Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | கரிமவினைகளில் எலக்ட்ரான்களின் இடம் பெயர்வு
   Posted On :  03.01.2024 01:51 am

11 வது வேதியியல் : அலகு 12 : கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்

கரிமவினைகளில் எலக்ட்ரான்களின் இடம் பெயர்வு

வேதி வினையின்போது எலக்ட்ரான்கள் மறுபங்கீடு செய்யப்படுவதை அறிந்து கொள்வதன் மூலம் அனைத்து கரிம வேதிவினைகளையும் புரிந்து கொள்ள இயலும்.

கரிமவினைகளில் எலக்ட்ரான்களின் இடம் பெயர்வு

வேதி வினையின்போது எலக்ட்ரான்கள் மறுபங்கீடு செய்யப்படுவதை அறிந்து கொள்வதன் மூலம் அனைத்து கரிம வேதிவினைகளையும் புரிந்து கொள்ள இயலும். எலக்ட்ரான் இடப் பெயர்வானது. வினைக்கு உட்படும் வினைப் பொருளின் தன்மை, வினைக் காரணிகள் மற்றும் வினை நிகழும் சூழல் ஆகியனவற்றை பொறுத்து அமையும். படத்தில் காட்டியுள்ளவாறு எலக்ட்ரான்கள் எவ்வாறு இடம்பெயர்கின்றன என்பது வளைவான அம்புக்குறியால் சுட்டிக் காட்டப்படுகிறது. இத்தகைய எலக்ட்ரான் இடப் பெயர்வுகளால் பிணைப்பு பிளத்தல் மற்றும் பிணைப்பு உருவாதல் நிகழ்கின்றன. ஒற்றை எலக்ட்ரான் இடப்பெயர்வானது ஒற்றை முனை கொண்ட வளைந்த அம்புக்குறியால் சுட்டிக் காட்டப்படுகிறது.

எலக்ட்ரான் இடம் பெயர்வினை பின்வரும் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

தனித்த இரட்டையானது பிணைப்பு இரட்டையாதல்

பிணைப்பு இரட்டையானது தனித்த இரட்டையாதல்.

ஒரு பிணைப்பு பிளவுற்று மேலும் ஒரு பிணைப்பு உருவாதல்.

வகை 1 - ஒரு தனித்த இரட்டையிலிருந்து ஒரு பிணைப்பு இரட்டை


வகை 2 - ஒரு பிணைப்பு இரட்டையிலிருந்து ஒரு தனித்த இரட்டை


வகை 3- ஒரு பிணைப்பு இரட்டையிலிருந்து மற்றொரு பிணைப்பு இரட்டை



11th Chemistry : UNIT 12 : Basic concepts of organic reactions : Electron movement in organic reactions in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 12 : கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள் : கரிமவினைகளில் எலக்ட்ரான்களின் இடம் பெயர்வு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 12 : கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்