Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | பூஞ்சையில் நடைபெறும் இனப்பெருக்க முறைகள்

தாவரவியல் - பூஞ்சையில் நடைபெறும் இனப்பெருக்க முறைகள் | 11th Botany : Chapter 1 : Living World

   Posted On :  16.05.2022 10:49 am

11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்

பூஞ்சையில் நடைபெறும் இனப்பெருக்க முறைகள்

1. பாலிலா இனப்பெருக்கம் 2. பாலினப்பெருக்கம்

பூஞ்சையில் நடைபெறும் இனப்பெருக்க முறைகள்

பூஞ்சையில் நடைபெறும் இனப்பெருக்க முறைகளுக்கான படம் 1.19-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

பாலிலா இனப்பெருக்கம்

1. இயங்குவித்துகள் (Zoospores). இவை இயங்கு வித்தகங்களில் தோற்றுவிக்கப்படும் கசையிழையுடைய அமைப்புகளாகும். (எடுத்துக்காட்டு: கைட்ரிடுகள்)

2. கொனிடியங்கள் (Conidia): கொனிடியத் தாங்கிகளின் மீது உருவாகும் வித்துகள். (எடுத்துக்காட்டு: ஆஸ்பெர்ஜில்லஸ்)

3. ஆய்டிய வித்துகள் (Oidia) / உடலவித்துகள் (Thallospores) / கணுவித்துகள் (Arthrospores): ஹைஃபாக்கள் பிளவுற்றுத் தோன்றும் வித்துகள் ஆய்டிய வித்துகள் என அழைக்கப்படுகின்றன. (எடுத்துக்காட்டு: எரிசைஃபி ).

4. பிளவுறுதல் (Fission): உடலச் செல் பிளவுற்று இரண்டு சேய் செல்களைத் தருகிறது. (எடுத்துக்காட்டு: சைசோசாக்கரோமைசிஸ் - ஈஸ்ட்)

5. மொட்டுவிடுதல் (Budding): பெற்றோர் செல்லிருந்து சிறிய மொட்டு போன்ற வளர்ச்சி தோன்றி அவை பிரிந்துச்சென்று தனித்து வாழ்கின்றன. (எடுத்துக்காட்டு: சாக்கரோமைசிஸ் - ஈஸ்ட்)

6. கிளாமிடவித்துகள் (Chlamydospores): தடித்த சுவருடைய ஓய்வுநிலை வித்துகளாகும், (எடுத்துக்காட்டு: ஃபியுசேரியம்)


பாலினப்பெருக்கம்

1. இயக்கக் கேமீட்களின் இணைவு: (Planogametic copulation)

நகரும் தன்மையுடைய கேமீட்களின் இணைவிற்கு இயக்க கேமீட்களின் இணைவு என்று பெயர். இது மூன்று வகைப்படும்.

அ. ஒத்தகேமீட் இணைவு (Isogamy) - புற அமைப்பு, செயலியலில் ஒத்த கேமீட்களின் இணைவாகும். (எடுத்துக்காட்டு: சின்கைட்ரியம்).

ஆ. சமமற்ற கேமீட் இணைவு (Anisogamy) - புற அமைப்பு அல்லது செயலியலில் வேறுபட்ட கேமீடுகளின் இணைவாகும். (எடுத்துக்காட்டு : அல்லோமைசிஸ்).

இ. முட்டை கருவுறுதல் (Oogamy) - புற அமைப்பிலும், செயலியலிலும் வேறுபட்ட இரு கேமீட்களின் இணைவாகும். எடுத்துக்காட்டு: மோனோபிளாபாரிஸ்).

2. கேமீட்டகத்தொடர்பு (Gametangial contact); பாலினப்பெருக்கத்தின் போது ஆந்தரிடியம், ஊகோணியம் இடையே தொடர்பு ஏற்படுதல். (எடுத்துக்காட்டு: அல்புகோ).

3. கேமீட்டக இணைவு (Gametangial copulation): கேமீட்டகங்கள் இணைந்து உறக்கக் கருமுட்டை (Zygospore) உருவாதல். (எடுத்துக்காட்டு: மியூக்கர், ரைசோபஸ்).

4. ஸ்பெர்மேஷிய இணைவு (Spermatisation): இம்முறையில் ஒரு உட்கரு கொண்ட பிக்னியவித்து நுண்கொனிடியம் ஏற்பு ஹைஃபாக்களுக்குக் கடத்தப்படுகிறது (எடுத்துக்காட்டு : பக்சினியா, நியுரோஸ்போரா).

5. உடலசெல் இணைவு (Somatogamy): இரண்டு ஹைஃபாக்களின் உடலசெல்களின் இணைவாகும் (எடுத்துக்காட்டு: அகாரிகஸ்).

Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 1 : Living World : Methods of Reproduction in Fungi : Asexual and Sexual Reproduction in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம் : பூஞ்சையில் நடைபெறும் இனப்பெருக்க முறைகள் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்