Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

அன்றாட வாழ்வில் வேதியியல் | அலகு 15 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 15 : Chemistry in Everyday Life

   Posted On :  10.09.2023 02:08 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

மீத்தேன் ஒரு எளிமையான ஹைட்ரோகார்பன். இதில் ஒரு கார்பனுடன் நான்கு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்துள்ளன.

CNG என்பது மலிவான மற்றும் தூய்மையான எரிபொருளாகும். இவ்வாயுவைப் பயன்படுத்தும்

வாகனங்கள் குறைந்த அளவு கார்பன் டைஆக்சைடு மற்றும் ஹைட்ரோ கார்பன்களை வெளியிடுகின்றன. இது பெட்ரோல் மற்றும் டீசலை விடச் சிக்கனமானது.

இயற்கை வாயு என்பது மீத்தேனை முதன்மையாகக் கொண்டுள்ள வாயுக்களின் கலவையாகும்.

உற்பத்தி வாயு என்பது கார்பன் மோனாக்சைடும், நைட்ரஜனும் கலந்த கலவையாகும்.

நீர் வாயு என்பது கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் கலந்த கலவையாகும். இது தொகுப்பு வாயு என்றும் அழைக்கப்படுகிறது. பெட்ரோலியம் என்ற சொல் பாறை எனப் பொருள்படும் 'பெட்ரா' மற்றும் எண்ணெய் எனப் பொருள்படும் 'ஓலியம்' ஆகிய சொற்களில் இருந்து உருவானது.

எரியும்பொழுது வெப்பத்தையும் ஆற்றலையும் தரும் எந்தப் பொருளும் எரிபொருள் எனப்படும்.

தன் ஆற்றல் என்பது ஓரலகு நிறைக்கான ஆற்றல் என வரையறுக்கப்படுகிறது. இது பொருள்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றலை அளப்பதற்குப் பயன்படுகிறது தன் ஆற்றலின் SI அலகு Jkg '.

சீட்டேன் எண், ஒரு டீசல் எஞ்சனின் எரிபொருள் பற்றவைப்பு தாமதக் காலத்தை அளக்கிறது.

சூரிய ஆற்றல் என்பது சூரியக் கதிர்வீச்சுக்கள் மூலம் பெறப்படும் ஆற்றலைக் குறிக்கிறது.

 

சொல்லடைவு

உயிரி வாயு  மீத்தேன் மற்றும் கார்பன் டைஆக்சைடு வாயுக்கள் கலந்த கலவை.

கலோரி மதிப்பு சாதாரண சூழ்நிலைகளில் நிலையான அழுத்தத்தில் ஒரு எரிபொருள் முழுமையாக எரிந்து வெளிப்படுத்தும் வெப்பத்தின் அளவு.

சங்கிலித்தொடராக்கம் கார்பன் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து சங்கிலித்தொடர் போல பெரிய மூலக்கூறு அமைப்பை உருவாக்கும் கார்பனின் பண்பு.

சிதைத்து வடித்தல் காற்றில்லா சூழ்நிலையில் நிலக்கரியை வெப்பப்படுத்தும் முறை

பின்னக் காய்ச்சி வெவ்வேறு கொதிநிலை கொண்ட திரவங்களின் கலவையை வெப்பப்படுத்தி,

வடித்தல் குளிர்வித்து தனியே பிரித்தல்.

ஹைட்ரோகார்பன்  கார்பனையும், ஹைட்ரஜனையும் கொண்ட கரிமச்சேர்மங்கள்

ஆக்டேன் எண் பெட்ரோலில் உள்ள ஆக்டேன் என்ற ஹைட்ரோகார்பனின் அளவைக் குறிக்கும் எண்.

நீர் வாயு கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜனின் வாயுக்கலவை.

LPG திரவ பெட்ரோலிய வாயு

LNG அழுத்தப்பட்ட இயற்கை வாயு




பிற நூல்கள்

1 Chemistry in daily life by Kirpal Singh.

2 Chemistry in action: The molecules of everyday life by Nina Morgan.

3 Engineering Krishnan. Chemistry by Dr. A. Ravi http:/

 

இணையவளங்கள்

1. www.learnchem.net

2. https://edu.rsc.org/resources

Tags : Chemistry in Everyday Life | Chapter 15 | 8th Science அன்றாட வாழ்வில் வேதியியல் | அலகு 15 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 15 : Chemistry in Everyday Life : Points to Remember, Glossary, Concept Map Chemistry in Everyday Life | Chapter 15 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - அன்றாட வாழ்வில் வேதியியல் | அலகு 15 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல்