடிவத்திலுள்ள புதிர்வெட்டுக் கட்டத் துண்டுகளை அடையாளம் காணுங்கள்.
புதிர்வெட்டுக் கட்ட வீடு, புதிர்வெட்டுக் கட்டப் படகு, புதிர்வெட்டுக் கட்ட அன்னம்
செயல்பாடு
பெற்றோரோ, ஆசிரியரோ அல்லது பெரியவர்களின் உதவியுடனோ புதிர்வெட்டுக் கட்டத் துண்டுகளைச் சேகரித்து அல்லது தயாரித்துக் குறிப்புகளுக்கேற்ற வடிவங்களை உருவாக்குக.
அ. முக்கோணங்களை மட்டும் பயன்படுத்தவும்
ஆ. 1, 2, 3 மற்றும் 5 ஆகிய துண்டுகளைப் பயன்படுத்தவும்
இ. (i) முயல்
(ii) தொலைபேசி
(iii) உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவங்கள்.