பருவம் 1 இயல் 3 | 3 ஆம் வகுப்பு தமிழ் - தனித்திறமை | 3rd Tamil : Term 1 Chapter 3 : Thani thiramai
3. தனித்திறமை
காட்டின் ராஜாவான சிங்கம் சில நாள்கள் வெளியூர் சென்றபோது புலிக்குத் தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றது. புலியும் சில நாள்கள் ராஜாவாகப் பதவி ஏற்று கொண்டது. படைத்தளபதியாகச் சிங்கக் குட்டி பொறுப்பேற்றது.
சிங்கக் குட்டிதான் நமது படைத்தளபதி.
சிங்கக்குட்டியே..... பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
நன்றி மன்னா ! உடனே பதவியை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆந்தையாரே நீங்கள் தாம் இரவுக்காவல் அமைச்சர்.
சரிங்க அரசே! நான் என் பதவியை ஏற்றுக் கொள்கிறேன்.
கழுதையாரே ....... உமக்கு உரிய ...... பதவி
ராஜாவே..! ராஜாவே..! இந்தக் கழுதை ஒரு முட்டாள். கழுதையால் எந்த ஒரு பயனும் இல்லை.
அப்படியா....!
இதே போல் முயல், ஆமை இரண்டும் எதற்கும் பயன்படாது.
ஆமை ஒரு சோம்பேறி. அது எப்போதும் மிக மெதுவாகச் செல்லும். முயல் எதைப் பார்த்தாலும் மிரண்டு , மிரண்டு ஓடும்.
கரடியாரே, வாயை மூடும். ஆமை பொறுமையாக இருந்து காரியத்தைச் சாதிக்கும். அதனால் சமையல் வேலை செய்யட்டும்.
முயல் அதிவேகமாக ஓடும் எனவே, தேவையான பொருள்களைச் சேகரித்து, விரைவாகக் கொண்டு வந்து சேர்க்கும் வேலையைச் செய்யட்டும்.
கழுதை, பகைவர்கள் வரும்போது தனது உரத்த குரலில் எச்சரிக்கும் பணியைக் கவனிக்கட்டும், என்று கூறினார், புலி ராஜா.
"யாரையும் குறைவாக எடைபோடக் கூடாது. அவர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் காணவேண்டும்".
நீங்க சொல்வது சரிதான் அரசே, இப்போது நான் தெரிந்து கொண்டேன்.
பண்புகளை வளர்த்தல்
நீதிக் கருத்து:
ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு. அதை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்பப் பயன்படுத்த வேண்டும்.
மொழியோடு விளையாடு
.
மாணவர்களை இரு குழுக்களாகப் பிரிக்கவேண்டும் முதல் குழுவினருக்கு விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர் எழுதப்பட்ட அட்டையினை ஒவ்வொரு மாணவனுக்கும் ஒன்று வீதம் கொடுக்க வேண்டும். ஆசிரியர் ஒலிப்பான் மூலம் ஒலி எழுப்பியவுடன் முதல் குழுவில் இருந்து ஒரு மாணவன் தனது அட்டையில் எழுதப்பட்டு உள்ள விலங்கு (அ) பறவை போல நடித்து (அ) ஒலி எழுப்பிக் காட்ட வேண்டும். நடிக்கும் விதத்தை (அ) ஒலியைக் கேட்டு அது என்ன விலங்கு? (அ) பறவை? என்பதனை இரண்டாவது குழுவினர் கண்டறிந்து கூறவேண்டும். இவ்வாறே அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
எழுத்துகளின் வகைகள் அறிவோமா?
குழந்தைகளே! நமக்கெல்லாம் பெயர் இருக்கிறது அல்லவா... அதுபோல எழுத்துகளுக்கும் பெயர் வைக்கலாமா..
தமிழில் உள்ள உயிரெழுத்துகள் மொத்தம் - 12
இந்த ஐந்து எழுத்துகளும் ஓசையில் குறுகி ஒலிக்கின்றன எனவே இவற்றிற்குக் குறில் அல்லது குற்றெழுத்துகள் என்று பெயரிடுவோம்.
இந்த ஏழு எழுத்துகளும் ஓசையில் நீண்டு ஒலிக்கின்றன இவற்றிற்கு நெடில் அல்லது நெட்டெழுத்துகள் என்று பெயரிடுவோம்..
இப்பொழுது மெய்யெழுத்துகளுக்குப் பெயரிடுவோமா...
தமிழில் உள்ள மெய்யெழுத்துகள் மொத்தம் - 18.
இவை ஒலிக்கும் தன்மையை வைத்து மூன்று வகைகளாகப் பிரித்துப் பெயரிடுவோம்.
வல்லினம்
யானைகள் எப்படி வலிமையாக இருக்கின்றனவோ அப்படியே க், ச், ட், த், ப், ற் - என்ற எழுத்துகளும் வலிய ஓசை உடையவை, எனவே இவற்றுக்கு வல்லினம் என்று பெயரிடுவோம்.
மெல்லினம்
முயல்கள் எப்படி மென்மையாக இருக்கின்றனவோ அப்படியே ங், ஞ், ண், ந், ம், ன் - என்ற எழுத்துகளும் மெல்லிய ஓசை உடையவை. எனவே இவற்றுக்கு மெல்லினம் என்று பெயரிடுவோம்.
இடையினம்
மான்கள் யானையைப் போன்று வலிமையாகவும் இல்லை, முயலைப் போன்று மென்மையாகவும் இல்லை, இடைப்பட்ட நிலையில் இருக்கின்றன.
அது போல ய், ர், ல், வ், ழ், ள் - என்ற எழுத்துகளும், வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இடைப்பட்ட ஓசை உடையதால் இவற்றுக்கு இடையினம் என்று பெயரிடுவோம்.
ஃ என்பது ஆய்த எழுத்து அல்லது தனிநிலை எனப்படும். எழுத்துகளின் பெயர்கள் இனிமையாக இருக்கின்றன அப்படித்தானே.
உங்கள் பெயரிலும் உங்கள் நண்பர்களின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள மெய்யெழுத்துக்களை வட்டமிட்டுக் காட்டுக