Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள்

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் - பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் | 11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence

   Posted On :  06.10.2023 09:25 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள்

அரசாங்கத்தின் பங்குகளை பெரும்பான்மையாகக் கொண்ட வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாகும். எடுத்துக்காட்டாக பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு பொதுதுறை வங்கியாகும்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள்


பொதுத்துறை வங்கிகள்


அரசாங்கத்தின் பங்குகளை பெரும்பான்மையாகக் கொண்ட வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாகும். எடுத்துக்காட்டாக பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு பொதுதுறை வங்கியாகும். இவ்வங்கியில் அரசு 58.60% பங்குகளைக் கொண்டுள்ளது. 58.87% அரசாங்கப் பங்குகளுடன் கூடிய பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஒரு பொதுத்துறை வங்கியாகும். வழக்கமாக பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும், இதில் மாற்றங்களும் வரலாம். பொதுத்துறை வங்கிகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவையாவன:

1) தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 

2) மாநில வங்கிகள் மற்றும் அவற்றின் கூட்டு நிறுவனங்கள்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் நிறுவனச் செயல்பாடுகளை அரசாங்கம் கட்டுபடுத்தி ஒழுங்குபடுத்துகிறது. எடுத்துக்காட்டாக, பாரத ஸ்டேட் வங்கி (SBI) பஞ்சாப் நேசனல் வங்கி (PNB) பாங்க் ஆஃப் பரோடா (BOB) ஓரியண்டல் வணிக வங்கி (OBC) அலகாபாத் வங்கி மற்றும் பல இருந்தபோதிலும் பொதுத்துறை வங்கிகள் பங்குகளை விற்கும்போது தனது பங்குகளின் எண்ணிக்கையை அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. இதன் காரணமாக இவ்வங்கிகளில் அரசாங்கம் சிறுபான்மை பங்குதாராக மாறவும் வாய்ப்புள்ளது. இதற்கான காரணம் தனியார் மயமாக்கல் கொள்கையாகும்.


தனியார் துறை வங்கிகள்


இவ்வங்கிகளில் பெரும்பான்மையான பங்குகள், அரசு சாராத தனியார் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், கார்ப்பரேசன் மற்றும் தனிநபர் வசம் உள்ளன. இவ்வங்கிகள் தனியார் நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.

இந்தியாவிலுள்ள மொத்த வங்கிகளில், 72.9% வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாகவும், மீதமுள்ளவை தனியாரால் நிர்வகிக்கப்படும் வங்கிகளாகவும் உள்ளன. எண்ணிக்கை அடிப்படையில் 27 பொதுத்துறை வங்கிகளும், 22 தனியார் வங்கிகளும் உள்ளன. தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), தன்னுடைய வெவ்வேறு வங்கி ஆட்சியின் மூலம் வங்கிகளுக்கு பணம் வழங்குதல் மற்றும் சிறிய அளவிலான நிதி வங்கிகளுக்கு உரிமம் வழங்குதல் (SFB)ஆகிய பணிகளைச் செய்ய அனுமதி அளித்துள்ளது. இது அரசாங்கத்தின் நிதி ஆதாரத்தைப் பெருக்கும் முயற்சிக்கான ஒரு ஊக்கியாகும். இதன் விளைவாக ஏர்டெல் பணம் செலுத்தும் வங்கி மற்றும் பே.டி.எம் பணம் செலுத்தும் வங்கி (PAY TM) போன்றவை உருவாகியுள்ளன. இப்போக்கு எந்தளவுக்கு நாட்டு மக்களுக்கு நல்லவை பயக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags : Indian Economy After Independence பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள்.
11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence : Public Sector and Private sector banks Indian Economy After Independence in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும் : பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் - பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்