அன்றாட வாழ்வில் வேதியியல் | அலகு 15 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 8th Science : Chapter 15 : Chemistry in Everyday Life

   Posted On :  10.09.2023 02:07 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல்

வினா விடை

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. வாயுக்கசிவை அறிவதற்காக LPG வாயுவுடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் --------------------------

அ) மெத்தனால்

ஆ) எத்தனால்

இ) கற்பூரம்

ஈ) மெர்காப்டன்

விடை: ஈ) மெர்காப்டன்

 

2. தொகுப்பு வாயு என்று அழைக்கப்படுவது எது?

அ) சதுப்பு நில வாயு

ஆ) நீர்வாயு

இ) உற்பத்தி வாயு

ஈ) நிலக்கரி வாயு

விடை: ஆ) நீர்வாயு

 

3. ஒரு எரிபொருளின் கலோரிமதிப்பின் அலகு

அ) கிலோ ஜூல்/மோல்

ஆ) கிலோ ஜூல்/கிராம்

இ) கிலோ ஜூல்/கிலோ கிராம்

ஈ) ஜூல்/கிலோ கிராம்

விடை: இ) கிலோ ஜுல்/கிலோ கிராம்

 

4 ------------------என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும்.

அ) பீட்

ஆ) லிக்னைட்

இ) பிட்டுமினஸ்

ஈ) ஆந்த்ரசைட்

விடை: ஈ) ஆந்த்ரசைட்

 

5. இயற்கை வாயுவில்  பெரும்பான்மையான பகுதிப்பொருள் ---------------

அ) மீத்தேன்

ஆ) ஈத்தேன்

இ) புரோப்பேன்

ஈ) பியூட்டேன்

விடை: அ) மீத்தேன்

 

II. கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்க.

 

1. உற்பத்தி வாயு என்பது, கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றின் கலவையாகும்.

2 மீத்தேன் சதுப்பு நில வாயு எனப்படுகிறது.

3. பெட்ரோலியம் என்ற சொல் குறிப்பது பாறை எண்ணெய்

4. காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்பப்படுத்துவது சிதைத்து வடித்தல் எனப்படும்

5. படிம் எரிபொருளுக்கு ஒரு உதாரணம் நிலக்கரி

 

III. பொருத்துக.

 

ஆக்டேன் மதிப்பீடு - டீசல்

சீட்டேன் மதிப்பீடு - மீத்தேன்

எளிய ஹைட்ரோகார்பன் - பெட்ரோல்

பீட் - பழுப்புநிறம் கொண்டது

லிக்னைட் - முதல் நிலை நிலக்கரி

 

விடைகள்

ஆக்டேன் மதிப்பீடு - பெட்ரோல்

சீட்டேன் மதிப்பீடு - டீசல்

எளிய ஹைட்ரோகார்பன் - மீத்தேன்

பீட் - முதல் நிலை நிலக்கரி

லிக்னைட் - பழுப்புநிறம் கொண்டது

 

 

IV. சுருக்கமாக விடையளி.

 

1. சங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன?

ஹைட்ரோ கார்பன்களின் கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வேதிப்பிணைப்புகளை உருவாக்கி பெரிய எண்ணிக்கையிலான சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்குவது சங்கிலி தொடராக்கம் எனப்படும்.

 

2. இயற்கை வாயுவின் நிறைகள் யாவை?

இயற்கை வாயு,

> எளிதில் எரியக்கூடியது.

> பெருமளவில் வெப்பத்தை வெளிவிடக்கூடியது.

> எரியும்போது புகையை வெளிவிடாததால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது.

> குழாய்கள் மூலம் எளிதில் எடுத்துச்சென்று சேர்க்க முடியும்.

> நேரடியாக எரிபொருளாக வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தமுடியும்.

 

3. CNG என்பதை விரிவு படுத்தி எழுதுக. அதன் இரு பயன்களை எழுதுக.

> CNG -அழுத்தப்பட்ட இயற்கை வாயு.

> எரிபொருள்

> தானியங்கி வாகன எரிபொருள்.

 

4. தொகுப்பு வாயு என்று அறியப்படும் வாயுவைக் கண்டறிந்து எழுது. அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?

> தொகுப்பு வாயு - கார்பன்மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களின் கலவை.


> மெத்தனால் மற்றும் எளிய ஹைட்ரோகார்பன்களை உற்பத்தி செய்ய பயன்படுவதால் இது தொகுப்பு வாயு எனப்படுகிறது.

 

5. ஏன் ஆந்த்ரசைட் வகை நிலக்கரி மிகவும் உயர்தரமான நிலக்கரி அதற்கான காரணம் தருக.

> ஆந்த்ர சைட்டில் கார்பனின் சதவீதம் 86-97% ஆகும்.

> இது பிட்டுமினஸ் நிலக்கரியை விட சற்று உயர்ந்த வெப்ப ஆற்றல் மதிப்பை உடையது.

> ஆந்த்ரசைட் நிலக்கரி நீண்ட நேரம் எரிந்து அதிக வெப்பத்தையும் குறைவான தூசியினையும் தருகிறது.

> எனவே ஆந்த்ரசைட் நிலக்கரி உயர்தரமான நிலக்கரி எனப்படுகிறது.

 

6. ஆக்டேன் எண் - சீட்டேன் எண் வேறுபடுத்துக

ஆக்டேன் எண்

இம்மதிப்பு பெட்ரோலுக்கு பயன்படுத்தப்படுகிறது

பெட்ரோலிலுள்ள ஆக்டேனின் அளவை குறைக்கிறது.

பென்சீன் அல்லது டொலுவீனை சேர்ப்பதன் மூலம் பெட்ரோலின் ஆக்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்.

உயர்ந்த சீட்டேன் எண்ணை பெற்றுள்ள எரிபொருளின் சீட்டேன் எண் குறைவாக. இருக்கும்.

சீட்டேன் எண்

இம்மதிப்பு டீசலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

டீசல் எஞ்சினிலுள்ள பற்றவைப்பு எரிபொருளின்  நேரத்தைக் குறிக்கிறது.

அசிட்டோனை சேர்ப்பதன் மூலம் டீசலின் சீட்டேன் எண்ணை அதிகரிக்க முடியும்.

உயர்ந்த சீட்டேன் எண்ணை பெற்றுள்ள எரிபொருளின் ஆக்டேன் எண் குறைவாக இருக்கும்

 

 

7. தமிழ்நாட்டில் காற்றாலைகளைப் பயன்படுத்தி காற்றாற்றல் உற்பத்தி செய்யப்படும் இடங்களை எழுதுக.

கயத்தாறு, ஆரல்வாய்மொழி, பல்லடம் மற்றும் குடிமங்களம்

 

8. சூரிய ஆற்றல் எப்பொழுதும் தீராத ஒரு ஆற்றல் மூலமாகும். இக்கூற்றை நியாயப்படுத்துக.

> சூரிய ஆற்றல் முதன்மையான மற்றும் முக்கியமான ஆற்றல் மூலமாகும்.

> இது இயற்கையில் தீர்ந்து விடாத ஆற்றல் மூலமாகும்.

> இது விலையில்லா மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமாகும்.

> இது சுற்றுச்சூழலை பாதிக்காதது.

> படிம எரிபொருட்களை பதிலீடு செய்யக்கூடிய ஆற்றல் வளமாகும்.

> இது பயன்படுத்த எளிதாகவும், ஆற்றல் சார்ந்த இன்றைய பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் உள்ளது.

> சூரிய ஆற்றல் ஒரு பரிசுத்தமான ஆற்றலாகும்.

 

 

V. விரிவாக விடையளி.

 

1. நிலக்கரியின் பல்வேறு வகைகளைப் பற்றி விளக்குக.

லிக்னைட்:

> இது பழுப்பு நிறமுடைய மிகவும் தரம் குறைந்த நிலக்கரியாகும்.

> கார்பனின் சதவீதம் 25 - 35%

> அதிக அளவு நீரைக் கொண்டது.

> மொத்த நிலக்கரி இருப்பில் ஏறக்குறைய பாதியளவினை கொண்டுள்ளது.

> மின்சார உற்பத்தி, தொகுப்பு முறையிலான இயற்கை வாயு, உரப்பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

துணை-பிட்டுமினஸ் :

> லிக்னைட் அடர்நிறமாகவும் கடினமாகவும் ஆகும்பொழுது துணை-பிட்டுமினஸ் நிலக்கரி உருவாகிறது.

> இது கருமை நிறமுடைய குன்றிய நிலக்கரி வகை.

> லிக்னைட்டை விட உயர் வெப்ப மதிப்பைக் கொண்டது.

> கார்பனின் சதவீதம் 35 - 44%

> மற்ற நிலக்கரிகளைவிட குறைந்த அளவு சல்பர் உள்ளது.

> தூய்மையாக எரியக்கூடியது.

> முதன்மையாக மின்சார உற்பத்திக்கு எரிபொருளாக பயன்படுகிறது.

III. பிட்டுமினஸ் நிலக்கரி :

> நிறைய இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களால் துணை பிட்டுமினஸ் நிலக்கரி பிட்டுமினஸ் வகை நிலக்கரியாக மாற்றம் பெற்றுள்ளது.

> இது அடர்கருமை நிறமும், கடினத் தன்மையும் கொண்டது

> கார்பனின் சதவீதம் 45 - 86%

> அதிக வெப்ப ஆற்றல் மதிப்பை பெற்றுள்ளது.

> மின்சாரம் உற்பத்தி செய்ய, இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு கல்கரி வழங்குகிறது.

இவ்வகை நிலக்கரியிலிருந்து கிடைக்கும் உப விளைபொருட்கள் பெயிண்டுகள், நைலான் மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுகின்றன.

IV. ஆந்த்ர சைட் :

> இது மிகவும் உயர்தரம் கொண்ட நிலக்கரி வகையாகும்.

> மிகுந்த கடினத்தன்மையும், அடர்கருமை நிறத்தையும் கொண்டது.

> மிகவும் இலேசானது.

> உயர்ந்த வெப்ப ஆற்றலை கொண்டது.

> பளபளக்கும் தன்மை கொண்டது.

> கார்பனின் சதவீதம் 86 - 97%

> பிட்டுமினஸ் நிலக்கரியை விட சற்று உயர்ந்த வெப்ப ஆற்றல் மதிப்பை உடையது.

> நீண்ட நேரம் எரிந்து அதிக வெப்பத்தையும், குறைவான தூசியினையும் தருகிறது.


2. சிதைத்து வடித்தல் என்றால் என்ன? பெட்ரோலியத்தை பின்னக்காய்ச்சி வடிக்கும் போது கிடைக்கும் பொருள்களைப் பற்றி எழுதுக.

> காற்றில்லா சூழலில் நிலக்ரியை வெப்பப்படுத்துவது சிதைத்து வடித்தல் எனப்படும்.

> பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள்.



3. பல்வேறு எரிபொருள் வாயுக்களைப் பற்றி எழுதுக.

I. திட எரிபொருட்கள் :

> திடநிலையில் உள்ள மரம் மற்றும் நிலக்கரி போன்றவை திட எரிபொருட்கள் எனப்படும்.

> முதன்முதலில் மனிதனால் பயன்படுத்தப்பட்டது.

> எளிதில் சேமிக்கவும், கொண்டு செல்லவும் முடியும்.

உற்பத்தி செலவுக் குறைவு.

II. திரவ எரிபொருட்கள் :

> பெரும்பாலான திரவ எரிபொருட்கள் இறந்த தாவர விலங்குகளின் படிமங்களில் இருந்து பெறப்படுகின்றன.

> எரியும் பொழுது அதிக ஆற்றலைத் தருகின்றன.

> சாம்பலை தராமல் எரிகின்றன.

> (எ.கா.) பெட்ரோலிய எண்ணெய், கரித்தார், ஆல்கஹால்.

III. வாயு எரிபொருட்கள் :

> எளிதில் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லமுடியும்.

> சுற்றுச்சுழலை மாசுபடுத்தாது.

> (எ.கா.) நிலக்கரி வாயு, எண்ணெய் வாயு, உற்பத்தி வாயு, ஹைட்ரஜன் வாயு.

Tags : Chemistry in Everyday Life | Chapter 15 | 8th Science அன்றாட வாழ்வில் வேதியியல் | அலகு 15 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 15 : Chemistry in Everyday Life : Questions Answers Chemistry in Everyday Life | Chapter 15 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல் : வினா விடை - அன்றாட வாழ்வில் வேதியியல் | அலகு 15 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல்