Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 3 : Light

   Posted On :  09.09.2023 03:07 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

• ஒளியை எதிரொளிக்கக் கூடிய பளபளப்பான பரப்பைக் கொண்ட ஒளியியல் கருவி ஆடி எனப்படும்.

• வளைவு ஆடிகள் கோள, உருளை, பரவளைய மற்றும் நீள்வட்ட வடிவ பரப்புகளைக் கொண்டுள்ளன.

• வளைவு ஆடியானது, கோளத்தின் ஒருபகுதியாக இருந்தால் அது கோளக ஆடி எனப்படும்.

• குழிந்த பரப்பில் எதிரொளிப்பினை ஏற்படுத்தும் வளைவு ஆடி குழி ஆடி எனப்படும்.

• குவிந்த பரப்பில் எதிரொளிப்பினை ஏற்படுத்தும் வளைவு ஆடி குவி ஆடி எனப்படும்.

• ஆடியின் குவிய தொலைவானது வளைவு ஆரத்தின் மதிப்பில் பாதி ஆகும்.

• மெய் பிம்பத்தை திரையில் பிடிக்க முடியும். மாய பிம்பத்தை திரையில் பிடிக்க முடியாது.

• குழி ஆடிகள் மெய்பிம்பத்தினை உருவாக்கும். எனவே, அவற்றை திரையில் பிடிக்கலாம். குழி ஆடிகள் அலங்கார ஆடிகளாகப் பயன்படுகின்றன.

• வாகனங்களில் பின்காட்சி ஆடியாக குவிஆடிகள் பயன்படுகின்றன.

•  ஆடிகளின் புறப்பரப்பினைப் பொருத்து எதிரொளிப்பினை இரண்டாக வகைப்படுத்தலாம். அவை: ஒழுங்கான எதிரொளிப்பு மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு.

•  ஆடிகளில் தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை ஆடிகளுக்கிடையே உள்ள சாய்வுக் கோணத்தைச் சார்ந்தது.

 

சொல்லடைவு

வளைவு மையம் ஆடி உருவாக்கப்பட்ட கோளத்தின் மையம்.

வளைவு ஆரம்  கோளத்தின் மையத்திற்கும், அதன் முனைக்கும் இடைப்பட்ட தொலைவு.

ஆடி மையம் ஆடியின் பரப்பில் முதன்மை அச்சு ஆடியைச் சந்திக்கும் புள்ளி. 

முதன்மை அச்சு ஆடிமையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் நேர்க்கோடு

குவியம் எதிரொளிக்கப்பட்ட கதிர்கள் முதன்மை அச்சில் குவியும் புள்ளி அல்லது முதன்மை அச்சிலிருந்து விரிந்து செல்வது போல் தோன்றும் புள்ளி.

குவிய தொலைவு ஆடி மையத்திற்கும், முதன்மைக் குவியத்திற்கும் இடைப்பட்ட தொலைவு.

எதிரொளித்தல்  பளப்பான மென்மையான பொலிவான பரப்பில் ஒளிக்கதிர்கள் பட்டு திரும்பும் நிகழ்வு.

கலைடாஸ்கோப் எண்ணற்ற வியத்தகு பிம்பங்களை உருவாக்கும் சாதனம்.

பெரிஸ்கோப் ஒரு பொருளைச் சுற்றியுள்ள அல்லது அதன் மேற்பகுதியில் உள்ள பொருள்களைப் பார்ப்பதற்குப் பயன்படும் கருவி.

ஒளிவிலகல் ஒளியானது ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும்போது ஒளிபடும் புள்ளியில் செங்குத்துக் கோட்டினைப் பொருத்து ஒளியின் சாய்வு.

ஒளிவிலகல் எண் காற்றில் ஒளியின் திசைவேகத்திற்கும், ஒரு குறிப்பிட்ட ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு.

ஒளியின் நிறப்பிரிகை வெண்மைநிற ஒளியானது ஒளி ஊடுருவும் ஊடகத்தின் வழியே செல்லும்போது ஏழு வண்ணங்களாகப் ( அலைநீளம்) பிரிகை அடையும் நிகழ்வு.




பிற நூல்கள்

1. Frank New Certificate Physics (2017). Frank Bros. & Co., Chennai.

2. Concise Physics (2017). Selena Publishers, New Delhi.

3. Cambridge IGCSC Physics (2002). Hodder education, London.

4. Physics for Standard XI (2005). Tamil Nadu Textbook Corporation, Chennai.

 

இணையதள வளங்கள்

1. https://farside.ph.utexas.edu

2. https://britannica.com

3. https://studyread.com

4. https://sciencelearn.org

Tags : Light | Chapter 3 | 8th Science ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 3 : Light : Points to Remember, Glossary, Concept Map Light | Chapter 3 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்