பொருளாதாரம் - ஆற்றல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் | 11th Economics : Chapter 11 : Tamil Nadu Economy
ஆற்றல்
பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல மின்னாற்றலை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு பிற தென் மாநிலங்களைவிட முன்னணியில் உள்ளது.
அட்டவணை 11.9 தென் மாநிலங்களில் நிறுவப்பட்ட மின் பயன்பாட்டுத் திறன்
(Source: Central Electricity Authority, Ministry of Power, Government of India. Retrieved Jan.2017.)
நிறுவப்பட்ட திறன் அளவில் தமிழ்நாடு பிற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது. முப்பந்தல் காற்றாலை மையம், கிராம மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரமாக உள்ளது. கோயம்புத்தூர், பொள்ளாச்சி, தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள் தவிர நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிதாக காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் 2% மின் தேவைகளை நிறைவு செய்கிறது. இது இந்தியாவின் காற்றாலை உற்பத்தியில் பாதியளவு ஆகும். (2000 மெகாவாட்கள்).
கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணுமின் நிலையங்களாகும்.
(ஆதாரம்: மத்திய மின் துறை அமைச்சகம் -ஜனவரி-2017 அறிக்கை )
2. அனல்மின் ஆற்றல்
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வெப்ப ஆற்றலில் அதிக அளவு அத்திப்பட்டு (வட சென்னை), எண்ணூர், மேட்டூர், நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களிலிருந்து பெறப்படுகிறது.
டீசலை அடிப்படையாகக் கொண்ட அனல்மின் உற்பத்தியில், தமிழ்நாடு தேசிய உற்பத்தியில் 34% க்கும் மேலாக உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கிறது.
பல்வேறு முறைகளில் தயாரிக்கப்படும் ஆற்றல் அளவுகள் கீழேயுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
அட்டவணை 11.11 வெப்ப ஆற்றல்
(ஆதாரம்: மத்திய மின் துறை அமைச்சகம் -ஜனவரி-2017 அறிக்கை )
3. புனல் மின்சாரம்
தமிழ்நாட்டில் 20க்கு மேற்பட்ட புனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றுள் குந்தா, மேட்டூர், மரவகண்டி, பார்சன் வேலி ஆகியன முக்கியமானவையாகும்.
கீழ்க்கண்ட அட்டவணையிலுள்ளபடி தமிழ்நாடு சூரிய மின் உற்பத்தியில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.
அட்டவணை 11.12 சூரிய சக்தி மின்சாரம்
(ஆதாரம்: MNRE லிருந்து பெறப்பட்ட விபரம்)
தென்தமிழகம் சூரிய மின்சக்தி திட்டங்களைச் செயல்படுத்த உகந்த மண்டலமாகக் கருதப்படுகிறது.
இந்திய அளவில் தமிழ்நாடு அதிகளவு காற்று வழி மின்சாரம் தயாரிக்கும் கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாக உள்ளது. மேலும் கடற்கரை காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஏதுவான இடமாக திருநெல்வேலி, தூத்துக்குடியின் தெற்குப்பகுதி மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்கள் உள்ளன.