ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வளைவு ஆடியின் பயன்கள் | 8th Science : Chapter 3 : Light
வளைவு ஆடியின் பயன்கள்
குழி
ஆடிகள்
1. பெரிதான பிம்பத்தை உருவாக்குவதால் ஒப்பனைக் கண்ணாடியாகவும்,
முகச் சவரக் கண்ணாடியாகவும் குழி ஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
2. ஒளியை நீண்ட தூரத்திற்குப் பரவச் செய்வதால் டார்ச் விளக்குகள்,
தேடும் விளக்குகள் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் குழிஆடிகள் பயன்படுகின்றன.
3. குழி ஆடிகள் பரந்த பரப்புகளிலிருந்து ஒளியினைச் சேகரித்து,
ஒரு புள்ளியில் குவியச் செய்கின்றன. எனவே, இவ்வகை ஆடிகள் சூரிய சமையற்கலன்களில் பயன்படுகின்றன.
4. நிழலை ஏற்படுத்தாமல் உறுப்புகளைத் தெளிவாகக் காட்டுவதால்,
கண், காது, மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியினைச் சோதித்துப் பார்ப்பதற்காக மருத்துவர்கள்
அணிந்திருக்கும் தலைக் கண்ணாடிகளில் குழிஆடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
5. எதிரொளிக்கும் தொலைநோக்கிகளிலும் குழிஆடிகள் பயன்படுகின்றன.
குவி
ஆடிகள்
1. குவி ஆடிகள் வாகனங்களில் பின்காட்சி ஆடிகளாகப்பயன்படுகின்றன.
இவை வெளிப்புறம் வளைந்திருப்பதால் நேரான பிம்பம் மற்றும் அகன்ற பார்வைப் புலத்தைத்
தருகின்றன.
2. மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், பள்ளிகள் மற்றும் அங்காடிகளில்
இவை பயன்படுகின்றன. பெரும்பாலும் குறுகிய வளைவுகள் கொண்ட கட்டடத்தின் சுவர்கள் அல்லது
கூரைகளில் இந்த ஆடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
3. சாலைகளின் மிகவும் குறுகிய மற்றும் நுட்பமான வளைவுகளில் குவி
ஆடிகள் பயன்படுகின்றன.
செயல்பாடு 2
அன்றாட
வாழ்வில் பயன்படுத்தப்படும் குழி ஆடி மற்றும் குவி ஆடிகளைப் பட்டியலிடுக.