சுற்றுலா
முற்காலத்திலிருந்தே தமிழ்நாடு ஒரு சிறந்த சுற்றுலா மையமாகத் திகழ்ந்து வருகிறது. நவீன காலங்களில் நமது மாநிலம் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் முதன்மைப் புகலிடமாக விளங்குகிறது. தமிழ்நாடு அரசு மேற்பார்வையில் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத்துறை (TTDC) தமிழ்நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்துகிறது. இந்திய மாநிலங்களில் 25 கோடி சுற்றுலாப் பயணிகளுடன் (2013) தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இத்துறையின் ஆண்டு சராசரி வளர்ச்சி 16 சதவீதமாக உள்ளது. தோராயமாக 28 இலட்சம் வெளிநாட்டுபயணிகள் மற்றும் 11 கோடி உள்நாட்டுப் பயணிகள் தமிழகத்திற்கு வருகை புரிகின்றனர்.
இந்தியாவில் சுற்றுலா பயணிகளின் வருகை 2016