கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | முழுக்கள் | பருவம் 3 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.2 | 6th Maths : Term 3 Unit 2 : Integers

   Posted On :  23.11.2023 09:46 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : முழுக்கள்

பயிற்சி 2.2

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : முழுக்கள் : பயிற்சி 2.2 : பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள், மேற்சிந்தனைக் கணக்குகள், புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.2


பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள் 


1. –3 என்ற முழுவைக் குறிப்பிடும் இருவேறு அன்றாடச் சூழல்களை எழுதுக.

விடை

i) 3மீ ஆழத்தில் மரக்கன்று நடப்பட்டுள்ளது.

ii) 3 மீ ஆழமுள்ள ஒரு பள்ளம்


2. பின்வரும் எண்களை எண்கோட்டில் குறிக்கவும்.

i) – 7 விடப் பெரியதும் 7 விடக் குறைவானதுமான முழுக்கள்.

ii) 3 என்ற முழுவின் எதிரெண்.

iii) –1 இன் இடதுபுறம் 5 அலகுகள் தொலைவில் உள்ள ஓர் எண்.

விடை



3. தரைமட்டத்திலிருந்து 10 அடி ஆழத்தையும் அதன் எதிரெண்ணையும் குறிக்குமாறு ஓர் எண்கோட்டினை வரைக.

விடை




4. –6 இலிருந்து, 8 அலகுகள் தொலைவில் இருக்கும் முழுக்களை அடையாளம் கண்டு, எண்கோட்டில் குறிக்கவும்.

விடை



5. கீழேயுள்ள எண்கோட்டிலிருந்து, பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.


i) எது பெரிய முழு : G அல்லது K? ஏன்?

ii) C ஐக் குறிக்கும் முழு எது?

iii) G மற்றும் H இக்கு இடையே எத்தனை முழுக்கள் உள்ளன?

iv) எதிரெண் முழுக்களுடைய சோடி எழுத்துக்களைக் காண்க.

v) D இன் இடதுபுறம் 6 அலகுகளில் உள்ள எண் – 6 சரியா? தவறா?

விடை

i) K (–1)  ii) –4   iii) 6   iv) 2 சோடிகள் v) தவறு


6. G ஆனது எண் 3 ஐயும், C ஆனது எண் –1 ஐயும் குறிக்கும் எனில், பின்வரும் எண்கோட்டில் A மற்றும் K ஆனது எந்த முழுக்களைக் குறிக்கும் ?


விடை : A (–3), K (7)


7. எண்கோட்டில் 0 இன் இடதுபுறம் 4 அலகுகளும், –3 இன் வலதுபுறம் 2 அலகுகளும் உள்ள முழுக்களைக் காண்க.

விடை : –4, –1



மேற்சிந்தனைக் கணக்குகள்


8. முழுக்கள் தொகுப்பில் மிகச்சிறிய எண் மற்றும் மிகப்பெரிய எண் உள்ளதா? காரணம் கூறுக.

விடை :

இல்லை. எண் கோட்டினை இருபுறமும் முடிவின்றி விரிவாக்கம் செய்யலாம். எனவே, மிகச்சிறிய எண்ணையும் மிகப்பெரிய எண்ணையும் காண இயலாது.


9. செல்சியஸ் தெர்மோமீட்டரைப் பார்த்து, பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

i) வெப்பமானி காட்டும் வெப்ப நிலை அளவு என்ன?

ii) வெப்பமானியில் 0°C இக்குக் கீழே 5°C எங்கு குறிப்பாய்

iii) வெப்பமானியில் உள்ள வெப்பநிலையை 10°C குறைத்தால் வெப்பமானி காட்டும் வெப்பநிலை என்ன?

iv) வெப்பமானியில் 15°C இக்கு எதிரெண்ணைக் குறிக்கவும்.


விடை : i) –10°C    ii) –5°C       iii) –20°C       iv) – 15°C


10. P, Q, R மற்றும் S ஆகியன ஓர் எண்கோட்டில் உள்ள நான்கு வெவ்வேறு முழுக்களைக் குறிக்கும். பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்தி இந்த முழுக்களைக் கண்டு, அவற்றை ஏறுவரிசையில் எழுதவும்.

i) S ஆனது கொடுக்கப்பட்ட முழுக்களில் மிகச் சிறியதாகும்.

ii) R ஆனது மிகச்சிறிய மிகை முழு ஆகும்.

iii) முழுக்கள் P மற்றும் S ஆனது 0 இலிருந்து சம தூரத்தில் உள்ளன.

iv) Q ஆனது முழு R இன் இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.

விடை : S < Q < 0 < R < P


11. வீடு (0) என்பதனைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, பின்வரும் இடங்களை எண்கோட்டில் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி குறித்து, அதற்குரிய முழுக்களை எழுதுக.


இடங்கள் : வீடு, பள்ளி, நூலகம், விளையாட்டுத் திடல், பூங்கா, பல்பொருள் அங்காடி, பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையம், அஞ்சலகம், மின்சார அலுவலகம்.

குறிப்புகள்:

i) பேருந்து நிறுத்தம், வீட்டிற்கு வலதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.

ii) நூலகம், வீட்டிற்கு இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.

iii) பல்பொருள் அங்காடி, வீட்டிலிருந்து இடதுபுறமாக 6 அலகுகள் தொலைவில் உள்ளது.

iv) அஞ்சலகம், நூலகத்தின் வலதுபுறம் ஓர் அலகு தொலைவில் உள்ளது.

v) பூங்கா, பல்பொருள் அங்காடிக்கு வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ளது.

vi) தொடர்வண்டி நிலையம், அஞ்சலகத்தின் இடதுபுறம் 4 அலகுகள் தொலைவில் உள்ளது.

vii) பள்ளியானது, பேருந்து நிறுத்தத்தை அடுத்து வலதுபுறத்தில் உள்ளது.

viii) விளையாட்டுத் திடலும், நூலகமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே உள்ளன.

ix) மின்சார அலுவலகமும், பல்பொருள் அங்காடியும் வீட்டிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளன.

விடை : i) 3  ii) –2   iii) –6    iv) –1    v) –5    vi) –4   vii) 4   viii) 5   ix) 2  


12. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு அட்டவணையை நிறைவு செய்க.


C1 : முதல் குறையற்ற முழு எண்

C3 : இரண்டாம் குறை எண்ணின் எதிரெண்

C5 : முழு எண்களின் கூட்டல் சமனி

C6 : C2 இல் உள்ள முழுவின் தொடரி

C8 : C7 இல் உள்ள முழுவின் முன்னி

C9 : C5 இல் உள்ள முழுவின் எதிரெண்

விடை :

i) C1 : (0) 

ii) C3 : (2) 

iii) C5 : (0) 

iv) C6 (–4) 

v) C8 (–8)

vi) C9 (0)



13. கீழே உள்ள பட்டை வரைபடமானது, ஒரு சிறு வர்த்தக நிறுவனத்தின் 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான இலாபம் (+) மற்றும் நட்டத்தை (–) விளக்குகிறது.


பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

i) 2014 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு இலாபமா, நட்டமா என்பதைக் குறிக்கும் முழுவினை எழுதுக.

விடை : + 45 

ii) 2016 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு இலாபமா, நட்டமா என்பதைக் குறிக்கும் முழுவினை எழுதுக.

விடை : 0

iii) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை முழுக்களால் எழுதுக.

விடை : –10 மற்றும் –20

iv) 2012 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் நட்டம் மிகக் குறைவாக உள்ளது. இக்கூற்று சரியா? தவறா?

விடை : தவறு

v) நிரப்புக: 2011 ஆம் ஆண்டில் உள்ள நட்டமும், 2013 ஆம் ஆண்டில் உள்ள இலாபமும்___________

விடை : சமம் 

Tags : Questions with Answers, Solution | Integers | Term 3 Chapter 2 | 6th Maths கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | முழுக்கள் | பருவம் 3 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 3 Unit 2 : Integers : Exercise 2.2 Questions with Answers, Solution | Integers | Term 3 Chapter 2 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : முழுக்கள் : பயிற்சி 2.2 - கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | முழுக்கள் | பருவம் 3 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : முழுக்கள்