பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் - சரியான விடையினைத் தேர்வு செய்க | 11th Chemistry : UNIT 12 : Basic concepts of organic reactions
மதிப்பீடு
1. (A) CH3CH2CH2 Br + KOH → CH3 -CH = CH2 + KBr +H2O
(B) (CH3)3CBr + KOH → (CH3) 3 COH + KBr
(C)
மேற்கண்டுள்ள வினைகளுக்கு, பின்வரும் எந்த கூற்று சரியானது?
(அ) (A) நீக்க வினை (B) மற்றும் (C) பதிலீட்டு வினைகள்
(ஆ) (A) பதிலீட்டு வினை (B) மற்றும் (C) நீக்க வினைகள்
(இ) (A) மற்றும் (B) நீக்க வினைகள் மற்றும் (C) சேர்க்கை வினை
(ஈ) (A) நீக்க வினை (B) பதிலீட்டு வினை மற்றும் (C) சேர்க்கை வினை
[விடை : (ஈ) (A) நீக்க வினை (B) பதிலீட்டு வினை மற்றும் (C) சேர்க்கை வினை]
2. பென்சைல் கார்பன் நேர் அயனியின் இனக்கலப்பாதல் என்ன?
(அ) sp2
(ஆ) spd2
(இ) sp3
(ஈ) sp2d
[விடை : (அ) sp2]
3. கருக்கவர் திறனின் இறங்கு வரிசை
(அ) OH- > NH- 2> -OCH3 > RNH2
(ஆ) NH 2- > OH- > -OCH3 > RNH2
(இ) NH-2 > CH 3O- > OH- > RNH2
(ஈ) CH3O- > NH2- > OH- > RNH2
[விடை : (ஆ) NH 2- > OH- > -OCH3 > RNH2]
4. பின்வருவனவற்றில் எது எலக்ட்ரான் கவர் பொருள் அல்ல?
(அ) Cl+
(ஆ) BH3
(இ) H2O
(ஈ) +NO2
[விடை : (இ) H2O]
5. ஒரு சகப்பிணைப்பின் சீரான ஒரே மாதிரியான பிளவினால் உருவாவது
(அ) எலக்ட்ரான் கவர் பொருள்
(ஆ) கருக்கவர் பொருள்
(இ) கார்பன் நேர் அயனி
(ஈ) தனி உறுப்பு
[விடை : (ஈ) தனி உறுப்பு]
6. Hyper Conjucation இவ்வாறும் அழைக்கப்படுகிறது
(அ) பிணைப்பில்லா உடனிசைவு
(ஆ) பேக்கர் - நாதன் விளைவு
(இ) (அ) மற்றும் (ஆ)
(ஈ) இவை எதுவுமில்லை.
[விடை : (இ) (அ) மற்றும் (ஆ)]
7. அதிக +I விளைவினை பெற்றுள்ள தொகுதி எது?
(அ) CH3-
(ஆ) CH3-CH2-
(இ) (CH3)2- CH-
(ஈ) (CH3)3 - C-
[விடை : (ஈ) (CH3)3 - C-]
8. பின்வருவனவற்றுள் மீசோமெரிக் விளைவிற்கு உட்படாத சேர்மம் எது?
(அ) C6H5OH
(ஆ) C6H5Cl
(இ) C6H5NH2
(ஈ)
[விடை : (ஈ) C6H5+NH3]
9. –I விளைவினை காட்டுவது
(அ) -Cl
(ஆ) -Br
(இ) (அ) மற்றும் (ஆ)
(ஈ) -CH3
[விடை : (இ) (அ) மற்றும் (ஆ)]
10. பின்வருவனவற்றுள் அதிக நிலைப்புத் தன்மையைப் பெற்றுள்ள கார்பன் நேரயனி எது?
[விடை : (அ) Ph3C-+]
11. கூற்று: பொதுவாக ஓரிணைய கார்பன் நேர் அயனியைக் காட்டிலும் மூவிணைய கார்பன் நேர் அயனிகள் எளிதில் உருவாகின்றன.
காரணம்: கூடுதலாக உள்ள ஆல்கைல் தொகுதியின் பிணைப்பில்லா உடனிசைவு மற்றும் தூண்டல் விளைவானது மூவிணைய கார்பன் நேரயனியை நிலைப்புத் தன்மை பெறச் செய்கிறது.
(அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல
(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
[விடை : (அ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்,]
12. C-C பிணைப்பின் சீரற்ற பிளவினால் உருவாவது
(அ) தனி உறுப்பு
(ஆ) கார்பன் எதிரயனி
(இ) கார்பன் நேர் அயனி
(ஈ) கார்பன் நேர் அயனி மற்றும் கார்பன் எதிரயனி
[விடை : (இ) கார்பன் நேர் அயனி]
13. பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருட்களின் தொகுப்பை குறிப்பிடுவது எது?
(அ) BF3, H2O, NH2-
(ஆ) AlCl3, BF3, NH3
(இ) CN-, RCH2-, ROH
(ஈ) H+, RNH3+, :CCl2
[விடை : (இ) CN-, RCH2-, ROH]
14. பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருளாக செயல்படாதது எது?
(அ) ROH
(ஆ) ROR
(இ) PCl3
(ஈ) BF3
[விடை : (ஈ) BF3]
15. கார்பன் நேர் அயனியின் வடிவமைப்பு
(அ) நேர் கோடு
(ஆ) நான்முகி
(இ) தள அமைப்பு
(ஈ) பிரமிடு
[விடை : (இ) தள அமைப்பு]