Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | அலகு 10 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 10 : Changes Around Us

   Posted On :  09.09.2023 10:50 pm

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

ஒரு வேதி வினை என்பது நிலையான, மீளாத் தன்மையுடைய மற்றும் புதிய பொருள்களை உருவாக்கும் நிகழ்வாகும்.

ஒரு வேதி வினையில் வினைபடு பொருள்கள் வினைபுரிந்து வினைவிளை பொருள்களை உருவாக்குகின்றன.

இயல்பான நிலையில் சேர்தல், வினைபடுபொருள்களின் கரைசல், மின்சாரம், வெப்பம், ஒளி மற்றும் வினைவேக மாற்றி ஆகியவை வேதிவினையைத் தீர்மானிக்கும் காரணிகளாகும்.

துருப்பிடித்தல் என்பது இரும்புப் பொருள்கள் நீர் மற்றும் ஆச்சிஜனுடன் சேர்ந்து வினைபட்டு நீரேறிய பெர்ரிக் ஆக்சைடை உருவாக்கும் வேதிவினையாகும்.

மின்னாற் பகுப்பு என்பது மின்சாரத்தின் மூலம் வேதிவினைகளை நிகழ்த்துவதாகும்.

ஒளிவேதிவினை என்பது ஒளியின் மூலம் நிகழும் வேதி வினையாகும்.

வெப்பவேதிவினை என்பது வெப்பத்தின் மூலம் நிகழும் வேதி வினையாகும்.

ஒரு வேதிவினையின் மாற்றியமைக்கக்கூடிய வேகத்தை பொருள்கள் வினைவேக மாற்றிகள் எனப்படும். அச்செயல் வினைவேக மாற்றம் எனப்படும்.

வேதிவினைகளால் உணவு கெட்டுப்போதல், பழங்கள், காய்கறிகள் கெட்டுப்போதல், அமில மழை, பசுமை இல்ல விளைவு, ஓசோன் படல பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.

பல்வேறு மனித செயல்பாடுகளால் புவியின் சராசரி வெப்பநிலை அச்சமுட்டும் அளவிற்கு உயரும் ஒரு மோசமான நிலையே புவி வெப்பமாதல் எனப்படும்.

நுண்ணுயிரிகளால் ஏற்படும் வேதி வினைகளின் மூலம் உணவுப் பொருள்களில் துர்நாற்றம் ஏற்படுவதே ஊசிப்போதல் எனப்படும்.

 

சொல்லடைவு

வினைபடு பொருள் வேதிவினையில் ஈடுபடும் பொருள்

வினைவிளை பொருள் வேதிவினையில் உருவாகும் புதிய பொருள்

வினைவேக மாற்றி ஒரு வேதி வினையின் வேகத்தை மாற்ற உதவும் பொருள்

எரிதல் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிதல்

வீழ்படிவு வேதி வினை மூலம் உருவாகி கரைசலின் அடியில் படியும் புதிய பொருள்.

 ஒசோன் மூன்று ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்த மூலக்கூறு

ஈஸ்ட் ஒருவகையான ஒருசெல் பூஞ்சை

உரம் செயற்கை அல்லது வேதியியல் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட எரு.

வீணாதல் உணவுப்பொருள்கள் கெடுதல்.

நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள் கொழுப்பில் உள்ள நீண்ட கார்பன் சங்கிலித் தொடர் கொண்ட அமிலங்கள்.

ஆக்சிஜனேற்றம் ஆக்சிஜனைச் சேர்த்தல்

என்சைம் அல்லது நொதி உயிர் வேதி வினைகளில் வினைவேக மாற்றியாக செயல்படும் பொருள்.

உயிரிவேதி வினைகள் உயிரியல் பொருள்களில் நடைபெறும் வேதி வினைகள்

நிறமிகள் . நிறம் தரும் பொருள்கள்

புவி வெப்பமாதல் பூமியின் சராசரி வெப்பநிலை உயர்தல்.




பிற நூல்கள்

1. Basic chemistry by Karen C.Timberlake and William Timberlake

2. Pradeep's objective chemistry vol-1 by S.N. Dhawan,S.C.Kheterpal,J.R. Mehta

 

இணையதள வளங்கள்

1. https://www.livescience.com

2. www.khanacademy.org/science/chemistry/ chemical reactions

 

 

இணையச் செயல்பாடு

நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

காலநிலை மாற்றத்திற்கான காரணங்களையும் அதன் பாதிப்புகளையும் பற்றி மாணவர்கள் அறிதல்.

படிகள்

படி 1: கீழ்க்காணும் உரலி/விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி என்னும் இணையப் பக்கத்திற்குச் செல்லவும்.

படி 2: "Causes & affects of climate change” என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3: "Causes & affects of climate change” என்ற தலைப்பினைச் சொடுக்கவும்.

படி 4 :கால நிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொள்க.

உரலி : https://video.nationalgeographic.com/video/101-videos/

Tags : Changes Around Us | Chapter 10 | 8th Science நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | அலகு 10 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 10 : Changes Around Us : Points to Remember, Glossary, Concept Map Changes Around Us | Chapter 10 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | அலகு 10 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்