Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | பெரிய அளவிலான தொழிற்சாலைகள்

இந்தியப் பொருளாதாரம் - பெரிய அளவிலான தொழிற்சாலைகள் | 11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence

   Posted On :  06.10.2023 09:19 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்

பெரிய அளவிலான தொழிற்சாலைகள்

பெரிய அளவிலான தொழிற்சாலை என்பது பெரிய உள் கட்டமைப்பு, அதிக மனிதசக்தி, அதிக மூலதன சொத்துக்களை உள்ளடக்குவதாகும்.

பெரிய அளவிலான தொழிற்சாலைகள்

பெரிய அளவிலான தொழிற்சாலை என்பது பெரிய உள் கட்டமைப்பு, அதிக மனிதசக்தி, அதிக மூலதன சொத்துக்களை உள்ளடக்குவதாகும். இது பல தொழிற் சாலைகளை கண்காணித்து ஒரே தொழிற்சாலையின் கீழ் உள்ளடக்குவதாகும். இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை, நெசவு தொழிற்சாலை, ஆட்டோமொபைல் தொழிற்சாலை போன்ற கனரக தொழிற்சாலைகள் அனைத்தும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் ஆகும். கடந்த சில வருடங்களாக தகவல் தொழில்துறையின் அபரிமித வளர்ச்சி மற்றும் அதன் அதிக வருமான உருவாக்கம் பொன்ற காரணங்களினால், தகவல் தொழில்நுட்ப தொழில்களும் பெரிய அளவிலான தொழில்களின் வகையில் சேர்க்கப்பட்டுளது. இந்திய பொருளாதாரமானது பொருளாதார வளர்ச்சி, வெளிநாட்டு பண உருவாக்கம், அதிக நபருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதல் ஆகியவற்றிற்கு பெரும் தொழிற்சாலையை பெரிதும் நம்பியுள்ளது. பெரும் நிறுவனங்களோ அதிக இலாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் என பொருளியல் கோட்பாடுகள் கூறியுள்ளன பின்வருபவை பெரிய அளவிலான தொழிற்சாலையானவை ஆகும்.


1) இரும்பு எஃகு தொழிற்சாலை


முதல் எஃகு தொழிற்சாலை ஜாரியாவிலுள்ள குல்டி என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. மேற்கு வங்காளத்தில் உள்ள "வங்காள இரும்பு தொழில்" கம்பெனி 1870 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது

1907ல் பெரிய அளவிலான இரும்பு எஃகு தொழிற்சாலை (TISCO) ஜாம்ஷெட்பூரிலும், அதனை தொடர்ந்து TISCO தொழிற்சாலை 1919 பான்பூரிலும் தொடங்கப்பட்டன. இவை இரண்டும் தனியார் துறை ஆகும்

முதன் முதலில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம் பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்ரய்யா இரும்பு எஃகு தொழில் ஆகும்.

பொதுத்துறையில் எஃகு நிறுவனம்


இடம் : உதவி

ரூர்கேலா (ஒரிசா) - ஜெர்மனி அரசு

பிலாய் (மத்தியபிரதேசம்) - ரஷ்யா அரசு

துர்காபூர் (மேற்குவங்காளம்) - இங்கிலாந்து அரசு

பொகாரோ (ஜார்கண்ட்) - ரஷ்யா அரசு

பர்னபூர் (மேற்கு வங்காளம்) - தனித்துறையிலிருந்து பெறப்பட்டது.

விசாகப்பட்டினம் (ஆந்திரா) - ரஷ்யா அரசு

பெர்ன்பூர் (மேற்கு வங்காளம்) - தனியார் துறையிடமிருந்து 1976-ல் பெறப்பட்டது

சேலம் (தமிழ்நாடு) - இந்திய அரசு (வெளிநாட்டு உதவி இல்லை )

விஜய் நகர் (கர்நாடகா) - இந்திய அரசு

பத்ராவதி (கர்நாடகா) - நாட்டுடைமையாக்கப்பட்ட விஸ்வேஸ்ரயா இரும்பு எஃகு நிறுவம் (மத்திய மாநில அரசுக்கு சொந்தம்)

மேற்கூறப்பட்ட அனைத்தும் SAIL ஆல் நிர்வகிக்கப்படுகின்றன தற்போது, TISCO தவிர, மற்ற அனைத்து முக்கிய இரும்பு எஃகு நிறுவனங்களும் பொதுத்துறையின் கீழ் இயங்குகின்றன

இந்திய எஃகு நிறுவனம் (SAIL) 1974ல் நிறுவப்பட்டது. மற்றும் எஃகு துறையை மேம்படுத்தும் பொறுப்பும் அதற்கு அளிக்கப்பட்டது

தற்போது இந்தியா எஃகு உற்பத்தியில் உலக அளவில் எட்டாவது உயரிய இடத்திலுள்ளது.


2) சணல் தொழில் 

இந்தியா போன்ற நாட்டிற்கு சணல் தொழில் மிக முக்கியமானதாகும் காரணம் இத்தொழில் மூலம் வெளிநாட்டு செலவாணி ஈட்டப்படுகிறது. மேலும் இத்தொழில் கணிசமான வேலை வாய்ப்பை அளிக்கிறது.

1855-ல் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ரேஷ்ரா எனும் ஊரில் நவீனமயப்படுத்தப்பட்ட தொழிற்சாலை முதல்முறையாக உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் சணல் தொழில், பாரம்பரியமாக ஏற்றுமதி செய்து வருகிறது. உலக அளவில் இந்தியா கச்சா சணல் உற்பத்தியிலும் சணல் பொருட்கள் தயாரிப்பிலும் முதலிடத்திலும் சணல் பொருட்கள் ஏற்றுமதியில் இரண்டாமிடத்திலும் உள்ளது.


3) பருத்தியும் நெசவுத் தொழிலும்

இந்தியாவில் நெசவுத் தொழில் மிகப் பழமையானதாகும். அதிக  தொழிலாளர்களையும் கொண்ட துறையாகும்

இத்துறையானது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பெரிய அளவிளானதும் பரந்துபட்ட அளவிலும் வளர்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4%ம், மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியில் 20%ம் ஏற்றுமதி வருவாயில் மூன்றில் ஒரு பங்கும் இத்துறையின் மூலம் கிடைக்கிறது.

கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள குளோஸ்டர் துறைமுக நகரில் 1818ல் முதல் நவீன துணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது. ஆயினும் இவ்வாலை சிறப்பாக இயங்கவில்லை.

அடுத்ததாக 1854ல் மும்பையில் கே.ஜி. என் டேபேர் (DABER) என்பவரால் "மும்பையின் நூற்பு மற்றும் நெசவு கம்பெனி (MUMBAI'S SPINNING AND WEAVING CO)உருவாக்கப்பட்டது.


4) சர்க்கரை தொழில்

இந்தியாவில் வேளாண் சார்புத் தொழில்களில் பருத்தி தொழிலுக்கு அடுத்தபடியாக சர்க்கரைத் தொழில் உள்ளது.

உலக அளவில் இந்தியா பெரிய அளவிலான சர்க்கரை உற்பத்தியாளராகவும் பெரிய அளவிலான நுகர்வோராகவும் இருக்கிறது. சர்க்கரை உற்பத்தியில் இந்திய அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவை மகாராஷ்டிரா மாநிலம் மட்டுமே உற்பத்தி செய்கிறது. அடுத்தபடியாக உத்திரபிரதேச மாநிலம்.


5) உரத்தொழில் 

இந்தியாவில் நைட்ரஜனை பயன்படுத்தி தயாரிக்கும் உரத்தொழிலானது உலகின் மூன்றாவது பெரிய தொழிலாகும்.


6) காகிதத்தொழில் 

1812-ல் வங்கத்திலுள்ள செராம்பூர் ஊரில் இயந்திரத்தால் செயல்படும் காகித ஆலை உருவாக்கப்பட்டது.

உலகிலுள்ள காகித தொழிற்சாலைகளின் பட்டியலில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது


7) பட்டுத்தொழில் 

இயற்கையான பட்டுத் தயாரிப்பில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது சீனா முதலிடம். தற்போது உலக அளவில் இந்தியாவின் உற்பத்தி 16% ஆகும்.

இந்தியா மட்டுமே கீழ்க்கண்ட வணிக அடிப்படையிலான 5 வகையான பட்டுத்துணிகளை உற்பத்தி செய்கிறது. அதாவது மல்பெரி பட்டு, வெப்ப மண்டல டஸ்சர் பட்டு, ஓக் டஸ்ஸர், பட்டு எரி மற்றும் முகா பட்டு ஆகியன.


8) பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள டிக்பாய் (DIGBOI) எனும் ஊரில் 1889ல் வெற்றிகரமாக முதல்முறையாக எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் எண்ணெய் இருப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டு எண்ணெய்யை வெளியில் எடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இத்தகைய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை எடுப்பதற்காக உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன் (DEHRADUN) நகரில் 1956ல் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் (ONGC) உருவாக்கப்பட்டது.

Tags : Indian Economy இந்தியப் பொருளாதாரம்.
11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence : Large Scale Industries Indian Economy in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும் : பெரிய அளவிலான தொழிற்சாலைகள் - இந்தியப் பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்