Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | மாணவர் செயல்பாடுகள்

அன்றாட வாழ்வில் வேதியியல் | அலகு 15 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 8th Science : Chapter 15 : Chemistry in Everyday Life

   Posted On :  30.07.2023 12:18 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல்

மாணவர் செயல்பாடுகள்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல் : கேள்வி பதில்களுடன் மாணவர் செயல்பாடுகள், தீர்வு

செயல்பாடு 1

களிமண் மற்றும் தீக்குச்சிகளைக் கொண்டு கீழ்க்காணும் ஹைட்ரோகார்பன்களின் மூலக்கூறு மாதிரிகளை உருவாக்குக.


செயல்பாடு 2

ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து அதில் சில இலைகள், சிறு மரக்கிளைகள், தேவையற்ற காகிதங்கள் மற்றும் மரத்தூள் ஆகியவற்றைப் போடவும். இதில் சிறிதளவு நீரை ஊற்றி சுமார் இருபது நாட்களுக்கு அப்படியே வைக்கவும். இருபது நாட்களுக்குப் பிறகு பாட்டில் மூடியைத் திறந்து ஒரு எரியும் குச்சியை பாட்டிலின் வாயின் அருகே கொண்டு வரவும். நீ என்ன காண்கிறாய்? பாட்டிலின் வாய்ப்பகுதியில் எரியும் வாயுவைக் காண முடியும். இது இயற்கை வாயு உருவாவதால் நிகழ்கிறது.


செயல்பாடு 3

உன்னுடைய பகுதியில் உள்ள உயிரி-வாயு உற்பத்தி நிலையத்தை உன் ஆசிரியருடன் சென்று பார்வையிடவும். உயிரி-வாயு அங்கு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை உற்றுநோக்கு உயிரி - வாயுவின் பயன்களையும், அதன் நன்மைகளையும் பற்றி உன் நண்பர்களுடன் கலந்துரையாடுக. கிராமப் பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த நிலையங்கள் எவ்வகையில் பயன்படுகின்றன?


செயல்பாடு 4

இந்தியாவில் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள பகுதிகளை இந்திய வரைபடத்தில் குறிக்கவும். மேலும், அங்கு எந்த வகை நிலக்கரி கிடைக்கிறது என்பதையும் கண்டறிக.


செயல்பாடு 5

இந்தியாவில் எங்கு பெட்ரோலியம் பெருமளவில் எடுக்கப்படுகிறது என்பதைக் கண்டறிக. மேலும், இந்தியாவில் உள்ள பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிலையங்களைப் பட்டியலிடுக.

 

அதிக அழுத்தம் கொண்டு இயற்கை வாயுவை அழுத்தும்பொழுது அழுக்கப்பட்ட இயற்கை வாயு (CNG) கிடைக்கிறது. இது தற்பொழுது தானியங்கி வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுகிறது. இதில் உள்ள முதன்மையான ஹைட்ரோ கார்பன் மீத்தேன் (B8.5%) ஆகும். பெரிய சரக்கு வாகனங்களில் எடுத்துச்செல்வதற்காக இது திரவமாக்கப்படுகிறது. இது திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு(LNG) எனப்படும். CNG அதிக அழுத்தத்திலும், LNG மிகக் குளிர்வூட்டப்பட்ட திரவ நிலையிலும் சேமித்து வைக்கப்படுகின்றன. CNG கீழ்க்காணும் பண்புகளைப் பெற்றுள்ளது.

.• இது மிகவும் மலிவான மற்றும் தூய்மையான எரிபொருள்.

.• இதனைப் பயன்படுத்தும் வாகனங்கள் மிகக் குறைவான கார்பன் டைஆக்சைடையும், ஹைட்ரோகார்பன் புகையையும் வெளியிடுகின்றன.

.• பெட்ரோல் மற்றும் டீசலை விட மிகவும் விலை குறைந்தது.


Tags : Chemistry in Everyday Life | Chapter 15 | 8th Science அன்றாட வாழ்வில் வேதியியல் | அலகு 15 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 15 : Chemistry in Everyday Life : Student Activities Chemistry in Everyday Life | Chapter 15 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல் : மாணவர் செயல்பாடுகள் - அன்றாட வாழ்வில் வேதியியல் | அலகு 15 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : அன்றாட வாழ்வில் வேதியியல்