Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | மாணவர் செயல்பாடுகள்

செல் | பருவம் 2 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 6th Science : Term 2 Unit 5 : The Cell

   Posted On :  20.09.2023 08:28 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல்

மாணவர் செயல்பாடுகள்

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல் : மாணவர் செயல்பாடுகள்

செயல்பாடு 1:

நோக்கம்:

ஒரு தனி செல்லின் அமைப்பைக் கண்டறிதல் (கோழி முட்டை)

தேவையான பொருட்கள் :

கோழி முட்டை, ஒரு தட்டு

செயல்முறை:

கோழி முட்டையின் ஓட்டை உடைத்து, முட்டையை கவனமாக தட்டில் ஊற்றவும்.

காண்பன :

கோழி முட்டையின் மையத்தில் மஞ்சள் பகுதியும், அதைச் சுற்றி ஒளி ஊடுருவக் கூடிய, ஜெல்லி போன்ற, ஆல்புமினால் ஆன வெண்மைப்பகுதியும் உள்ளது அடர்த்தியான மஞ்சள் பகுதி, அச்செல்லின் உட்கருவாகும். வெள்ளை நிறப்பகுதி சைட்டேபிளாசம் எனப்படும். முட்டை ஓட்டின் உட்புறம் ஒரு மெல்லிய சவ்வு காணப்படுகிறது. அது செல்சவ்வைக் குறிக்கிறது.


செயல்பாடு 2:

நோக்கம்:

வெங்காயத் தோலை உரித்து, அதை நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்தல்

தேவையான பொருட்கள்:

கண்ணாடி ஸ்லைடு (நழுவம்) கண்ணாடி மென்தகடு, வெங்காயம், அயோடின் கரைசல், கத்தி, இடுக்கி மற்றும் நுண்ணோக்கி

செயல்முறை:

ஒரு வெங்காயத்தை எடுத்து அதை நீள வாக்கில் ரெண்டு துண்டுகளாக வெட்டவும். அதிலிருந்து சதைப்பற்றுள்ள இலையை எடுத்து, அதன் உட்பக்கமுள்ள ஒளி ஊடுவக் கூடிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியை பிரிக்கவும். கண்ணாடி நழுவத்தை எடுத்து, அதில் ஒரு துளிநீரை விட்டு, அந்நீரில் இச்சவ்வை வைக்கவும் அதன் மீது ஒரு துளி அயோடின் கரைசலை இடவும். கண்ணாடி மென் தட்டால் இதை மூடி, நுண்ணோக்கியில் வைத்து பார்க்கவும்.

காண்பன :

நுண்ணோக்கியில் வெங்காயத் தோலில் உள்ள செவ்வக வடிவ செல்லினை நாம் பார்க்கலாம். ஒவ்வொரு செல்லிலும் நியூக்ளியஸ் இருப்பதையும் நாம் காணலாம்.


செயல்பாடு 3: நோக்கம்: இருபரிமாண மற்றும் முப்பரிமாண அமைப்பிற்கிடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறிதல்.

தேவையான பொருள்கள்: பாலித்தீன் பை, தண்ணீர், கோலிக்குண்டு,

செய்முறை: பாலித்தீன் பையில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் கோலிகுண்டைப் போடவும். பிறகு அதனை பார்த்து உனது நோட்டில் படம் வரையவும். நீ வட்ட வடிவில் படம் வரைந்திருந்தால் அது இருபரிமாணப் படம். கோள வடிவில் வரைந்திருந்தால் அது முப்பரிமாணப்படம் ஆகும்.

முடிவு: இப்போது நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் அதனை உணர்ந்திருப்பாய். விலங்கு செல்கள் எப்போதும் கோள வடிவில் தான் இருக்கும். வட்ட வடிவில் இருக்காது.

Tags : The Cell | Term 2 Unit 5 | 6th Science செல் | பருவம் 2 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 5 : The Cell : Student Activities The Cell | Term 2 Unit 5 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல் : மாணவர் செயல்பாடுகள் - செல் | பருவம் 2 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல்