Home | 7 ஆம் வகுப்பு | 7வது கணிதம் | தகவல் செயலாக்கம்

மூன்றாம் பருவம் அலகு 6 | 7ஆம் வகுப்பு கணக்கு - தகவல் செயலாக்கம் | 7th Maths : Term 3 Unit 6 : Information Processing

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம்

தகவல் செயலாக்கம்

கற்றல் நோக்கங்கள் • கொடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ் பணிகளைத் திட்டமிடக் கற்று கொள்ளுதல். • செயல்வழிப் படத்தை உருவாக்குவதையும் அதன் பயன்களைக் குறித்தும் அறிந்து கொள்ளுதல்.

அலகு 6

தகவல் செயலாக்கம்


கற்றல் நோக்கங்கள்

கொடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ் பணிகளைத் திட்டமிடக் கற்று கொள்ளுதல்

செயல்வழிப் படத்தை உருவாக்குவதையும் அதன் பயன்களைக் குறித்தும் அறிந்து கொள்ளுதல்.


திட்டமிடல்

குறிப்பிட்ட பணிகளை வரிசைப்படுத்துவதும் அவற்றைச் செயல்படுத்தப் பல்வேறு வகைகளில் சாத்தியப்படக்கூடிய பொருத்தமான ஆதாரத் தரவுகளை ஒதுக்கீடு செய்வதும் திட்டமிடல் என்று அழைக்கப்படுகிறது. திட்டமிடுதல் என்பது தினசரி அல்லது வாராந்திரப் பணிகளைத் திட்டமிடுவது போன்ற குறுகிய காலத் திட்ட வரைவாகவும், பல மாதங்கள் அல்லது வருடங்களுக்கு நீடிக்கும் நீண்ட காலத் திட்டவரைவாகவும் இருக்கலாம்.

ஒரு திட்டமிடல் அட்டவணை என்பது சாத்தியமான பணிகள், நிகழ்வுகள் அல்லது கையாளப்படும் செயல்பாடுகள் போன்றவற்றின் கால வரிசையினை உள்ளடக்கிய பட்டியலாகும்

சூழ்நிலை 1

இங்கு, பாலாவின் பள்ளியில் 2018 நவம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுச் சங்கம் நிகழ்ச்சி நிரல் தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி வருடாந்திர அறிக்கையைச் சமர்ப்பிக்க, கீழேக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கேற்ப, அட்டவணையைத் தயாரிக்கவும்.


நிகழ்ச்சி நிரல்

15-11-2018 

1. விளையாட்டு மைதானத்தைத் தயார்படுத்துதல் - காலை 8.00 மணி 

2. தொடக்கவிழா - காலை 9.00 மணி 

3. ஆசிரியரின் அறிவுறுத்தல்கள் - காலை 9.15 மணி 

4. விளையாட்டுகளுக்கானப் பதிவு - காலை 9.30 மணி 

5. குழு விளையாட்டுகளுக்கான ஒதுக்கீட்டு அறிக்கை - காலை 9.45 மணி 

6. விளையாட்டு நிகழ்வுகளின் தொடக்கம் - காலை 10.00 மணி 

7. உள்ளரங்க விளையாட்டுக்கள் - காலை 11.00 மணி 

8. தனிநபர் நிகழ்வுகள் - மாலை 2.30 மணி

16-11-2018

9. நிகழ்வுகள் - காலை 10.30 மணி 

10. பரிசு வழங்குதல் - மாலை 4.30 மணி 

11. நிறைவு விழா - மாலை 5.15 மணி 

12. தேசிய கீதம் - மாலை 06.00 மணி


செயல்பாடு

உங்கள் பள்ளியிலிருந்து இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல உத்தேசித்து, அதற்கான அறிவிப்பையும் பெற்றோர் அனுமதி கடிதத்தையும் பெறுதல் குறித்து கீழே தரப்பட்டுள்ள கால அட்டவணையில் உங்கள் பள்ளியின் சூழலுக்கேற்ப சுற்றுலா செல்லும் இடம், தேதி மற்றும் நேரத்தை நிரப்பவும்.


செயல்பாடு

கபடி விளையாட்டுக்கான அணி ஒதுக்கீட்டைத் தெளிவுப்படுத்தும் விளக்கப்படம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது



அணி ஒதுக்கீடு விளக்கப்படத்தைப் பயன்படுத்தி, மேலே கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி அட்டவணையை நிரப்பவும்.

றிவுறுத்தல்கள்

● கால் இறுதிப் போட்டியில் பங்குபெற 8 பள்ளியின் அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

A முதல் H வரை 8 அணிகளுக்கும் பெயரிடப்பட்டுள்ளது.

● 2 விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெறும்

● அணி A மற்றும் அணி E ஆகிய இரண்டு அணியினர் முதல் அரையிறுதிப் போட்டியிலும் அணி D மற்றும் அணி

H ஆகிய இரண்டு அணியினர் இரண்டாவது அரையிறுதிப் போட்டியிலும் விளையாடுகின்றனர்.

● இறுதிப் போட்டியில், அணி H, அணி E யை எதிர்த்து விளையாடி வெற்றி பெறுகிறது 

அரை இறுதியில் பங்குபெற்ற அணிகளின் பெயர்கள் 


1) __________ மற்றும் ________ 

2) __________ மற்றும் ________

இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்ற அணி ______


செயல்பாடு

கீழேக் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பயன்படுத்தி 7 ஆம் வகுப்பின் மாதிரி கால அட்டவணையை நிரப்பவும்.


அறிவுறுத்தல்கள்

● அனைத்து பாடங்களுக்கும் 2 பிரிவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

● ஓவியத்திற்கும், பாட்டிற்கும் பிற்பகலில் பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

● உடற்கல் வி பாடப்பிரிவேளையினை காலை வேளையில் ஒன்றும் பிற்பகலில் ஒரு பாடவேளையும் ஆக ஒதுக்கீடு

செய்யப்பட வேண்டும்.

● நூலகப் பாடவேளை இரண்டாவதுப் பாடப் பிரிவேளை ஆகத் தான் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

Tags : Term 3 Chapter 6 | 7th Maths மூன்றாம் பருவம் அலகு 6 | 7ஆம் வகுப்பு கணக்கு.
7th Maths : Term 3 Unit 6 : Information Processing : Information Processing Term 3 Chapter 6 | 7th Maths in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம் : தகவல் செயலாக்கம் - மூன்றாம் பருவம் அலகு 6 | 7ஆம் வகுப்பு கணக்கு : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 6 : தகவல் செயலாக்கம்