புள்ளியியல் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7ஆம் வகுப்பு கணக்கு - பாடச்சுருக்கம் | 7th Maths : Term 3 Unit 5 : Statistics
பாடச்சுருக்கம்
● நோக்கத்தின் அடிப்படையில், தரவுகளின் பிரதிநிதித்துவ மதிப்பைக் கண்டுபிடிக்கப் பொருத்தமான தரவுகளைச் சேகரித்து ஒழுங்கமைக்க வேண்டும்.
● தரவின் பிரதிநிதித்துவ மதிப்பானது மையப்போக்கு அளவு என அழைக்கப்படுகிறது.
● கூட்டுச்சராசரி என்பது தரவுகளில் மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிரதிநிதித்துவ மதிப்பு. இந்த மதிப்பானது பின்வரும் சூத்திரத்தாலும் கணக்கிடப்படுகிறது.
கூட்டுச் சராசரி = மதிப்புகளின் கூடுதல்/மதிப்புகளின் எண்ணிக்கை
● முகடு என்பது அதிகபட்ச எண்ணிக்கையிலான தரவுகளின் மதிப்பு ஆகும்.
● தரவுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முகடுகள் இருக்கலாம். அதேபோல், முகடு இல்லாமலும் இருக்கலாம்.
● தரவுகள் பெரிய எண்ணிக்கையில் இருந்தால் முகடைக் கண்டுபிடிக்கத் தரவுகளை வரிசைப்படுத்த வேண்டும்.
● தரவுகளிலிருந்து இடைநிலையைக் கண்டுபிடிக்க
(i) தரவுகளை ஏறுவரிசையிலோ அல்லது இறங்குவரிசையிலோ அமைக்கவும்.
(ii) உறுப்புகளின் எண்ணிக்கை (n) ஆனது ஒற்றைப்படை என்றால், பின்னர் (n+1/2) ஆவது உறுப்பானது இடைநிலை ஆகும்.
(iii) உறுப்புகளின் எண்ணிக்கை (n) இரட்டைப்படையாக இருந்தால், பின்னர் (n/2), (n/2+1) ஆவது உறுப்புகளின் சராசரியானது இடைநிலையாகும்.
இணையச் செயல்பாடு
புள்ளியில்
செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப் பெறுவது
படி 1
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள உரலியை தட்டச்சு செய்து அல்லது விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இணையத்தினுள் நுழைந்த பின் ஜீயோ ஜீப்ரா என்னும் இணையப் பக்கத்தில் "கூட்டுச்சராசரி - இடைநிலை - முகடு (Mean – Median - Mode)" என்னும் பணித்தாள் திறக்கும். உங்களது எண்ணை தட்டச்சு செய்வதன் மாணவர்களின் எண்ணிக்கை மாற்றம் பெறும். பின்னர் அந்த இணையப்பக்கத்தின் வலது புறத்தில் கூட்டுச்சராசரி, இடைநிலை மற்றும் முகடு ஆகியவற்றின் மதிப்பைக் காணலாம்.
படி 2
செயல்பாட்டின் உரலி
கூட்டுச்சராசரி - இடைநிலை -முகடு https://www.geogebra.org/m/
f4w7csup#material/sanzgm9n
அல்லது விரைவுக் குறியீட்டை ஸ்கேன் செய்க.