தமிழகத்தில் வேளாண்மை | பொருளியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Economics: Tamil Nadu Agriculture

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 4 : தமிழகத்தில் வேளாண்மை

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : தமிழகத்தில் வேளாண்மை : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி

V. விரிவான விடையளி.


1. தமிழகத்தின் நீர் ஆதாரம் பற்றி சிறு குறிப்பு வரைக.

விடை:

தமிழகத்தில் வற்றாத நதிகள் இல்லை. எனவே தமிழ்நாடு நீர் ஆதாரத்திற்கு தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவக்காற்றையே சார்ந்திருக்கிறது.

தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்குப் பருவக்காற்று மழையாகும்.

வடகிழக்குப் பருவமழைநீரை நீர்த் தேக்கங்களிலும், கண்மாய்கள், ஏரிகளிலும் தேக்கி வேளாண்மையை மேற்கொள்கின்றனர். வேளாண்மைக்கான நீரை வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் ஆகியவை வழங்குகின்றன.

தமிழகத்தில் லட்சக்கணக்கான திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன.

தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது. ஆனால் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதில் பல இன்னல்களும் ஏற்படுகின்றன.

 

2. வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

விடை:

தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது. ஆனால் நிலத்தடி நீரை வேளாண்மைக்குப் பயன்படுத்துவது பல இன்னல்களையும் உருவாக்க வல்லது.

நிலத்தடிக்குச் செல்லும் நீரின் அளவை விட நிலத்திலிருந்து எடுக்கும் நீரின் அளவு கூடப் பிரச்சனை ஏற்படும்

அதாவது நீர் மட்டம் கீழே செல்லும். இதனால் நீர் முற்றிலும் வற்றிப் போகலாம் அல்லது பாசனத்திற்கு உதவாத நீராக மாறிவிடலாம்.

தமிழகத்தில் 139 ஒன்றியங்கள் அளவுக்கதிகமாக நீரைப் பயன்படுத்துவதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

 

3. வேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க.

விடை:

தமிழகத்தில் வற்றாத நதிகள் இல்லை. எனவே தமிழ்நாடு நீர் ஆதாரத்திற்கு தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவக்காற்றையே சார்ந்திருக்கிறது.

தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்குப் பருவக்காற்று மழையாகும்.

இப்பருவமழையின் நீரை நீர்த்தேக்கங்கள், கண்மாய்கள் மற்றும் ஏரிகளில் தேக்கி வேளாண்மையை மேற்கொள்கின்றனர்.

இந்நீர் வாய்க்கால்கள் மூலமாக நிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2239 வாய்க்கால்கள் உள்ளன.

ஏரிகளிலிருந்து பாசன வசதி பெறும் நிலத்தின் பரப்பளவு மிகவும் குறைவானதாகும்.

தமிழகத்தில் ஆழ்த்துளைக் கிணறுகள் மற்றும் திறந்த வெளிக் கிணறுகளும் உள்ளன.

தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.


VI. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. கிராமம் அல்லது நீங்கள் வசிக்கும் பகுதியில் விளையும் உணவுப் பயிர்களையும், உணவல்லாத பயிர்களையும் ஆராய்க.

2. தஞ்சாவூர் எந்தப் பயிருக்குப் பெயர் பெற்றது? ஏன்? ஆராய்க.

3. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் மாட்டத்தின் நெல் விளைச்சல் குறித்துத் தரவுகளை சேகரிக்கவும்.

Tags : Tamil Nadu Agriculture | Economics | Social Science தமிழகத்தில் வேளாண்மை | பொருளியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Economics: Tamil Nadu Agriculture : Answer in Detail Tamil Nadu Agriculture | Economics | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 4 : தமிழகத்தில் வேளாண்மை : விரிவான விடையளி - தமிழகத்தில் வேளாண்மை | பொருளியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 4 : தமிழகத்தில் வேளாண்மை