பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் | பருவம் 1 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : Geography : Term 1 Unit 1 : The Universe and Solar System

   Posted On :  27.08.2023 08:07 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 1 அலகு 1 : பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்

வினா விடை

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 1 அலகு 1 : பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

பயிற்சிகள்

 

அ.கோடிட்ட இடங்களை நிரப்புக

 

1. பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு. பெருவெடிப்பு

2. இரு வான்பொருள்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும் அளவு ஒளியாண்டு ஆகும்.

3. சூரியக் குடும்பத்தின் மையம் சூரியன்

4. கோள் என்ற வார்த்தையின் பொருள் சுற்றி வருபவர்

5. அதிக துணைக்கோள்களைக் கொண்ட கோள் வியாழன்

6. நிலவிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய விண்கலம் சந்திராயன் -1

7. புவியின் சாய்வுக் கோணம். 23 1/2°

8. நிலநடுக்கோடு சூரியனை நேராகச் சந்திக்கும் நாள்கள் மார்ச் 21  மற்றும் செப்டம்பர் 23

9. சூரிய அண்மை நிகழ்வின் போது புவி சூரியனுக்கு மிக அருகில் ல் காணப்படும்.

10. புவியின் மேற்பரப்பின் மீது ஒளிபடும் பகுதியையும், ஒளிபடாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு ஒளிர்வு வட்டம் என்றுபெயர்.

 

ஆ. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

 

1. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்

அ) சுற்றுதல்

ஆ) பருவகாலங்கள்

இ) சுழல்தல்

ஈ) ஓட்டம்

[விடை: இ) சுழல்தல்]

 

2. மகர ரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்

அ) மார்ச் 21

ஆ) ஜூன் 21

இ) செப்டம்பர் 23

ஈ) டிசம்பர் 22

[விடை: ஈ) டிசம்பர் 22]

 

3. சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்

அ) ஆண்டிரோமெடா

ஆ) மெகலனிக் கிளவுட் (Magellanic Clouds)

இ) பால்வெளி

ஈ) ஸ்டார்பர்ஸ்ட்

[விடை: இ) பால்வெளி]

 

4. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்

அ) செவ்வாய்

ஆ) சந்திரன்

இ) புதன்

ஈ) வெள்ளி

[விடை: ஆ) சந்திரன்]

 

5. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

அ) வியாழன்

ஆ) சனி

இ) யுரேனஸ்

ஈ) நெப்டியூன்

[விடை: ஆ) சனி]

 

இ. பொருந்தாததை வட்டமிடுக

 

1. வெள்ளி, வியாழன், நெப்டியூன், சனி

2 சிரியஸ், ஆண்டிரோமெடா, பால்வெளி, மெகலனிக்கிளவுட்

3. புளூட்டோ, ஏரிஸ், செரஸ், அயோ

4. வால்விண்மீன், சிறுகோள், விண்வீழ்கல், குறுளைக் கோள்கள்

5. தரை ஊர்தி, சுற்றுக்கலம், வானுர்தி, விண்கலம்

 

ஈ.பொருத்துக

1. வெப்பமான கோள் - செவ்வாய்

2  வளையம் உள்ள கோள் - நெப்டியூன்

3. செந்நிறக் கோள் - வெள்ளி

4. உருளும் கோள் - சனி

5. குளிர்ந்த கோள் –யுரேனஸ்

 

விடைகள்

1. வெப்பமான கோள் - வெள்ளி

2  வளையம் உள்ள கோள் - சனி

3. செந்நிறக் கோள் - செவ்வாய்

4. உருளும் கோள் - யுரேனஸ்

5. குளிர்ந்த கோள் – நெப்டியூன்

 

உ (i) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க


1. வெள்ளிக் கோள் கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றுகிறது.

2. ஜுன் 21ஆம் நாளன்று கடகரேகையில் சூரியக் கதிர் செங்குத்தாக விழும்.

3. செவ்வாய்க் கோளுக்கு வளையங்கள் உண்டு.

மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக

அ) 1 மற்றும் 2

ஆ) 2 மற்றும் 3

இ) 1, 2 மற்றும் 3

ஈ) 2 மட்டும்

[விடை : அ) 1 மற்றும் 2]

 

(ii) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க

கூற்று 1: புவி, நீர்க்கோளம் என அழைக்கப்படுகிறது.

கூற்று 2: புவி தன் அச்சில் சுழலுவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன.

சரியான கூற்றினை தேர்ந்தெடுத்து எழுதுக.

அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

இ) இரண்டு கூற்றுகளும் சரி

ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.

[விடை : அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு]

 

ஊ.பெயரிடுக

 

1. விண்மீன்களின் தொகுப்பு விண்மீன் திரள்

2. சூரியக் குடும்பத்திற்கு அருகில் உள்ள விண்மீன் திரள் மண்டலம் ஆண்ட்ரோமெடா

3. பிரகாசமான கோள் வெள்ளி

4. உயிரினங்களை உள்ளடக்கிய கோளம் புவி

5. 366 நாட்களை உடைய ஆண்டு லீப் ஆண்டு

 

எ. சுருக்கமான விடையளி

 

1. உட்புறக்கோள்களைப் பெயரிடுக.

1. புதன்  2. வெள்ளி  3. புவி  4. செவ்வாய்

 

2. புளூட்டோ ஒரு கோளாக தற்சமயம் கருதப்படவில்லை . காரணம் தருக.

புளூட்டோ கிரகத்தின் பாதை நெப்டியூன் கிரகத்தின் வளையத்திற்குள் வருவதால், புளூட்டோவை தனி கிரகமாக கருத முடியாது.

 

3. சூரிய அண்மை என்றால் என்ன?

‘சூரிய அண்மை ' என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வாகும்.

 

4. ஒருவர் 20° வடக்கு அட்சரேகையில் நின்றால், ஒர் ஆண்டில் சூரியன் அவரின் தலை உச்சிக்கு மேல் எத்தனை முறை வரும்?

இரண்டு முறை

 

5. எந்த விண்பொருள் தன் சுற்றுப்பாதையை பிற விண்பொருள்களுடன் பகிர்ந்து கொள்கிறது? உதாரணம் தருக. 

குறுங்கோள்கள் தன் சுற்றுப்பாதையை பிறவிண் பொருட்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

உதாரணம் : புளூட்டோ, செரஸ், மேக்மேக் மற்றும் ஹௌமிய.

 

ஏ. காரணம் கூறுக

 

1. யுரேனஸ் ஏன் உருளும் கோள் என அழைக்கப்படுகிறது? 

• வெள்ளிக் கோளைப் போன்றே இக்கோளும் தன் அச்சில் கடிகாரச் சுற்றில் சுற்றுகிறது.

• இதன் அச்சு மிகவும் சாய்ந்து காணப்படுவதால் தன் சுற்றுப்பாதையில் உருண்டோடுவது போன்று சூரியனைச் சுற்றி வருகிறது.

 

2. நிலவின் மேற்பரப்பில் தரைக்குழிப் பள்ளங்கள் அதிகமாக காணப்படுகின்றன. காரணம் தருக

• நிலவிற்கு வளிமண்டலம் கிடையாது. 

• இதன் காரணமாக விண்கற்களின் தாக்கத்தால் இதன் மேற்பகுதியில் அதிகளவில் தரைக்குழிப் பள்ளங்கள் காணப்படுகின்றன.

 

3. புவியின் சுழலும் வேகம் துருவப் பகுதிகளில் சுழியமாக உள்ளது.

புவி கோள வடிவமாக இருப்பதால் சுழலும் வேகம் துருவப்பகுதிகளில் சுழியாக உள்ளது.

 

ஐ. விரிவான விடை தருக

 

1. உட்புற மற்றும் வெளிப்புறக் கோள்கள் - வேறுபடுத்துக.


உட்புறக் கோள்கள்

1. சூரியனுக்கு அருகில் உள்ள நான்கு கோள்கள் புதன், வெள்ளி, புவி, மற்றும் செவ்வாய்

2. இவை உட்புறக் கோள்கள் அல்லது ‘புவிநிகர் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன.

3. பாறைகளால் ஆன இக்கோள்கள் அளவில் சிறியன.

4. இக்கோள்களின் மேற்பரப்பில் மலைகள், எரிமலைகள் மற்றும் தரைக்குழிவுப் பள்ளங்கள் (Craters) 'காணப்படுகின்றன.

வெளிப்புறக் கோள்கள் '

1. சூரியக்குடும்பத்தில் உள்ள கடைசி நான்கு கோள்கள் வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன்

2. இவை ‘வெளிப் புறக்கோள்கள் அல்லது ‘வியாழன் நிகர் கோள்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

3. இக்கோள்கள் வாயுக்களால் நிரம்பிக் காணப்படுவதால் ‘வளிமக் கோள்கள்' (Gaseous Planets) எனவும் அழைக்கப்படுகின்றன.

4. செவ்வாய், வியாழன் கோள்களுக்கிடையே சிறு கோள் மண்டலம் காணப்படுகிறது.


 

2. புவியின் சுழலுதல் மற்றும் சுற்றுதல் நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் யாவை?

சுழலுதல்:

1. புவி தன் அச்சில் தன்னைத் தானே சுற்றுவது சுழலுதல் எனப்படும்.

2. புவி சுழலுவதன் காரணமாக இரவு பகல் ஏற்படுகிறது.

3. புவி கோள வடிவமாக இருப்பதால் சூரிய வெளிச்சம் புவியின் ஒரு பகுதியில் மட்டும் படும் அப்பகுதி பகல் பொழுது எனப்படும்.

4. புவி ஒளிபடாத பகுதி இரவாகவும் இருக்கும்:

சுற்றுதல்:

1. புவி தன் நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றிவரும் நகர்வு சுற்றுதல் எனப்படும்.

2. புவி சூரியனை சுற்றி வருவதால் பருவகாலங்கள் ஏற்படுகின்றன.

3. புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வருவதால் சூரியன் நிலநடுக்கோட்டிற்கு வடக்காகவும், தெற்காகவும் நகர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

4. இதனால் மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய நாள்கள் நிலநடுக்கோட்டுப் பகுதியில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும்.

5. இதன் காரணமாக புவியின் அனைத்துப் பகுதிகளிலும் பகல் மற்றும் இரவுப்பொழுது சமமாகக் காணப்படும்.

6. டிசம்பர் 22ம் தேதி மகரரேகையின் மீது சூரியனின் செங்குத்துக்கதிர்கள் விழுவதால் தென் அரைக்கோளத்தில் பகல்பொழுது அதிகமாகவும் வட அரைக்கோளம் நீண்ட இரவையும் கொண்டிருக்கும்.


3. புவிக்கோளங்களின் தன்மைகள் பற்றி விவரி.

1. உயிரினங்கள் வாழத் தகுதியான கோள் புவியாகும்.

2. புவியின் மூன்று தொகுதிகள் உள்ளன. அவை பாறைக்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகும்.

3. உயிரினங்கள் வாழக்கூடிய குறுகிய மண்டலம் ‘உயிர்க்கோளம்' ஆகும்.

பாறைக் கோளம்:

1. புவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் மண் அடுக்குகள் பாறைக் கோளம் எனப்படும்.

2. இந்த நிலப்பரப்பில் உயிரினங்கள் காணப்படுகின்றன.

நீர்க் கோளம்:

1. “ஹைட்ரோ” என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்லே ஹைட்ரோஸ்பியர் ஆகும். இதற்கு நீர்க்கோளம் என்று பெயர்.

2. கடல்கள், ஆறுகள், ஏரிகள், மலையுச்சிகளில் காணப்படும் பனியுறைகள், வளிமண்டலத்தில் காணப்படும் நீராவி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.

வளி மண்டலம்:

1. புவியைச் சுற்றி காணப்படும் பல்வேறு காற்றுத் தொகுதி வளிமண்டலம் எனப்படும்.

2. வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்களில் நைட்ரஜன் (78% ) மற்றும் ஆக்ஸிஜன் (21%) முதன்மையான வாயுக்களாகும்.

3. கார்பன் - டை - ஆக்ஸைடு, ஆர்கான், ஹைட்ரஜன், ஹீலியம், ஓசோன் வாயுக்கள் குறைந்த அளவில் காணப்படுகின்றன.

உயிர்க் கோளம்:

1. பாறைக்கோளம், நீர்க்கோளம், வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய உயிரினங்கள் வாழக்கூடிய ஒரு பகுதி ‘உயிர்க்கோளம்' எனப்படும்.

2. உயிர்க்கோளம் பல்வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

3. ஒவ்வொரு மண்டலமும் ஒப்பற்ற காலநிலை, தாவரங்கள், விலங்கினங்களைக் கொண்ட பகுதியாக உள்ளது.

 

ஒ. அ) கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து  விடையளிக்கவும்

1. சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது? விடை: புதன்

2. பெரியதான கோள் எது? விடை: வியாழன்

3 சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது? விடை: நெப்டியூன்

4. இரண்டாவது சிறிய கோள் எது? விடை: செவ்வாய்

 

 

ஆ) படத்தைப் பார்த்து பதிலளி

 

1. படத்தில் உள்ள கோளின் பெயர் என்ன? விடை: யுரேனஸ்

2 கோளின் நிறம் என்ன? விடை: பச்சை

3. இந்நிறத்திற்கான காரணம் என்ன?

விடை: மீத்தேன் வாயு இக்கோளில் உள்ளதால் பச்சை நிறமாகத் தோன்றுகிறது.


 

இ. குறுக்கெழுத்து புதிர்


 

இடமிருந்து வலம்

1. இரவும் பகலும் சமமாக காணப்படும் நிகழ்வு விடை: சமப்பகலிரவு

5. குறுங்கோள் விடை: புளூட்டோ

7. சூரியனிடமிருந்து மிகத் தொலைவில் உள்ள கோள் விடை: நெப்டியூன்

8. சூரியனில் உள்ள வாயு விடை: ஹைட்ரஜன்

 

மேலிருந்து கீழ்

4. நான் காலையில் தென்படுவேன் விடை: விடிவெள்ளி

2. நிலவை ஆராய இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம்

விடை: சந்திராயன் 1

3. நான் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றுவேன் விடை: ஹேலி

6. பூமியின் நடுவில் செல்லும் ஓர் கற்பனைக் கோடு விடை: அச்சு

9. எனக்கு இரண்டு துணைக் கோள்கள் உண்டு விடை: செவ்வாய்


Tags : The Universe and Solar System | Term 1 Unit 1 | Geography | 6th Social Science பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் | பருவம் 1 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Geography : Term 1 Unit 1 : The Universe and Solar System : Exercises Questions with Answers The Universe and Solar System | Term 1 Unit 1 | Geography | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 1 அலகு 1 : பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் : வினா விடை - பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் | பருவம் 1 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 1 அலகு 1 : பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம்