இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Economics: Migration

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல்

விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : இடம்பெயர்தல் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : விரிவான விடையளி

V. விரிவான விடையளி


1. இடப்பெயர்வு கொள்கையின் நோக்கங்கள் யாவை?

விடை:

1. இடம் பெயர்தலின் அளவைக் குறைத்தல் :

• கிராமப் புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினால் கிராமப் புறங்களில் அதிக அளவிலான இடப் பெயர்தல் காணப்படுகிறது.

• எனவே கிராமப்புறங்களின் மீது தலையீட்டின் கவனம் இருத்தல் வேண்டும்.

• ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையைக் குறைக்கும் விதமாக அதிக அளவிலான கிராம வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

2. இடம் பெயர்ந்து நகர்தலைத் திசை திருப்புதல் :

• பெருநகரங்களை நோக்கி குவியும் இடப் பெயர்தலை திசை மாற்றி அமைக்கும் கொள்கைகள் விரும்பத்தக்கவைகளாகும்.

• குடிப் பெயர்தலால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு நகர்புறங்களை பரவலாக்கும் வடிவமைப்புகள் பொருத்தமானதாக உத்திகளாக அமைகின்றன.

 

2. இடப்பெயர்வின் முறைகளைப் பற்றி கலந்துரையாடுக.

விடை:

இந்தியாவில் மக்களின் இடம் பெயர்தலின் முறைகள் சிக்கலான பலதரப்பட்ட நகர்வுகளை உள்ளடக்கியதாகும்.

• கிராமப்புறத்தில் இருந்து கிராமத்திற்கு, கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறம் நோக்கி, நகர் புறத்திலிருந்து கிராமம் நோக்கி, நகர் புறத்திலிருந்து நகரம் நோக்கிய இடப்பெயர்வுகள்.

• குறுகிய, நடுத்தரமான மற்றும் நீண்ட தூர இடப்பெயர்தல் நகர்வுகள்.

• நீண்டகால நிரந்தர இடப்பெயர்வு மற்றும் குறுகிய கால சுழற்சி முறையிலான நகர்வுகள்

ஒவ்வொரு இடப்பெயர்வு நகர்வும் வெவ்வேறு வகையான வகுப்பு சார்ந்த குடியேறுபவர்களைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடப்பெயர்வுக்கும் சொந்தக் காரணங்கள் இருக்கும். இடப்பெயர்தலின் அளவு மற்றும் தன்மை ஆகியவை கீழ்க்கண்டவற்றைச் சார்ந்துள்ளன.

• இடப்பெயர்தல் துவங்கும் இடத்தில் மக்கள் அனுபவிக்கும் அழுத்தம் மற்றும் விருப்பங்கள்.

• இடப்பெயர்தல் துவங்குமிடத்தில் மக்களின் நகர்வு மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள்.

• சேருமிடத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் அவை குறித்த தகவல்கள்.

• குடியேற்றச் செலவு.

 

3. தமிழ்நாட்டின் இடப்பெயர்வில் காணப்படும் ஆர்வமுள்ள தகவல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துக.

விடை:

• தமிழ்நாட்டின் மொத்த இடப்பெயர்வாளர்களில் 65% பேர் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 35% பேர் நம் நாட்டிற்குள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.

• குடியேற்றப்பதிவில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. கோயம்புத்தூர், இராமநாதபுரம் மற்றும் திருச்சி மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

• வெளிநாடுகளில் குடியேறியுள்ளவர்களில் 20%பேர் சிங்கப்பூரிலும், 18% பேர் ஐக்கிய அரபு எமிரேட்டிலும், - 16% பேர் சவுதி அரேபியாவிலும், 13% பேர் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் குடியேறியுள்ளனர்.

• மேலும் மலேசியா, குவைத், ஓமன், கத்தார், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளிலும் குடியேறியுள்ளனர்.

• குடியேறுபவர்களில் 15% பெண்கள் மற்றும் 85% பேர் ஆண்களாவர்

• கல்வித் தகுதியைப் பொருத்த வரையில் 7% பேர் கல்வியறிவு அற்றவர்கள், 30% பேர் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், 10% பேர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள், 15% பேர் தொழிற்பயிற்சி பெற்றவர்கள், 11% பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள், 12% தொழிற்கல்வி முடித்தவர்கள் மற்றும் 11% பேர் முதுகலை பட்டதாரிகளும் ஆவார்கள்.

 

4. 2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்க.

விடை:

• 7% பேர் கல்வியறிவு அற்றவர்கள்

• 30% பேர் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள்

• 10% பேர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள்

• 15% பேர் தொழிற்பயிற்சி பெற்றவர்கள்

• 11% பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள்

• 12% பேர் தொழிற்கல்வி முடித்தவர்கள்

• 11% பேர் முதுகலை பட்டதாரிகள்

Tags : Migration | Economics | Social Science இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல்.
9th Social Science : Economics: Migration : Answer in Detail Migration | Economics | Social Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல் : விரிவான விடையளி - இடம்பெயர்தல் | பொருளியல் | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 5 : இடம்பெயர்தல்