தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் - தாவரவியல் - கலைச்சொற்கள் | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants

   Posted On :  08.08.2022 06:29 pm

12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்

கலைச்சொற்கள்

தாவரவியல் : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்: கலைச்சொற்கள்

தாவரவியல் : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்

கலைச்சொற்கள்

கருவுறாவித்து: குன்றலிலா பகுப்பின் விளைவாக இருமடிய சூல் திசுவிலிருந்து கருப்பை தோன்றும் நிகழ்வு.


மொட்டுவிடுதல்: பாலிலா இனப்பெருக்க முறையில், பெற்றோர் செல்லிலிருந்து உருவாக்கப்படும் சிறிய வெளி வளரி (மொட்டு).


கேலஸ்: திசு வளர்ப்பின் மூலம் பெறப்படும் வேறுபாடு அடையாத செல்களின் திரள்.


நகல்: ஒத்த மரபணுவுடைய உயிரி


எண்டோதீசியம் : மகரந்தப்பையின் புறத்தோலுக்கு கீழ் நீர் உறிஞ்சுத்தன்மை யுடைய ஆரப்போக்கில் நீண்ட ஓரடுக்கு செல்களாலான மகரந்தப்பை வெடிப்பதற்கு உதவும் அடுக்கு.


கருவுறுதல்: ஆண் மற்றும் பெண் கேமீட்களின் இணைவு.


ஒட்டுதல்: வேர் கட்டை, ஒட்டுத் தண்டு இரண்டையும் இணைத்து ஒரு புதிய தாவரத்தை உருவாக்கும் பாரம்பரிய முறை இனப்பெருக்கம் ஆகும்.


தோட்டக்கலை: கனிகள், காய்கறிகள், மலர்கள், அழகுத் தாவரங்கள் வளர்க்கும் கலை பற்றிய தாவரவியல் பிரிவு.


சூல்திசு: சூலின் உட்புறத்தில் சூலுறையை அடுத்துக் காணப்படும் இருமடியத் திசு.


போலன்கிட்: மகரந்தத்துகள்களின் பரப்பில் காணப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பூச்சிகளை கவரும் உறை.


மீளுருவாக்கம்: உயிரினங்கள் தான் இழந்த பாகங்களை மீண்டும் பதீலிடு செய்தல் அல்லது மீட்கும் திறன்


ஸ்போரோபொலினின்: கரோட்டினாய்டிலிருந்து பெறப்படும் மகரந்த சுவர் பொருள் இயற்பியல் மற்றும் உயிரிய சிதைவைத் தாங்கும் தன்மையுடைய மகரந்தச் சுவரப் பொருள்.


டபீட்டம்: வளரும் வித்துருவாக்க திசுவிற்கும், நுண்வித்துக்களுக்கும் ஊட்டமளிக்கும் திசு


ஊடுகடத்து திசு: சூல் தண்டின் உட்பகுதியிலுள்ள சுரக்கும் தன்மையுடைய ஓரடுக்கு கால்வாய் செல்கள்

Tags : Asexual and Sexual Reproduction in Plants | Botany தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் - தாவரவியல்.
12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants : Glossary Asexual and Sexual Reproduction in Plants | Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் : கலைச்சொற்கள் - தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் - தாவரவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 1 : தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்