Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | நினைவு கூர்வதற்கான கருத்துகள்

நிகழ்தகவு | கணக்கு - நினைவு கூர்வதற்கான கருத்துகள் | 9th Maths : UNIT 9 : Probability

   Posted On :  23.09.2023 11:06 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு

நினைவு கூர்வதற்கான கருத்துகள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு : நினைவு கூர்வதற்கான கருத்துகள்

நினைவு கூர்வதற்கான கருத்துகள்

ஒரு சோதனையின் மிகச் சரியான முடிவுகளை நாம் கணிக்க முடிந்தால் அது உறுதியான சோதனை என அழைக்கப்படுகிறது.

ஒரு சோதனையின் மிகச் சரியான முடிவுகளை நாம் கணிக்க இயலவில்லை எனில் அது சம வாய்ப்புச் சோதனை என அழைக்கப்படுகிறது.

ஒரு சமவாய்ப்பு சோதனையின் மொத்த விளைவுகளின் கணம், அச்சோதனையின் கூறுவெளி (S) எனப்படும்.

ஒரு சோதனையின் ஒரு குறிப்பிட்ட விளைவோ அல்லது விளைவுகளின் தொகுப்போ நிகழ்ச்சி எனப்படும்.

நிகழ்தகவின் ஒப்பீட்டு நிகழ்வெண் கோட்பாடு, ஒரு விளைவின் நிகழ்தகவானது அந்த விளைவு நடப்பதற்கான விழுக்காட்டிற்கு அருகில் இருக்கும் எனக் கூறுகிறது.

நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் ஒரே மாதிரியாக இருந்தால் அவை சமவாய்ப்பு நிகழ்ச்சிகள் எனப்படுகின்றன.

இரு நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடக்க இயலாது எனில் அவை ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.

• P(E) + P(E') =1 எனில், நிகழ்வுகள் E மற்றும் E' ஆகியவை ஒன்றுக்கொன்று நிரப்பு நிகழ்ச்சிகள் எனப்படும்.

ஒரு நிகழ்ச்சி கண்டிப்பாக நடைபெறும் எனில் அது உறுதியான நிகழ்ச்சி என அழைக்கப்படுகிறது. உறுதியான நிகழ்ச்சியின் நிகழ்தகவின் மதிப்பு சரியாக '1' ஆகும்.

ஒரு நிகழ்ச்சி ஒரு போதும் நடைபெறாது எனில் அது இயலா நிகழ்ச்சி எனப்படுகிறது. இயலா நிகழ்ச்சியின் நிகழ்தகவின் மதிப்பு சரியாக '0' ஆகும்.

 

இணையச் செயல்பாடு

இறுதியில் கிடைக்கப்பெறும் படம்


படி 1

கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி GeoGebra பக்கத்தில் “Probability” என்னும் பணித்தாளிற்குச் செல்க. 'Venn diagram and Basic probability' என்ற தலைப்பில் இரண்டு பணித்தாள்கள் உள்ளன.

படி  − 2

"New Problem" என்ற பகுதியில் சொடுக்கவும். தொடர்புடைய கட்டங்களைச் சொடுக்கி விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம்.

செயல்பாட்டிற்கான உரலி :

நிகழ்தகவு : https://ggbm.at/mj887yua or Scan the QR Code.


Tags : Probability | Maths நிகழ்தகவு | கணக்கு.
9th Maths : UNIT 9 : Probability : Points to Remember Probability | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு : நினைவு கூர்வதற்கான கருத்துகள் - நிகழ்தகவு | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு