Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | தமிழ்நாட்டின் சிறப்பு
   Posted On :  07.10.2023 05:55 am

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

தமிழ்நாட்டின் சிறப்பு

2005 ஆம் ஆண்டிலிருந்து இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சியானது விரைவாக உள்ளது.

தமிழ்நாட்டின் சிறப்பு


2005 ஆம் ஆண்டிலிருந்து இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சியானது விரைவாக உள்ளது


தமிழ்நாடு வறுமை ஒழிப்பு செயல்பாடுகளில் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக உள்ளது


இந்திய அளவில் ஏழைகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் ஏழை மக்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைவாக உள்ளது.


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு இரண்டாவது இடத்தில் உள்ளது.


மனித வளர்ச்சி குறியீட்டில் மூன்றாவது இடம் வகிக்கிறது


மூலதன முதலீட்டிலும் (₹ 2.92 இலட்சம் கோடி) மொத்த தொழில் துறை உற்பத்தியிலும் (6.19 இலட்சம் கோடி) மூன்றாவது இடம் வகிக்கிறது.  


தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் 17% பங்களிப்புடன் (37000 அலகுகள்) முதலிடம் வகிக்கிறது. மேலும் தொழில் துறையில் உள்ள வேலை வாய்ப்பில் 16% பங்களிப்பு உள்ளது.


நிதி ஆயோக் அறிக்கையின் படி சுகாதாரக் குறியீட்டில் மூன்றாவது இடம் வகிக்கிறது


உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக உள்ளது.


இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.


புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஒரு முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது.


வணிக வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும் உள்ள கடன் வைப்பு விகிதம் மிகச் சிறப்பாக உள்ளது.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) முதலீட்டுத் திட்டங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது


11th Economics : Chapter 11 : Tamil Nadu Economy : Highlights of Tamil Nadu Economy in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம் : தமிழ்நாட்டின் சிறப்பு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்