ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - ஆடிகள் | 8th Science : Chapter 3 : Light

   Posted On :  27.07.2023 12:55 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்

ஆடிகள்

நமது அன்றாட வாழ்வில் பல்வேறு தேவைகளுக்கு நாம் ஆடிகளைப் பயன்படுத்துகிறோம். முக்கியமாக ஒப்பனை செய்துகொள்வதக்கு அவை நமக்கு உதவுகின்றன.

ஆடிகள்

நமது அன்றாட வாழ்வில் பல்வேறு தேவைகளுக்கு நாம் ஆடிகளைப் பயன்படுத்துகிறோம். முக்கியமாக ஒப்பனை செய்துகொள்வதக்கு அவை நமக்கு உதவுகின்றன. தன் மீது விழும் ஒளியை எதிரொளிக்கக் கூடிய பளபளப்பான பரப்பைக் கொண்ட ஒளியியல் சாதனமே ஆடி ஆகும். பொதுவாக ஆடி என்பது,

16 ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டிலுள்ள வெனிஸ் நகரத்தில் கண்ணாடித் தகட்டின்மீது எதிரொளிக்கும் உலோகத்தை மெல்லிய படலமாகப் பூசும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. அவர்கள் பாதரசம் மற்றும் வெள்ளி கலந்த உலோகக்கலவையினை இதற்குப் பயன்படுத்தினர். தற்காலத்தில், கண்ணாடித் தகட்டின் மீது உருகிய அலுமினியம் அல்லது வெள்ளி உலோகத்தினை மெல்லிய படலமாகப் பூசி,ஆடியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


ஒருபுறம் அலுமினியம் அல்லது வெள்ளிப் பூச்சுப் பூசப்பட்ட, பிம்பத்தினை உருவாக்கக் கூடிய கண்ணாடித்துண்டு ஆகும். ஆடிகள், சமதள மற்றும் வளைந்த பரப்புடையவை. வளைவு ஆடிகள், கோள, உருளை, பரவளைய மற்றும் நீள்வட்ட வடிவ பரப்புகளைக் கொண்டுள்ளன. ஒரு ஆடியின் வடிவமே அது உருவாக்கும் பிம்பத்தினைத் தீர்மானிக்கிறது. சமதள ஆடிகள் ஒரு பொருளின் சரியான பிம்பத்தினை உருவாக்குகின்றன. அதே வேளையில் வளைவு ஆடிகள் பெரிதான அல்லது சிறிதான பிம்பங்களை உருவாக்குகின்றன.

 

1. கோளக ஆடிகள்

கோளக ஆடிகள் வளைவு ஆடிகளின் ஒரு வகை ஆகும். வளைவு ஆடி ஒரு கோளத்தின் பகுதியாகக் கருதப்பட்டால் அது 'கோளக ஆடி என அழைக்கப்படுகிறது. இது ஒரு கோளத்தின் மேற்பரப்பிலிருந்து வெட்டப்பட்ட சிறுபகுதியினைப் போன்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். ஆடியின் ஒரு பகுதியில் வெள்ளிப்பூச்சு பூசப்பட்டிருக்கும். மற்றொரு பகுதியில் ஒளி எதிரொளிப்பு நிகழ்கிறது.



குழி ஆடி

ஒரு கோளக ஆடியின் குழிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பு நிகழ்ந்தால் அது குழி ஆடி அழைக்கப்படுகிறது. இவை அவற்றிற்கு அருகில் வைக்கப்பட்ட பொருளினை பெரிதாக்கிக் காட்டுகின்றன. ஒப்பனைக்காகப் பயன்படுத்தப்படும் கண்ணாடி, குழி ஆடிக்கான உதாரணமாகும்.

குவி ஆடி

ஒரு கோளக ஆடியின் குவிந்த பரப்பில் ஒளி எதிரொளிப்பு நிகழ்ந்தால் அது குவி ஆடி என அழைக்கப்படுகிறது. இவ்வகை ஆடிகளால் உருவாக்கப்படும் பிம்பம் பொருளின் அளவைவிடச் சிறியதாக இருக்கும். பின்புறம் வரக்கூடிய பிற வாகனங்களைக் காண்பதற்காக வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஆடி குவி ஆடிக்கான உதாரணமாகும்.

வாகனங்களில் பின்புற பார்வைக் கண்ணாடியாகப் பயன்படுத்தப்படும் குவி ஆடிகளில் இக்கண்ணாடியில் தோன்றும் பிம்பமானது அதன் உண்மைத் தொலைவை விட அருகில் உள்ளது என்ற எச்சரிக்கை வாசகம், எழுதப்பட்டிருக்கும். ஏனெனில், கண்ணாடியில் பார்க்கும்போது வாகனங்கள் வெகு தொலைவில் வருவதுபோல் நமக்குத் தோன்றும்.

 

2. பரவளைய ஆடிகள்

பரவளையத்தைப் போன்ற வடிவத்தை உடைய ஆடியாள பரவளைய ஆடி ஒரு வகை வளைவு ஆடியாகும். இது குழிந்த எதிரொளிக்கும் பரப்பினைக் கொண்டிருக்கும். இந்தப் பரப்பானது அதன்மீது விழும் ஒளிக்கற்றை முழுவதையும் குவியப் புள்ளியில் குவிக்கின்றது.


இதேபோல், ஆடியின் குவியப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஒளிமூலம் ஒன்றிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகள், துப்பரப்பின் மீதுபட்டு, பரவளைய ஆடியின் முதன்மை அச்சிற்கு இணையான திசையில் விரிந்து செல்கின்றன. எனவே, இக்கதிர்கள் பொலிவு குறையாமல் மிக நீண்ட தொலைவிற்குப் பயணிக்கக் கூடியவை.

பரவளைய அழைக்கப்படும் பரவளைய ஆடிகள் ஒளி ஆற்றல், வெப்ப ஆற்றல், ஒலி ஆற்றல் மற்றும் ரேடியோ அலைகள் போன்றவற்றை சேகரிக்க அல்லது வீழ்த்தப் பயன்படுகின்றன. இவை எதிரொளிக்கும் தொலைநோக்கிகள், ரேடியோ தொலைநோக்கிகள் மற்றும் ஒலிப்பெருக்கிகளிலும் பயன்படுகின்றன. மேலும். சூரிய சமையற்கலன்கள் எதிரொளிப்பான்கள் என்றும் மற்றும் சூரிய வெப்பச் சூடேற்றி ஆகியவற்றிலும் இவை பயன்படுகின்றன.

கிரேக்க - உரோமானியர் காலத்திலிருந்தே பரவளைய ஆடிகள் வேலை செய்யும் தத்துவமானது அறியப்பட்டிருந்தது. கணித வல்லுநர் டையோகிள்ஸ் எழுதிய எரிக்கும் ஆடிகள்' என்ற நூலில் இதன் வடிவம் பற்றிய தகவல் முதன்முதலாக இடம்வற்றுள்ளது. இபின் ஷால் என்ற இயற்பியலாளர் 10 ஆம் நூற்றாண்டில் பரவளைய ஆடிகளைப் பற்றி ஆராய்ந்தார். முதலாவது பரவளைய ஆடியை 1888ஆம் ஆண்டு ஜெர்மன் இயற்பியலாளர் ஹென்றி ஹெர்ட்ஸ் என்பவரால் எதிரொளிக்கும் வானலை வாங்கி (antenna) வடிவில் வடிவமைக்கப்பட்டது.

Tags : Light | Chapter 3 | 8th Science ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 3 : Light : Mirrors Light | Chapter 3 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல் : ஆடிகள் - ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்