வகைகள், பண்புகள், எரிபொருள் திறன் - எரிபொருள் | 8th Science : Chapter 15 : Chemistry in Everyday Life
எரிபொருள்
எரியும்பொழுது வெப்ப மற்றும் ஆற்றலைத் தரும் எந்தப் பொருளும்
எரிபொருள் எனப்படும். இந்த வெப்ப ஆற்றலை நாம் சமைக்கவும், சூடுபடுத்தவும், தொழிற்சாலை
மற்றும் உற்பத்திச் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம். மரம், கரி, பெட்ரோல், டீசல்
மற்றும் இயற்கை வாயு ஆகியவை அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் சில எரிபொருள்கள் ஆகும்
1. எரிபொருள்களின்
வகைகள்
இயற்பியல் நிலையைப் பொருத்து எரிபொருள்கள் பல்வேறு வகைகளாகப்
பிரிக்கப்படுகின்றன. அவையாவன: திட, திரவ மற்றும் வாயு எரிபொருள்கள்
திட எரிபொருள்கள்
மரம் மற்றும் நிலக்கரி போன்றவை திட நிலையில் உள்ளதால் அவை திட
எரிபொருள்கள் எனப்படுகின்றன. இந்த வகை எரிபொருள்களே முதன் முதலில் மனிதனால் பயன்படுத்தப்பட்டன.
இவற்றை எளிதில் சேமிக்கவும், எடுத்துச் செல்லவும் முடியும். இவற்றிற்க்கான உற்பத்திச்
செலவும் குறைவு.
திரவ
எரிபொருள்கள்
பெரும்பாலான திரவ எரிபொருள்கள் இறந்த தாவர மற்றும் விலங்குகளின்
படிமங்களிலிருந்து பெறப்படுகின்றன. பெட்ரோலிய எண்ணெய்,
கரித்தார் மற்றும் ஆல்கஹால் ஆகியவை சில திரவ எரிபொருள்களாகும்.
இந்த எரிபொருள்கள் எரியும் பொழுது அதிக ஆற்றலைத் தருகின்றன. மேலும், இவை சாம்பலை உருவாக்குவதில்லை.
வாயு
எரிபொருள்கள்
நிலக்கரி வாயு, எண்ணெய் வாயு, உற்பத்தி வாயு மற்றும் ஹைட்ரஜன்
வாயு ஆகியவை வாயு எரிபொருள்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும். இவற்றை குழாய்கள்
மூலம் எளிதில் எடுத்துச் செல்லமுடியும். மேலும், இவை மாசுபாட்டை ஏற்படுத்துவதில்லை.
2. எரிபொருள்களின்
பண்புகள்
ஒரு நல்லியல்பு எரிபொருள் பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்க
வேண்டும்.
• .எளிதில் கிடைக்க வேண்டும்.
• எளிதில் கொண்டு செல்லப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
• குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்.
• உயர்ந்த கலோரி மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
• அதிகமான வெப்பத்தை வெளியிட வேண்டும்.
• எரிந்த பிறகு விரும்பத்தகாத பொருள்களைத் தரக்கூடாது.
3. எரிபொருள்
திறன்
முக்கிய பகுதிப் பொருளாகக் கொண்டுள்ளது. அது ஆக்சிஜனுடன் எரிந்து
அதிகளவு வெப்பத்தை வெளிவிடுகிறது. எந்தவொரு எரிபொருளும் குறுகிய காலத்தில் எரிந்து
அதிகளவு வெப்பத்தினை வெளிவிடவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஒரு எரிபொருளின் திறனை
பதங்களிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
தன் ஆற்றல்
(Specific Energy)
ஓரலகு நிறையுடைய எரிபொருள் எரியும் பொழுது வெளிவிடும் வெப்ப
ஆற்றலே தன் ஆற்றல் எனப்படும். இது ஓலகு நிறைக்கான ஆற்றல் வரையறுக்கப்படுகிறது இது எரிபொருள்களில்
தேக்கி வைக்கப்பட்டுள்ள ஆற்றலை அளவிடப் பயன்படுகிறது. இதன் SI அலகு Jkg -1
கலோரி
மதிப்பு
இது, சாதாரண சூழ்நிலைகளில் நிலையான அழுத்தத்தில் ஒரு எரிபொருள்
முழுமையாக எரிந்து வெளிவிடும் வெப்ப ஆற்றலின் அளவாகும். இது Ki/g என்ற அலகில் அளக்கப்படுகிறது
ஆக்டேன்
எண்
இது பெட்ரோலில் உள்ள ஆக்டேன் என்ற ஹைட்ரோகார்பனின் அளவைக் குறிக்கும்
ஒரு எண்ணாகும்.உயர்ந்த ஆக்டேன் எண்ணைப் பெற்றுள்ள எரிபொருள் ஒரு நல்லியல்பு எரிபொருளாகும்.
சீட்டேன்
எண்
இது டீசல் எஞ்சினில் உள்ள எரிபொருளின் பற்றவைப்பு தாமதக் கால அளவை அளப்பதாகும். சீட்டேன் எண் அதிகம் கொண்ட எரிபொருள் குறைவான பற்றவைப்பு நேரத்தைக் கொண்டிருக்கும். உயர்ந்த சீட்டேன் எண் கொண்ட எரிபொருள் ஒரு நல்லியல்பு எரிபொருள் எனப்படும்.