முழுக்கள் | பருவம் 3 அலகு 2 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பாடச் சுருக்கம் | 6th Maths : Term 3 Unit 2 : Integers
பாடச் சுருக்கம்
• ...−3, −2, −1, 0, 1, 2, 3,... என்ற எண்களின் தொகுப்பு 'முழுக்கள்' எனப்படும். இந்த எண் தொகுப்பை Z என்ற எழுத்தால் குறிப்பிடுகிறோம்.
• 0 என்பது மிகை முழுவும் அல்ல குறை முழுவும் அல்ல. ஆகையால், அதற்குக் குறியீடு எதுவும் இல்லை.
• எண்கோட்டில் 0 இக்குச் சம தொலைவில் இரு எண்கள் எதிரெதிர் திசைகளில் இருக்குமானால், அவை ஒன்றுக்கொன்று 'எதிரெண்' எனப்படும்.
• இயல்எண்களை மிகை முழுக்கள் என்றும், முழு எண்களைக் குறையற்ற முழுக்கள் என்றும் அழைக்கப்படும்.
• மிகை மற்றும் குறை எண்களின் தொகுப்பானது 'குறியீட்டு எண்கள்' எனப்படும்.
• குறியீட்டு எண்கள் 'திசை எண்கள்' என்றும் அழைக்கப்படும்.
இணையச் செயல்பாடு
முழுக்கள்
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது
படி 1:
கீழ்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி Geo Gebra இணையப் பக்கத்தில் முழுக்கள் என்னும் பணித்தாளிற்குச் செல்லவும். எண் கோட்டின் அடிப்படை எனும் பணித்தாள் இடம் பெற்றிருக்கும்.
படி 2:
புதிய கேள்வியை பெற 'New Number' ஐச் சொடுக்கவும். முன்னி மற்றும் தொடரியைக் காண அடுத்துள்ள தகுந்த பெட்டியில் விடையை தட்டச்சு செய்து ' உள்நுழை (enter)' ஐ அழுத்தவும்.
செயல்பாட்டிற்கான உரலி:
முழுக்கள்: https://ggbm.at/mt7qxxn7 அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.