ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 8th Science : Chapter 3 : Light

   Posted On :  09.09.2023 07:44 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்

வினா விடை

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்

அ) சமதள ஆடிகள்

ஆ) சாதாரண ஆடிகள்

இ) கோளக ஆடிகள்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : இ) கோளக ஆடிகள்

 

2. உட்புறமாக எதிரொளிக்கும் பரப்பை உடைய வளைவு ஆடி

அ) குவி ஆடி

ஆ) குழி ஆடி

இ) வளைவு ஆடி

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : ஆ) குழி ஆடி

 

3. வாகனங்களில் பின் காட்சி ஆடியாகப் பயன்படுத்தப்படும் ஆடி

அ) குழி ஆடி

ஆ) குவி ஆடி

இ) சமதள ஆடி

ஈ) எதுவுமில்லை

விடை : ஆ) குவி ஆடி

 

4. ஒரு ஆடியின் ஆடி மையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு-------------------- எனப்படும்.

அ) வளைவு மையம்

ஆ) ஆடிமையம்

இ) முதன்மை அச்சு

ஈ) வளைவு ஆரம்

விடை : இ) முதன்மை அச்சு

 

5. முதன்மைக் குவியத்திற்கும், ஆடி மையத்திற்கும் இடையே உள்ள தொலைவு என்று அழைக்கப்படுகிறது.

அ) வளைவு நீளம்

ஆ) குவிய தொலைவு

இ) முதன்மை அச்சு

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : ஆ) குவிய தொலைவு

 

6. ஒரு கோளக ஆடியின் குவியதொலைவு 10 செ.மீ. எனில், அதன் வளைவு ஆரம்

அ) 10 செ.மீ.

ஆ) 5 செ.மீ.

இ)  20 செ.மீ.

ஈ) 15 செ.மீ.

விடை : இ)  20 செ.மீ.

 

7. பொருளின் அளவும், பிம்பத்தின் அளவும் சமமாக இருந்தால், பொருள் வைக்கப்பட்டுள்ள இடம் ----------------------

அ) ஈறிலாத் தொலைவு

ஆ) Fல்

இ) F க்கும் P க்கும் இடையில்

ஈ) C ல்

விடை : ஈ) C ல்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. அழகு நிலையங்களில் அலங்காரம் செய்யப் பயன்படும் கோளக ஆடி குழி ஆடி

2. கோளக ஆடியின் வடிவியல் மையம் ஆடி மையம் எனப்படும்.

3. குவி ஆடியில் தோன்றும் பிம்பத்தின் தன்மை நேரான மாய பிம்பம்

4. கண் மருத்துவர் கண்களைப் பரிசோதிக்கப் பயன்படுத்தும் ஆடி குழி ஆடி

5. ஒளிக் கதிர் ஒன்றின் படுகோணத்தின் மதிப்பு 450 எனில் எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு எதிரொளிப்புக் 45°

6. இணையாக உள்ள இரண்டு சமதள ஆடிகளுக்கிடையே ஒரு பொருளானது வைக்கப்பட்டால், உருவாகும் பிம்பங்களின் எண்ணிக்கை முடிவிலா  எண்ணிக்கை

 

III. பொருத்துக.


குவி ஆடி - ரேடியோ தொலைநோக்கிகள்

பரவளைய ஆடி - பின்னோக்குப் பார்வை ஆடி

ஸ்நெல் விதி - கலைடாஸ்கோப்

நிறப்பிரிகை - sini/sinr =μ

ஒளிவிலகல் எண் - வானவில்

 

விடை :

குவி ஆடி - பின்னோக்குப் பார்வை ஆடி

பரவளைய ஆடி - ரேடியோ தொலைநோக்கிகள்

ஸ்நெல் விதி - sini/sinr =μ

நிறப்பிரிகை – வானவில்

ஒளிவிலகல் எண் – கலைடாஸ்கோப்

 

 

IV. சுருக்கமாக விடையளி.

 

1. குவிய தொலைவு வரையறு.

ஆடிமையத்திற்கும் முதன்மைக் குவியத்திற்கும், இடைப்பட்ட தொலைவு குவிய தொலைவு (F) எனப்படும் குவியத் தொலைவு = வளைவு ஆரம்/2

 

2. குழி ஆடி மற்றும் குவி ஆடிகளின் பயன்களுள் இரண்டினைத் தருக.

குழி ஆடி :

> டார்ச் விளக்குகள், தெரு விளக்குகள் மற்றும் வாகனங்களின் முகப்பு விளக்குகள் போன்றவற்றில் குழி ஆடிகள் பயன்படுகின்றன.

> எதிரொளிக்கும் தொலைநோக்கிகளிலும் குழி ஆடிகள் பயன்படுகின்றன.

குவி ஆடி :

> வாகனங்களின் பின்புறம் வரும் பிற வாகனங்களை பார்ப்பதற்கு குவி ஆடிகள் பயன்படுகின்றன.

> சாலைகளின் மிகவும் குறுகிய மற்றும் நுட்பமான வளைவுகளில் குவி ஆடிகள் பயன்படுகின்றன

 

3. ஒளி எதிரொளிப்பு விதிகளைக் கூறுக.

> படுகதிர், எதிரொளிப்புக்கதிர் மற்றும் படு புள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்துள்ளன.

> படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் எப்போதும் சமமாக இருக்கும்.

 

4. ஊடகத்தின் ஒளிவிலகல் எண் - வரையறு.

காற்றில் ஒளியின் திசைவேகத்திற்கும், ஒரு குறிப்பிட்ட ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு ஒளிவிலகல் எண் எனப்படும். இதனை தனித்த ஒளிவிலகல் எண் எனவும் குறிப்பிடுகிறோம்.

μ = காற்றின் ஒளியின் திசைவேகம் (C) / ஊடகத்தின் ஒளியின் திசைவேகம் (V)

 

5. ஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதியினைக் கூறுக.

> படுகதிர், விலகுகதிர் மற்றும் அவை சந்திக்கும் புள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை அனைத்தும் ஒரே தளத்தில் அமையும்.

> படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் (i) விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் (r) இடையே உள்ள தகவு, ஒளிவிலகல் எண்ணிற்குச் சமமாகும். இது ஒரு மாறிலி ஆகும்.

Sin i /Sin r = μ

 

V. விரிவாக விடையளி.

 

1. குழி ஆடியில் தோன்றும் பிம்பங்களைப் பற்றி விவரிக்கவும்.



 

2. ஒளி எதிரொளித்தல் என்றால் என்ன? ஒழுங்கான மற்ற ஒழுங்கற்ற எதிரொளிப்புக்களைப் பற்றி சிறு குறிப்பு வரைக.

ஒளி எதிரொளித்தல்:

ஓர் ஒளிக்கதிரானது பளபளப்பான, மென்மையான பரப்பில் பட்டு ஒளி திரும்பும் நிகழ்வே ஒளி எதிரொளித்தல் என்று அழைக்கப்படுகிறது.

ஒழுங்கான எதிரொளிப்பு: -

> வழவழப்பான பரப்பின் மீது ஓர் ஒளிக்கற்றையானது விழும் போது அது எதிரொளிக்கப்படுகிறது.

> எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளன.

> இந்த எதிரொளிப்பில் ஒவ்வொரு கதிரின் படுகோணமும் எதிரொளிப்புக் கோணமும் சமமாக இருக்கும்.

> எதிரொளிப்பு விதிகள் சரியாக பொருந்துகின்றன.

> இதில் தெளிவாக பிம்பம் கிடைக்கிறது.

> (எ.கா) சமதளக் கண்ணாடியில் உருவாகும் எதிரொளிப்பு நிலையான தண்ணீரில் ஏற்படும் எதிரொளிப்பு

> இவ்வகை எதிரொளிப்பிற்கு ஒழுங்கான எதிரொளிப்பு' (அல்லது) ' கண்ணாடி எதிரொளிப்பு' என்று பெயர்.

ஒழுங்கற்ற எதிரொளிப்பு :

> சொரசொரப்பான அல்லது ஒழுங்கற்ற பரப்பின் மீது ஓர் ஒளிக்கற்றையானது விழும் போது ஒவ்வொரு ஒளிக்கதிரும் வெவ்வேறு கோணத்தில் எதிரொளிக்கிறது.

 > ஒவ்வொரு ஒளிக்கதிரின் படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் சமமாக இருக்காது.

> எதிரொளிப்பு விதிகள் சரியாக பொருந்தாததால் இதில் பிம்பங்கள் தெளிவாக கிடைக்காது.

 > இவ்வகை எதிரொளிப்பிற்கு ஒழுங்கற்ற எதிரொளிப்பு அல்லது பரவலான எதிரொளிப்பு என்று பெயர்.

> எ.கா. சுவரின் மீது ஏற்படும் எதிரொளிப்பு

 

 

3. பெரிஸ்கோப் செயல்படும் விதம் பற்றி விவரிக்கவும்.

தத்துவம் :

ஒளி எதிரொளித்தல் விதிகள் அடிப்படையில் செயல்படுகிறது.

அமைப்பு :

> நீண்ட வெளிப்பகுதியையும் உட்பகுதியையும் கொண்டது.

> உட்பகுதியில் 45° கோணச் சாய்வில் ஒவ்வொரு முனையிலும் கண்ணாடி அல்லது முப்பட்டகமானது பொருத்தப்பட்டுள்ளது.

செயல்படும் விதம்:

> நீண்ட தொலைவில் உள்ள பொருளிலிருந்து வரும் ஒளியானது பெரிஸ்கோப்பின் மேல் முனையில் உள்ள கண்ணாடியில் பட்டு செங்குத்தாக கீழ்நோக்கி எதிரொளிக்கப்படுகிறது.

> கீழ்ப்பகுதியில் உள்ள கண்ணாடியால் மீண்டும் ஒருமுறை எதிரொளிக்கப்பட்டு கிடைமட்டத் திசையில் சென்று பார்ப்பவரின் கண்களை அடைகிறது.

> உயர் காட்சித் திறனைப் பெறுவதற்காக, கண்ணாடிகளுக்குப் பதிலாக ஒளியிழைகள் பயன்படுத்தப்படுகின்றன.

> தேவைக்கேற்ப பெரிஸ்கோப்பின் உட்பகுதியில் உள்ள கண்ணாடிகளுக்கிடையே உள்ள இடைவெளியானது  மாற்றியமைக்கப்படுகிறது.

 

4. நிறப்பிரிகை என்றால் என்ன? விவரி.

நிறப்பிரிகை :

ஒளி உருவாகும் ஊடகத்தின் வழியே வெண்மை நிற ஒளியானது செல்லும் போது ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது. இதனை நிறப்பிரிகை என்கிறோம்.

> நிறப்பிரிகையின் போது ஏழு வண்ணங்கள் கிடைக்கின்றன.

> அவை ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு

> ஏழு வண்ணங்களை VIBGYOR என எளிதாக நினைவில் கொள்ளலாம்

> நிறப்பிரிகையின் போது சிவப்பு நிற ஒளிக் கதிரானது அதிக நீளத்தையும், குறைந்த விலகலையும் கொண்டுள்ளது.

> ஊதா நிறக்கதிர் குறைந்த அலைநீளத்தையும் அதிக விலகலையும் கொண்டுள்ளது.

 

 

VI. கணக்குகள்.


1. கோளக ஆடியின் வளைவு ஆரம் 25 செமீ எனில், அதன் குவிய தொலைவினைக் காண்க.



2. இரண்டு சமதள ஆடிகளுக்கிடைப்பட்ட கோணம் 45° எனில், தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையினைக் காண்க.

தீர்வு : இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடைப்பட்ட சாய்வு கோணம் = 45°

360° தோன்றும் பிம்பங்களின் எ

ண்ணிக்கை = 

 

3. காற்றில் ஒளியின் திசைவேகம் 3×108 மீM- மற்றும் ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 எனில், ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தினைக் காண்க.

தீர்வு : காற்றில் ஒளியின் திசைவேகம் (C) = 3 x 108 மீM-1



Tags : Light | Chapter 3 | 8th Science ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 3 : Light : Questions Answers Light | Chapter 3 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல் : வினா விடை - ஒளியியல் | அலகு 3 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : ஒளியியல்