இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Economics: Migration

   Posted On :  11.09.2023 10:12 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல்

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : இடம்பெயர்தல் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி

V. விரிவான விடையளி


1. இடப்பெயர்வு கொள்கையின் நோக்கங்கள் யாவை?

விடை:

1. இடம் பெயர்தலின் அளவைக் குறைத்தல் :

கிராமப் புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினால் கிராமப் புறங்களில் அதிக அளவிலான இடப் பெயர்தல் காணப்படுகிறது.

எனவே கிராமப்புறங்களின் மீது தலையீட்டின் கவனம் இருத்தல் வேண்டும்.

ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையைக் குறைக்கும் விதமாக அதிக அளவிலான கிராம வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

2. இடம் பெயர்ந்து நகர்தலைத் திசை திருப்புதல் :

பெருநகரங்களை நோக்கி குவியும் இடப் பெயர்தலை திசை மாற்றி அமைக்கும் கொள்கைகள் விரும்பத்தக்கவைகளாகும்.

குடிப் பெயர்தலால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு நகர்புறங்களை பரவலாக்கும் வடிவமைப்புகள் பொருத்தமானதாக உத்திகளாக அமைகின்றன.

 

2. இடப்பெயர்வின் முறைகளைப் பற்றி கலந்துரையாடுக.

விடை:

இந்தியாவில் மக்களின் இடம் பெயர்தலின் முறைகள் சிக்கலான பலதரப்பட்ட நகர்வுகளை உள்ளடக்கியதாகும்.

கிராமப்புறத்தில் இருந்து கிராமத்திற்கு, கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி, நகர் புறத்திலிருந்து கிராமம் நோக்கி, நகர் புறத்திலிருந்து நகரம் நோக்கிய இடப்பெயர்வுகள்.

குறுகிய, நடுத்தரமான மற்றும் நீண்ட தூர இடப்பெயர்தல் நகர்வுகள்.

நீண்டகால நிரந்தர இடப்பெயர்வு மற்றும் குறுகிய கால சுழற்சி முறையிலான நகர்வுகள்

ஒவ்வொரு இடப்பெயர்வு நகர்வும் வெவ்வேறு வகையான வகுப்பு சார்ந்த குடியேறுபவர்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடப்பெயர்வுக்கும் சொந்தக் காரணங்கள் இருக்கும். இடப்பெயர்தலின் அளவு மற்றும் தன்மை ஆகியவை கீழ்க்கண்டவற்றைச் சார்ந்துள்ளன.

இடப்பெயர்தல் துவங்கும் இடத்தில் மக்கள் அனுபவிக்கும் அழுத்தம் மற்றும் விருப்பங்கள்.

இடப்பெயர்தல் துவங்குமிடத்தில் மக்களின் நகர்வு மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள்.

சேருமிடத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் அவை குறித்த தகவல்கள்.

குடியேற்றச் செலவு.

 

3. தமிழ்நாட்டின் இடப்பெயர்வில் காணப்படும் ஆர்வமுள்ள தகவல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துக.

விடை:

தமிழ்நாட்டின் மொத்த இடப்பெயர்வாளர்களில் 65% பேர் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 35% பேர் நம் நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.

குடியேற்றப்பதிவில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

வெளிநாடுகளில் குடியேறியுள்ளவர்களில் 20%பேர் சிங்கப்பூரிலும், 18% பேர் ஐக்கிய அரபு எமிரேட்டிலும், - 16% பேர் சவுதி அரேபியாவிலும், 13% பேர் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் குடியேறியுள்ளனர்.

மேலும் மலேசியா, குவைத், ஓமன், கத்தார், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் குடியேறியுள்ளனர்.

குடியேறுபவர்களில் 15% பெண்கள் மற்றும் 85% பேர் ஆண்களாவர்

கல்வித் தகுதியைப் பொருத்த வரையில் 7% பேர் கல்வியறிவு அற்றவர்கள், 30% பேர் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், 10% பேர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள், 15% பேர் தொழிற்பயிற்சி பெற்றவர்கள், 11% பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள், 12% தொழிற்கல்வி முடித்தவர்கள் மற்றும் 11% பேர் முதுகலை பட்டதாரிகளும் ஆவார்கள்.

 

4. 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்க.

விடை:

• 7% பேர் கல்வியறிவு அற்றவர்கள்

• 30% பேர் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள்

• 10% பேர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள்

• 15% பேர் தொழிற்பயிற்சி பெற்றவர்கள்

• 11% பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள்

• 12% பேர் தொழிற்கல்வி முடித்தவர்கள்

• 11% பேர் முதுகலை பட்டதாரிகள்

Tags : Migration | Economics | Social Science இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Economics: Migration : Answer in Detail Migration | Economics | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல் : விரிவான விடையளி - இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல்