Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | மனித உறுப்பு மண்டலங்கள்

பருவம் 2 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மனித உறுப்பு மண்டலங்கள் | 6th Science : Term 2 Unit 6 : Human Organ systems

   Posted On :  20.09.2023 09:05 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 6 : மனித உறுப்பு மண்டலங்கள்

மனித உறுப்பு மண்டலங்கள்

உறுப்பு மண்டலம் என்பது அடிப்படைத் திசுக்களால் ஆன ஒன்றிணைந்த உறுப்புகளின் கூட்டமைப்பால் ஆனது. இத்தகைய அமைப்பு முறை ஓர் உயிரினத்தின் பல்வேறு செயல்களை திறனுடன் செயல்படுத்த உதவுகிறது.

அலகு 6

மனித உறுப்பு மண்டலங்கள்



 

கற்றல் நோக்கங்கள்

மனித உடலின் உறுப்புகள் மற்றும் உறுப்புமண்டலங்களின் அமைப்பு மற்றும் அதன் பணிகளைப் புரிந்து கொள்ளுதல்.

மனித உடலில் உள்ள பல்வேறு மண்டலங்களையும் அவற்றின் ஒருங்கிணைப்பையும் அறிந்து கொள்ளுதல்.

செரிமானம், உட்கிரகித்தல், சுவாசம், கழிவு நீக்கம் மற்றும் இன்னும் பிற வாழ்க்கைச் செயல் முறைகளின் முக்கித்துவத்தைப் புரிந்து கொள்ளுதல்

 

அறிமுகம்

உறுப்பு மண்டலம் என்பது அடிப்படைத் திசுக்களால் ஆன ஒன்றிணைந்த உறுப்புகளின் கூட்டமைப்பால் ஆனது. இத்தகைய அமைப்பு முறைஓர்உயிரினத்தின்பல்வேறுசெயல்களை திறனுடன் செயல்படுத்த உதவுகிறது. உறுப்புகள் ஒருங்கிணைந்து ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்தலே உறுப்பு மண்டலம் எனப்படும். நமது உடலில் எட்டு பிரதான உறுப்பு மண்டலங்கள் உள்ளன. அவை

எலும்பு மண்டலம் 

தசை மண்டலம்

செரிமான மண்டலம் 

சுவாச மண்டலம்

இரத்தஓட்ட மண்டலம் 

நரம்பு மண்டலம்

நாளமில்லாச் சுரப்பி மண்டலம்

கழிவு நீக்க மண்டலம்

மனித உடலின் உறுப்பு மண்டலங்களின் அமைப்பு மற்றும் அதன் பணிகளைப் பற்றி இப்பாடத்தில் மேலும் காண இருக்கின்றோம். 

Tags : Term 2 Unit 6 | 6th Science பருவம் 2 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 6 : Human Organ systems : Human Organ systems Term 2 Unit 6 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 6 : மனித உறுப்பு மண்டலங்கள் : மனித உறுப்பு மண்டலங்கள் - பருவம் 2 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 6 : மனித உறுப்பு மண்டலங்கள்