Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்

இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam

   Posted On :  16.07.2023 10:48 pm

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்

வாழ்வியல்: திருக்குறள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : வாழ்வியல்: திருக்குறள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

வாழ்வியல்

இயல் எட்டு

திருக்குறள்


 

படைச்செருக்கு

1. கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.*

பொருள்: காட்டுமுயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும். (பெரிய முயற்சியே பெருமை தரும்.)

அணி: பிறிதுமொழிதல் அணி

 

2. பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்

ஊராண்மை மற்றுஅதன் எஃகு.

பொருள்: பகைவரை எதிர்த்து நிற்கும் வீரத்தை ஆண்மை என்று கூறுவர். பகைவருக்கும் துன்பம் வரும்போது, உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

 

நட்பு

3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு*

பொருள்: நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோலப் பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.

அணி: உவமை அணி

 

4. நகுதல் பொருட்டுஅண்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தல் பொருட்டு.

பொருள்: நட்பு, சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியது அன்று; நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.

 

நட்பு ஆராய்தல்

5. ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும்.

பொருள்: மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பாராமல் ஒருவருடன் கொண்ட நட்பு தாம் சாகும் அளவுக்குத் துன்பம் தரும்.

 

6. கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.

பொருள்: நமக்கு வரும் துன்பத்தினாலும் ஒரு நன்மை உண்டு. அத்துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாகும்.

 

மானம்

7. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு.

பொருள்: செல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும். வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும்.

 

8. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.

பொருள்: மலையளவு பெருமை உடையவராக இருந்தாலும் குன்றிமணியளவு தவறு செய்தால் அவரது பெருமை அழிந்துவிடும்.

 

பண்புடைமை

9. பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.*

பொருள்: பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால்தான் இவ்வுலகம் இன்னும் இயங்குகிறது; இல்லாவிட்டால் மண்ணுக்குள் புதைந்து அழிந்திருக்கும்.

 

10. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலம்தீமை யால்திரிந்து அற்று,

பொருள்: தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். அதுபோல நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும்.

அணி: உவமையணி

Tags : Chapter 8 | 8th Tamil இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ்.
8th Tamil : Chapter 8 : Arathal varuvathe inbam : Valviyal: Thirukkural Chapter 8 | 8th Tamil in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் : வாழ்வியல்: திருக்குறள் - இயல் 8 | 8 ஆம் வகுப்பு தமிழ் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம்