Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) - தமிழ்நாட்டுப் பொருளாதாரம்
   Posted On :  07.10.2023 06:12 am

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) - தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போன்றதே மாநில உள்நாட்டு உற்பத்தியாகும். மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு மாநிலத்தின், ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பாகும்.

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP)

மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போன்றதே மாநில உள்நாட்டு உற்பத்தியாகும். மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு மாநிலத்தின், ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பாகும்.

தமிழ்நாடு பொருளாதார மற்றும் புள்ளியியல் இயக்கத்தின் ஆய்வின் படி, நம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDSP) 2016-17 நிதியாண்டில் 207.8 பில்லியன் டாலராக உள்ளது. நம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உலக அளவில் குவைத் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகவும், வாங்கும் சக்தியின் அடிப்படையில் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் (UAE) மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் சமமாகவும் உள்ளது.

பிற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடும் போது தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமாக உள்ளது.

அட்டவணை 11.5 உலக நாடுகளுடன் தமிழ்நாட்டு GSDP-ஓர் ஒப்பீடு



(ஆதாரம்: IMF அவுட்லுக் ஏப்ரல் 2017)


1. துறை வாரியாகப் பங்களிப்பு

தமிழ்நாட்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) சேவைத் துறையானது 63.70% பங்களிப்புடன் முதலிடத்திலும், தொழில் துறை 28.5% பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. வேலை வாய்ப்பைப் பொருத்த மட்டில் வேளாண்மை முக்கியப் பங்கு வகித்தாலும் அதனுடைய மாநில உள் நாட்டு உற்பத்தியில் பங்களிப்பானது 7.76% ஆக குறைந்துள்ளது. சேவைத்துறை மற்றும் தொழில்துறை வேகமாக வளர்கின்றன. இந்திய அளவிலும், தமிழ்நாட்டளவிலும், வேளாண்மை பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பும் உணவும் வழங்குகிறது. ஆனால் குறைந்த வேகத்திலேயே அதன் வளர்ச்சி உள்ளது. இந்த நிலையினால், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.



2. தனிமனிதர் வருமானம்

தமிழ் நாட்டின் தனிமனிதர் வருமானம் 2200 டாலர்களுடன், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களைக் காட்டிலும், உயர்வாக உள்ளது. தமிழ்நாட்டின் தலாவருமானம், 2018ல் உள்ள புள்ளிவிபரங்களின்படி இந்திய சராசரி அளவை விட 1.75 மடங்கு அதிகமாக உள்ளது. அதே போல் பல நாடுகளுடன் ஒப்பிடும் போது அந்நாடுகளை விட அதிகமாகவும் உள்ளது. ரூபாயின் அடிப்படையில் 2010-11 ல் தமிழ்நாட்டின் தலாவருமானம் ₹1,03,600 ஆக இருந்தது, 2017-18ல் ₹1,88,492 ஆக உயர்ந்துள்ளது (வரவு செலவு அறிக்கையின்படி

அட்டவணை 11.6-தமிழக தலாவருமானம் பிற நாடுகளுடன் ஒப்பீடு


(ஆதாரம் : உலக வங்கியின் தேசிய கணக்குகள் OECD தேசிய கணக்குகள்)

தமிழ்நாட்டின் தலா வருமானம் மற்ற தென்மாநிலங்களுடன் கீழ் உள்ளவாறு ஒப்பீடு செய்யப்படுகிறது.

அட்டவணை 11.7 தலா வருமானம் (ரூபாயில்) (2015-16) பிற மாநிலங்களுடன் ஒப்பீடு


(ஆதாரம்: இந்திய ரிசர்வ் வங்கி நியூடெல்லி 17 பிப்ரவரி 2017)

11th Economics : Chapter 11 : Tamil Nadu Economy : Gross State Domestic Product (GSDP) - Tamil Nadu Economy in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம் : மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்