Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | நினைவு கூர்வதற்கான கருத்துகள்

வடிவியல் | கணக்கு - நினைவு கூர்வதற்கான கருத்துகள் | 9th Maths : UNIT 4 : Geometry

   Posted On :  25.09.2023 12:25 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : வடிவியல்

நினைவு கூர்வதற்கான கருத்துகள்

இணைகரத்தின் எதிர்ப்பக்கங்கள் மற்றும் எதிர்க் கோணங்கள் சமம். இணைகரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமக் கூறிடும்.

நினைவு கூர்வதற்கான கருத்துகள்

இணைகரத்தின் எதிர்ப்பக்கங்கள் மற்றும் எதிர்க் கோணங்கள் சமம்

இணைகரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமக் கூறிடும்

இணைகரத்தின் மூலைவிட்டங்கள் இணைகரத்தை இரு சர்வசம முக்கோணங்களாகப் பிரிக்கும்

ஒரு நாற்கரத்தின் எதிர்ப்பக்கங்கள் சமம் எனில் அது ஓர் இணைகரமாகும்

ஒரே அடிப்பக்கத்தையும் இரு இணைகோடுகளுக்கு இடையேயும் அமையும் இணைகரத்தின் பரப்புகள் சமம்

ஒரே அடிப்பக்கத்தையும் இரு இணைகோடுகளுக்கு இடையேயும் அமையும் முக்கோணத்தின் பரப்புகள் சமம்

இணைகரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்து எனில், அது ஒரு சாய்சதுரமாகும்.

ஒரே கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் வழியே ஒரே ஒரு வட்டம்தான் வரைய இயலும்

ஒரு வட்டத்தில் சம நீளமுள்ள நாண்கள் வட்ட மையத்தில் சம கோணங்களைத் தாங்கும்

வட்ட மையத்திலிருந்து நாணிற்கு வரையப்படும் செங்குத்து, அந்த நாணை இருசமக் கூறிடும்

ஒரு வட்டத்தில் உள்ள சம நாண்கள் வட்ட மையத்திலிருந்து சமதூரத்தில் இருக்கும்.

ஒரு வட்டவில் மையத்தில் தாங்கும் கோணம் அந்த வில்லைத் தவிர்த்து வட்டத்தின் மீதிப் பரிதியில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் கோணத்தைப் போல் இரு மடங்காகும்

அரைவட்டத்தில் அமையும் கோணம் செங்கோணமாகும்.

ஒரே வட்டத்துண்டில் அமையும் கோணங்கள் சமம்

வட்ட நாற்கரத்தின் ஒவ்வொரு சோடி எதிர் கோணங்களின் கூடுதல் 180° ஆகும்.

வட்ட நாற்கரத்தின் ஒரு பக்கத்தை நீட்டிப்பதால் ஏற்படும் வெளிக்கோணம் உள்ளெதிர் கோணத்திற்குச் சமம்.


இணையச் செயல்பாடு −1

இறுதியில் கிடைக்கப்பெறும் படம் 


படி  − 1 

தேடுபொறியில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் உரலியைத் தட்டச்சு செய்க அல்லது துரித துலங்கள் குறியீட்டை ஸ்கேன் செய்க

படி  − 2

 “Properties: Parallelogram” என்று GeoGebra பக்கத்தில் தோன்றும் . அங்கு “Rotate” மற்றும் “Page” எனும் நழுவல் (slider) தோன்றும் 

படி  − 3

 “Rotate" எனும் நழுவலில் உள்ள கரும்புள்ளியை இழுக்க, முக்கோண வடிவம் இரட்டித்து இணைகர வடிவம் தோன்றும்

படி  − 4 

“Page” எனும் நழுவலில் உள்ள கரும்புள்ளியை இழுக்க, இணைகரத்தின் மூன்று பண்புகள் விளக்கப்படும்.

செயல்பாட்டிற்கான உரலி

இணைகரத்தின் பண்புகள்: https://www.geogebra.org/m/m9Q2QpWD



இணையச் செயல்பாடு −2

செயல்பாட்டின் இறுதியில் கிடைக்கப்பெறுவது  


படி  − 1 

கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி GeoGebra இன் "Angles in a circle" என்னும் பணித்தாளின் பக்கத்திற்குச் செல்க. இப்பணித்தாளில் வட்டம் குறித்த இரண்டு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கும்

படி  − 2 

இரண்டாவது செயல்பாடு "Angles in the segment of a circle". B மற்றும் D புள்ளிகளை இழுத்து கோணங்களைச் சரிபார்க்க. மேலும் "Move" ஐக் கொண்டு வட்டத்தின் ஆரம் மற்றும் நாணின் நீளத்தை மாற்ற இயலும்.

செயல்பாட்டிற்கான உரலி

Angle in a circle: https://ggbm.at/yaNUhv9S or Scan the QR Code.


Tags : Geometry | Maths வடிவியல் | கணக்கு.
9th Maths : UNIT 4 : Geometry : Points to Remember Geometry | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : வடிவியல் : நினைவு கூர்வதற்கான கருத்துகள் - வடிவியல் | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 3 : வடிவியல்