Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | T4 பாக்டீரிய ஃபாஜின் அமைப்பு

தாவரவியல் - T4 பாக்டீரிய ஃபாஜின் அமைப்பு | 11th Botany : Chapter 1 : Living World

   Posted On :  16.03.2022 11:57 pm

11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்

T4 பாக்டீரிய ஃபாஜின் அமைப்பு

பாக்டீரியங்களைத் தாக்கி அழிக்கும் வைரஸ்கள் பாக்டீரியஃபாஜ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதன் நேரடியான பொருள் பாக்டீரிய உண்ணிகள் (கிரேக்கம்: ஃபாஜின் = உண்ணுவது). மண், கழிவுநீர், பழங்கள், காய்கறிகள், பால் போன்றவற்றில் ஃபாஜ்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

பாக்டீரியஃபாஜ் (Bacteriophage)

பாக்டீரியங்களைத் தாக்கி அழிக்கும் வைரஸ்கள் பாக்டீரியஃபாஜ்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதன் நேரடியான பொருள் பாக்டீரிய உண்ணிகள் (கிரேக்கம்: பாஜின் = உண்ணுவது). மண், கழிவுநீர், பழங்கள், காய்கறிகள், பால் போன்றவற்றில் ஃபாஜ்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

 

T4 பாக்டீரிய ஃபாஜின் அமைப்பு

T4ஃபாஜ்கள் தலைப்பிரட்டை வடிவம் கொண்டவை. இவை தலை, கழுத்துப்பட்டை, வால், அடித்தட்டு, வால் நார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன (படம் 1.4 இ). அறுங்கோண வடிவம் கொண்ட தலைப்பகுதி 2000 ஒத்த புரதத்துணை அலகுகளால் ஆனது. நீண்ட சுருள் வடிவத்தைக் கொண்ட வாலின் மையப்பகுதி உள்ளீடற்றது. இது தலையுடன் கழுத்துப்பட்டை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. வாலின் முடிவுப்பகுதியில் அடித்தட்டு இணைந்துள்ளது. அடித்தட்டு ஆறு வால் நார்களையும், ஆறு முட்களையும் பெற்றுள்ளது. இத்தகைய , நார்கள் பெருக்கச் சுழற்சியின்போது ஓம்புயிரி பாக்டீரிய செல்லின் செல் சுவருடன் ஃபாஜ்கள் ஒட்டிக்கொள்ள உதவுகின்றன. தலைப்பகுதியில் 50um அளவுடைய ஈரிழை DNA மூலக்கூறு இறுக்கமாக அடைக்கப்பட்டுள்ளது. ஃபாஜின் நீளத்தை விட அதன் DNA மூலக்கூறின் நீளம் 1000 மடங்கு அதிகமாகும். 



Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 1 : Living World : Structure of T4 bacteriophage in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம் : T4 பாக்டீரிய ஃபாஜின் அமைப்பு - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்