Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்

தாவரவியல் - உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் | 12th Botany : Chapter 4 : Principles and Processes of Biotechnology

   Posted On :  31.07.2022 10:58 pm

12 வது தாவரவியல் : அலகு 4 : உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்

உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்

உயிரி தொழில்நுட்பவியல் என்பது பயன்பாட்டு உயிரியல் செயல்முறை அறிவியலாகும்.

அலகு VIII

உயிரிதொழில்நுட்பவியல்

பாடம் 4

உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தினைக் கற்போர்

• அன்றாட வாழ்வில் பாரம்பரிய மற்றும் நவீன உயிரி தொழில்நுட்பவியலை பயன்படுத்தவும்

• நொதித்தல் செயல்முறை பயன்பாட்டை அறியவும்

• மரபணு பொறியியல் செயல்முறைகளின் மீதான அறிவை பெறவும்

• மரபணு மாற்றமடைந்த தாவரங்களின் வரம்புகள் மற்றும் பயன்களை ஆராயவும்

• உயிரி வளம் நாடல் மற்றும் உயிரிப் பொருள் கொள்ளை ஆகிய பதத்தை அறிந்துக் கொள்ளவும் இயலும்.

.

பாட உள்ளடக்கம்

4.1 உயிரிதொழில்நுட்பவியலின் வளர்ச்சி

4.2 பாரம்பரிய உயிரிதொழில்நுட்பவியல்

4.3 நவீன உயிரிதொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்

4.4 மரபணு பொறியியலின் கருவிகள்

4.5 மரபணு மாற்ற முறைகள்

4.6 மறுக்கூட்டிணைவை சலிக்கைச் செய்தல்

4.7 மரபணு மாற்றமடைந்த தாவரங்கள் / மரபணு மாற்றமடைந்த பயிர்கள்

4.8 உயிரிதொழில்நுட்பவியலின் பயன்பாடுகள்

 

உயிரி தொழில்நுட்பவியல் என்பது பயன்பாட்டு உயிரியல் செயல்முறை அறிவியலாகும். மனித இனத்திற்கும் மற்ற உயிரினங்களுக்கும் பயன்படக்கூடிய அறிவியல் வளர்ச்சி, உயிரியல் செயல்முறைகளின் பயன்பாடு, அமைப்பு மற்றும் தொகுதி எனக் கூறலாம். 1919 ஆம் ஆண்டு ஹங்கேரிய பொறியாளரான கார்ல் ஏர்கி என்பவரால் உயிரிதொழில் நுட்பவியல் என்ற சொல் உருவாக்கப்பட்டது.

 

உயிரிதொழில்நுட்பவியல் என்பது உயிரினங்கள், திசுக்கள், செல்கள், நுண்ணுறுப்புகள் அல்லது தனிமைபடுத்தப்பட்ட மூலக்கூறுகளான நொதிகளை பயன்படுத்தி உயிரியல் அல்லது பிற மூலக்கூறுகளை அதிக மதிப்புடைய பொருட்களாக மாற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும்.

Tags : Botany தாவரவியல்.
12th Botany : Chapter 4 : Principles and Processes of Biotechnology : Principles and Processes of Biotechnology Botany in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது தாவரவியல் : அலகு 4 : உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் : உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் - தாவரவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது தாவரவியல் : அலகு 4 : உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்