Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்
   Posted On :  03.01.2024 01:29 am

11 வது வேதியியல் : அலகு 12 : கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்

கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்

ஒரு வேதி வினையினை, வினைபடும் மூலக்கூறுகளில் உள்ள சில பிணைப்புகள் உடைதல் மற்றும் புதிய வேதி பிணைப்புகள் உருவாகும் செயல்முறை எனக் கருதலாம்.

அலகு 12

கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்




ஒட்டோ டீல்ஸ் மற்றும் குர்ட் ஆல்டர்

உடனிசைவுத் தன்மையுடைய டையீன்களுக்கும், பதிலீடு அடைந்த ஆல்கீன்களுக்கும் இடையே நடைபெறும் முக்கியமான வினையின் வினைவழி முறையினை இவர்கள் விவரித்தனர். அவர்களின் இப்பணிக்காக 1950ம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கரிம வேதி தொகுப்பு வினைகளில் டீல்ஸ்-ஆல்டர் வினை மிக முக்கியமான ஒன்றாகும்.


கற்றலின் நோக்கங்கள்

இப்பாடப்பகுதியைக் கற்றறிந்த பின்னர், மாணவர்கள்

கரிம வேதி வினை வழிமுறை பற்றிய கருத்தினை புரிந்து கொள்ளுதல்.

சீரான மற்றும் சீரற்ற பிணைப்பு பிளவுகளை விவரித்தல் 

தனி உறுப்பு, கருக்கவர் பொருள் மற்றும் எலக்ட்ரான் கவர்பொருள் ஆகியனவற்றை இனங்காணுதல்

கரிம வேதி வினைகளை பதிலீட்டு வினை, நீக்க வினை சேர்க்கை வினை, ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை என வகைப்படுத்துதல்.

கரிம வேதி வினைகளில் எலக்ட்ரான்கள் இடம் பெயர்தலை விளக்குதல்

சகப்பிணைப்பில் எலக்ட்ரானியல் விளைவுகளை விளக்குதல்

ஆகிய திறன்களைப் பெறுவார்கள்.


பாடஅறிமுகம்

ஒரு வேதி வினையினை, வினைபடும் மூலக்கூறுகளில் உள்ள சில பிணைப்புகள் உடைதல் மற்றும் புதிய வேதி பிணைப்புகள் உருவாகும் செயல்முறை எனக் கருதலாம். அதாவது வேதி வினைகளில் வினைபடுபொருட்களில் பெரும்பாலானவை வினைவிளை பொருட்களாக மாற்றப்படுகின்றன. இந்த மாற்றம் ஒன்று அல்லது அல்லது பல படிகளை உள்ளடக்கியது. ஒரு பொதுவான கரிம வேதி வினையினை பின்வருமாறு குறிப்பிட இயலும்.

வினைக்குட்படும் பொருள்வினைக்காரணி → 

வினை இடை நிலை மற்றும் / பரிமாற்ற நிலை → 

வினை விளைபொருள்

வேதி மாற்றத்திற்கு உட்படும் கரிம வேதி மூலக்கூறே இங்கு வினைக்கு உட்படும் பொருள் எனப்படுகிறது. வினைக்காரணி என்பது கரிம அல்லது கனிமப் பொருளாகவோ அல்லது வெப்பம், ஒளி போட்டான்கள் போன்ற வேதி மாற்றத்தினை ஏற்படுத்தும் காரணிகளாகவோ இருக்கலாம்.

பெரும்பாலான வேதிவினைகளை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எளிய படிகளில் குறிப்பிட இயலும். ஒவ்வொரு படி நிலையிலும் வினை நிகழ்வானது, ஒரு ஆற்றல் தடை அரணின் வழிச் செல்வதால் குறைந்த ஆயுட்காலம் உடைய வினை இடைநிலை அல்லது பரிமாற்றநிலை உருவாகிறது.

வினைக்கு உட்படும் பொருளிலிருந்து, வினைவிளை பொருளாக மாற்றமடையும் வரை நிகழும் வேதிமாற்றங்களை குறிப்பிடும் தொடர்ச்சியான அனைத்து எளிய வினை நிகழ் படிகளின் ஒட்டு மொத்த தொகுப்பு வினைவழி முறை என அழைக்கப்படுகிறது. வினை வழி முறையில் மிக மெதுவாக நிகழும் படியானது வினையின் ஒட்டுமொத்த வினை வேகத்தினைத் தீர்மானிக்கிறது.

11th Chemistry : UNIT 12 : Basic concepts of organic reactions : Basic concepts of organic reactions in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 12 : கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் : கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 12 : கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்