Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 4.7: பலவுள் தெரிவு வினாக்கள்

எடுத்துக்காட்டு, தீர்வு | வடிவியல் | கணக்கு - பயிற்சி 4.7: பலவுள் தெரிவு வினாக்கள் | 9th Maths : UNIT 4 : Geometry

   Posted On :  22.09.2023 10:22 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வடிவியல்

பயிற்சி 4.7: பலவுள் தெரிவு வினாக்கள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வடிவியல் : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 4.7: பலவுள் தெரிவு வினாக்கள்

பயிற்சி 4.7

 

பலவுள் தெரிவு வினாக்கள்

 

1. முக்கோணத்தின் வெளிக்கோணம் எந்த இரு கோணங்களின் கூடுதலுக்குச் சமம்?

(1) வெளிக்கோணங்கள்

(2) உள்ளெதிர்க்கோணங்கள்

(3) ஒன்றுவிட்ட கோணங்கள்

(4) உள் கோணங்கள்

விடை: (2) உள்ளெதிர்க்கோணங்கள்

 

2. நாற்கரம் ABCD இல் AB = BC மற்றும் AD = DC எனில், கோணம் BCD இன் அளவு


(1) 150°

(2) 30°

(3) 105°

(4) 72°

விடை: (3) 105°

 

3. சதுரம் ABCD இல் மூலை விட்டங்கள் AC மற்றும் BD ஆனது O இல் சந்திக்கின்றன எனில், O அவை முனையாகக் கொண்ட சர்வசம முக்கோணச் சோடிகளின் எண்ணிக்கை.


(1) 6

(2) 8

(3) 4

(4) 12

விடை: (1) 6

 

4. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் CE || DB எனில், x° இன் மதிப்பு


(1) 45°

(2) 30°

(3) 75°

(4) 85°

விடை: (4) 85°

 

5. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது எது?


(1) ABC DEF

(2) ABC = DEF

(3) ABC FDE

(4) ABC  FED

விடை: (4) ∆ABC   ∆FED

 

6. சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் சமமெனில் அந்தச் சாய்சதுரம் ஒரு

(1) இணைகரம் ஆனால் செவ்வகம் அல்ல

 (2) செவ்வகம் ஆனால் சதுரம் அல்ல

(3) சதுரம்

(4) இணைகரம் ஆனால் சதுரம் அல்ல

விடை: (3) சதுரம்

 

7. நாற்கரம் ABCD இல் A மற்றும் B இன் இருசமவெட்டிகள் O இல் சந்திக்கின்றன, எனில், AOB இன் மதிப்பு

(1) C + D

(2) ) 1/2 (C + D)

(3) 1/2 ( C) + 1/3 ( D)

(4) 1/3 ( C) + 1/2 ( D)

விடை: (2) ) 1/2 (C + D)

 

8. ஓர் இணைகரத்தின் உள் கோணங்கள் 90° எனில், அந்த இணைகரம் ஒரு

(1) சாய்சதுரம்

(2) செவ்வகம்

(3) சரிவகம்

(4) பட்டம்

விடை: (2) செவ்வகம்

 

9. பின்வருவனவற்றுள் எந்தக் கூற்று சரியானது?

(1) இணைகரத்தின் எதிர்க் கோணங்கள் சமமல்ல.

(2) இணைகரத்தின் அடுத்துள்ள கோணங்கள் நிரப்பிகள்.

(3) இணைகரத்தின் மூலைவிட்டங்கள் எப்பொழுதும் சமம்.

(4) இணைகரத்தின் இரு சோடி எதிர்ப்பக்கங்கள் எப்பொழுதும் சமம்.

விடை: (4) இணைகரத்தின் இரு சோடி எதிர்ப்பக்கங்கள் எப்பொழுதும் சமம்.

 

10. முக்கோணத்தின் கோணங்கள் (3x  − 40)° , (x + 20)° மற்றும் (2x  −10)° எனில் x இன் மதிப்பு

(1) 40°

(2) 35°

(3) 50°

(4) 45°

விடை: (2) 35°

 

11. O வை மையமாகக் கொண்ட வட்டத்தில் சம நீளமுள்ள நாண்கள் PQ மற்றும் RS. மேலும், POQ = 70° எனில், ORS = _________

 (1) 60°

(2) 70°

(3) 55°

(4) 80°

விடை: (3) 55°

 

12. ஆரம் 25 செமீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 15 செமீ தூரத்தில் உள்ள நாணின் நீளம் ______________

(1) 25செமீ

 (2) 20செமீ

 (3) 40செமீ

(4) 18செமீ

விடை: (3) 40செமீ

 

13. படத்தில் வட்டமையம் O மற்றும் ACB= 40° எனில், AOB = ……….


(1) 80°

(2) 85°

(3) 70°

(4) 65°

விடை: (1) 80°

 

14. வட்ட நாற்கரம் ABCDயில், A = 4x , C = 2x எனில், x இன் மதிப்பு

(1) 30°

(2) 20°

(3) 15°

(4) 25°

விடை: (1) 30°

 

15. படத்தில் வட்டமையம் O மற்றும் விட்டம் AB ஆகியன, நாண் CD ஐப் புள்ளி E இல் இருசமக் கூறிடுகின்றன. மேலும், CE = ED = 8 செமீ மற்றும் EB = 4 செமீ எனில், வட்டத்தின் ஆரம்


(1) 8செமீ

(2) 4செமீ

(3) 6செமீ

(4) 10செமீ

விடை: (4) 10செமீ

 

16. படத்தில் PQRS மற்றும் PTVS என்ற இரண்டு வட்ட நாற்கரங்களில் QRS=100° எனில், TVS =


(1) 80°

(2) 100°

(3) 70°

(4) 90°

விடை: (2) 100°

 

17. வட்ட நாற்கரத்தின் ஒரு கோண அளவு 75° எனில், எதிர் கோணத்தின் அளவு

(1) 100°

(2) 105°

(3) 85°

(4) 90°

விடை: (2) 105°

 

18. படத்தில் வட்ட நாற்கரம் ABCD இல் பக்கம் DC ஆனது E வரை நீட்டப்பட்டுள்ளது. மேலும் AB இக்கு இணையாக CF வரைக. இங்கு ADC = 80° மற்றும் ECF = 20° எனில், BAD = ?


(1) 100°

(2) 20°

(3) 120°

(4) 110°

விடை: (3) 120°

 

19. AD விட்டமாகக் கொண்ட ஒரு வட்டத்தின் ஒரு நாண் AB. இங்கு, AD = 30 செமீ மற்றும் AB = 24 செமீ எனில், வட்ட மையத்திலிருந்து AB அமைந்துள்ள தூரம் ____

(1) 10செமீ

(2) 9செமீ

(3) 8செமீ

(4) 6செமீ.

விடை: (2) 9செமீ

 

20. படத்தில் OP = 17 செமீ, PQ = 30 செமீ மற்றும் OS ஆனது PQ இக்குச் செங்குத்து எனில், RS இன் மதிப்பு.


(1) 10செமீ

(2) 6செமீ

(3) 7செமீ

(4) 9செமீ

விடை: (4) 9செமீ

Tags : with Answers, Solution | Geometry | Maths எடுத்துக்காட்டு, தீர்வு | வடிவியல் | கணக்கு.
9th Maths : UNIT 4 : Geometry : Exercise 4.7: Multiple Choice Questions with Answers, Solution | Geometry | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வடிவியல் : பயிற்சி 4.7: பலவுள் தெரிவு வினாக்கள் - எடுத்துக்காட்டு, தீர்வு | வடிவியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 4 : வடிவியல்