உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்- தாவரவியல் - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக | 12th Botany : Chapter 4 : Principles and Processes of Biotechnology
தாவரவியல் : உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
மதிப்பீடு
1. ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது
அ) மரபுப் பொறியியலில் எப்போதும் தேவைப்படுவதில்லை
ஆ) மரபுப் பொறியலில் முக்கியமான கருவியாகும்.
இ) நியூக்ளியேஸ் DNAவைக் குறிப்பிட்ட இடத்தில் துண்டித்தல்
ஈ) ஆ மற்றும் இ
விடை : ஈ) ஆ மற்றும் இ
2. பிளாஸ்மிட் என்பது
அ) வட்டவடிவ புரத மூலக்கூறுகள்
ஆ) பாக்டீரியாவினால் தேவைப்படுவது
இ) நுண்ணிய பாக்டீரியங்கள்
ஈ) உயிரி எதிர்ப்பொருளுக்கு தடுப்பை வழங்க
விடை : ஈ) உயிரி எதிர்ப்பொருளுக்கு தடுப்பை வழங்க
3. DNAவை ஈகோலை துண்டிக்குமிடம்
அ) AGGGTT
ஆ) GTATATC
இ) GAATIC
ஈ) TATAGC)
விடை : இ) GAATTC
4. மரபணுப் பொறியியல்
அ) செயற்கை மரபணுக்களை உருவாக்குதல்
ஆ) ஒரு உயிரினத்தின் DNA மற்றவைகளுடன் கலப்பினம் செய்தல்
இ) நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி ஆல்கஹால் உற்பத்தி
ஈ) ECG, EEG போன்ற கண்டறியும் கருவிகள், செயற்கை உறுப்புகள் உருவாக்குதல்
விடை : ஆ) ஒரு உயிரினத்தின் DNA மற்றவை களுடன் கலப்பினம் செய்தல்
5. பின்வரும் கூற்றைக் கருதுக.
I. மறுகூட்டிணைவு DNA தொழில்நுட்பம் என்பது பிரபலமாக அறியப்பட்ட மரபணு பொறியியல் ஆகும். இது மனிதனால் ஆய்வுக்கூட சோதனை முறையில் மரபணுப் பொருட்களை கையாளு தலை விவரிக்கிறது.
II. pBR322 என்பது 1977ல் ஈகோலை பிளாஸ்மிட்டி லிருந்து பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ் ஆகியோரால் முதன் முதல் உருவாக்கப்பட்ட செயற்கையான நகலாக்க தாங்கிக் கடத்தியாகும்.
III. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதிகள் என்பது நியூக்ளியேஸ் எனப்படும் நொதிகள் வகுப்பைச் சார்ந்தது.
மேற்கூறிய கூற்றின் அடிப்படையில் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) 1 மற்றும் II
ஆ) 1 மற்றும் III
இ) II மற்றும் III
ஈ) I, IIமற்றும் III
விடை : இ) I, II மற்றும் III
6. மறுகூட்டிணைவு தொழில்நுட்பம் பின்வரும் படி நிலைகளைக் கொண்டுள்ளது.
I. மரபணுக்களின் பெருக்கம்
II. ஓம்புயிர் செல்லில் மறுகூட்டிணைவு DNAவை செலுத்துதல்.
III. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதியைப் பயன் படுத்தி குறிப்பிட்ட இடத்தில் DNA வைத் துண்டித்தல்.
IV. மரபணுப் பொருட்களைப் பிரித்தெடுத்தல் DNA மறுகூட்டிணைவு தொழில்நுட்பத்தின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) II, III, IV, I
ஆ) IV, II, III, I
இ) I, II, III, IV
ஈ) IV, III, I, II)
விடை : ஈ) IV, III, I, II
7. சில தடைகட்டு (ரெஸ்ட்ரிக்சன்) நொதிகளினால் DNAவின் பின்வரும் எந்த ஒரு முன்பின் ஒத்த (பாலியாண்ட்ரோம்) தொடர் வரிசையின் மையத்தில் எளிதாக துண்டிக்கிறது?
அ) 5'CGTTCG3' 3'ATCGTA5'
ஆ) 5'GATATG3' 3'CTACTA5'
இ) 5'GAATTC3' 3'CTTAAG5'
ஈ) 5'CACGTA3' 3'CTCAGT5'
விடை : இ) 5'GAATTC3' 3'CTTAAG5'
8. pBR 322, BR என்பது
அ) பிளாஸ்மிட் பாக்டீரிய மறுகூட்டிணைவு
ஆ) பிளாஸ்மிட் பாக்டீரிய பெருக்கம்
இ) பிளாஸ்மிட் பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ்
ஈ) பிளாஸ்மிட் பால்டிமோர் மற்றும் ரோட்ரிக்கஸ்
விடை : இ) பிளாஸ்மிட் பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ்
9. பின்வருவனவற்றுள் எது உயிரி உணர்வியல் பயன்படுத்தப்படுகிறது?
அ) மின்னாற்பிரிப்பு
ஆ) உயிரி உலைக்கலன்
இ) தாங்கிக்கடத்தி
ஈ) மின்துளையாக்கம்
விடை : சரியான விடை : நொதிகள்
10. பின்வருவனவற்றைப் பொருத்துக.
அ) a b c d
ஆ) c d ba
இ) a cb d
ஈ) c d a b
விடை : ஈ) 1-c, 2-d, 3-a, 4-b
11. எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்ப முறையில் பயன்படுத்தப்படுகிறது?
அ) சதர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்ப முறை
ஆ) வெஸ்டர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்ப முறை
இ) பாலிமரேஸ் சங்கிலித் தொடர்வினை
ஈ) அகரோஸ் இழும மின்னாற் பிரிப்பு
விடை : ஈ) அகரோஸ் இழும மின்னாற் பிரிப்பு
12. கூற்று : மரபணு பொறியியலில் அக்ரோ பாக்டீரியம் பிரபலமானது ஏனெனில் இந்த பாக்டீரியம் அனைத்து தானியங்கள் மற்றும் பயிறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் ஒருங்கிணைந்து உள்ளது.
காரணம் : பாக்டீரிய குரோமோசோமின் மரபணுத் தொகையத்தில் இணைக்கப்பட்ட ஒரு மரபணு அந்த பாக்டிரியம் இணைந்துள்ள தாவரத்திற்கு தானாக மாற்றப்படுகிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறானது
ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம்சரியானது
உ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை : உ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
13. பின்வரும் கூற்றுகளில் எது சரியான கூற்று அல்ல.
அ) Ti பிளாஸ்மிட் வாழையில் உச்சிக் கொத்து நோயை உருவாக்குகிறது.
ஆ) பல நகலாக்க களங்கள் பல இணைப்பான் எனப்படும்.
இ) செல்லில் உட்கரு அமிலத்தின் ஊடுதொற்றுதல் வைரஸ் அற்ற முறையாகும்.
ஈ) பாலிலாக்டிக் என்பது ஒரு வகை உயிரி சிதைவடையும் மற்றும் உயிரி செயல் மிகு வெப்ப பிளாஸ்டிக்
விடை : ஈ) பாலிலாக்டிக் என்பது ஒரு வகை உயிரி சிதைவடையும் மற்றும் உயிரி செயல் மிகு வெப்ப பிளாஸ்டிக்
14. சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்பமுறையின் குரோமோசோம் DNA பகுப்பாய்வு எதில் பயன்படுவதில்லை .
அ) மின்னாற்பிரிப்பு
ஆ) ஒற்றியெடுப்பு முறை
இ) கதிரியக்க புகைப்படமுறை
ஈ) பாலிமரேஸ் சங்கிலித் தொடர் முறை
விடை : ஈ) பாலிமரேஸ் சங்கிலித் தொடர் முறை
15. ஒரு தாங்கிக்கடத்தியில் உயிரி எதிர்ப்பொருள் மரபணு எதனை தேர்ந்தெடுக்க உதவுகிறது?
அ) போட்டி செல்கள்
ஆ) மாற்றப்பட்ட செல்கள்
இ) மறுகூட்டிணைவுச் செல்கள்
ஈ) மேற்கூறிய எதுவுமில்லை
விடை : ஆ) மாற்றப்பட்ட செல்கள்
16. Bt பருத்தியின் சில பண்புகள்.
அ) நீண்ட நார்களும், அசுவுனி பூச்சிகளுக்கு (aphids) எதிர்ப்புத்திறன்
ஆ) நடுத்தரமான அறுவடை, நீண்ட நார்கள் மற்றும் வண்டுகளுக்கான எதிர்ப்புத்தன்மை
இ) அதிக விளைச்சல் மற்றும் டிப்தீரியன் பூச்சிகளைக் கொல்லக் கூடிய படிக நச்சுப் புரத உற்பத்தி
ஈ) அதிக உற்பத்தி மற்றும் காய் புழுவிற்கான எதிர்ப்புத்திறன்
விடை : ஈ) அதிக உற்பத்தி மற்றும் காய் புழுவிற்கான எதிர்ப்புத்திறன்