Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | தமிழகத்தின் செயல்பாடு
   Posted On :  07.10.2023 05:57 am

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

தமிழகத்தின் செயல்பாடு

மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் சில பொருளாதாரக் குறியீடுகளில் சிறந்து விளங்குகின்றன.

தமிழகத்தின் செயல்பாடு

மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் சில பொருளாதாரக் குறியீடுகளில் சிறந்து விளங்குகின்றன. கேரளா கல்வியறிவு, குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது. ஆனால் தமிழ்நாடானது சுகாதாரம், உயர்கல்வி, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வேலையின்மை ஒழிப்பு போன்றவற்றில் மிகச் சிறப்பாகவும் பிற மாநிலங்களைவிட மேலானதாகவும் உள்ளது.

மூன்றாம் இடத்தில் தமிழ்நாட்டின் சுகாதாரக் குறியீடு

தமிழ்நாட்டின் சுகாதாரக் குறியீடானது கேரளம் பஞ்சாப் மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் பச்சிளங் குழந்தை இறப்பு வீதம் 14 ஆகும். இது பிற மாநிலங்களைக் காட்டிலும் மிகக் குறைவு. மேலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு வீதம் 2014-ல் 21 ஆகவும், 2015-ல் 20 ஆகவும் குறைந்துள்ளது.

(ஆதாரம்: சுகாதாரமாநிலம் - முற்போக்கு இந்திய அறிக்கை-2018 - நிதி ஆயோக்)

பெரும்பான்மையான மக்களுக்கான சமூக நலக் கொள்கைகளைக் கொண்டிருப்பதே தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்குக் காரணமாகும். எடுத்துக்காட்டாக பெரும்பான்மை மக்களுக்குப் பரவலாக்கப்பட்டுள்ள பொது விநியோகத்திட்டம், மதிய உணவுத் திட்டம், பொது சுகாதாரக் கட்டமைப்பு போன்றவற்றின் மூலம் நலத்தை மேம்படுத்துவதை இங்கு குறிப்பிடலாம்.

11th Economics : Chapter 11 : Tamil Nadu Economy : Performance of Tamil Nadu Economy in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம் : தமிழகத்தின் செயல்பாடு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 11 : தமிழ்நாட்டுப் பொருளாதாரம்