Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | இந்திய நில உடைமை முறைகள்
   Posted On :  06.10.2023 09:03 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்

இந்திய நில உடைமை முறைகள்

நில உடைமை முறை என்பது நிலங்களுக்கான உரிமை மற்றும் நிர்வகித்தல் பற்றியதாகும். பிற முறைகளிலிருந்து நில உடைமை முறை பின்வரும் விதங்களில் வேறுபடுகிறது.

இந்திய நில உடைமை முறைகள்

நில உடைமை முறை என்பது நிலங்களுக்கான உரிமை மற்றும் நிர்வகித்தல் பற்றியதாகும். பிற முறைகளிலிருந்து நில உடைமை முறை பின்வரும் விதங்களில் வேறுபடுகிறது.

) நிலம் யாருக்கு சொந்தமானது?

) நிலத்தில் யார் அறுவடை செய்வது?

) நிலவருவாயை அரசுக்கு செலுத்துவதற்குப் பொறுப்பானவர் யார்?

மேற்கண்ட வினாக்களின் அடிப்படையில் சுதந்திரத்திற்கு முன் மூன்று விதமான நில உடைமை முறைகள் இருந்தன. அவை ஜமீன்தாரி முறை மஹல்வாரி முறை மற்றும் இரயத்துவாரி முறை ஆகும்.


1. ஜமீன்தாரி முறை அல்லது நிலச்சுவான்தாரி முறை

லார்டு காரன் வாலிஸ் 1793ஆம் ஆண்டில் நிரந்தர சொத்துரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு ஜமீன்தாரி முறையை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கியது. இம்முறையில் நிலச்சுவான்தாரர்களும், ஜமீன்தாரர்களும் நிலத்தின் சொந்தக்காரர்களாக அறிவிக்கப்பட்டு நில வருவாயை அரசுக்குச் செலுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் அவர்களிடமே வழங்கப்பட்டது. வசூலிக்கப்பட்ட நிலவருவாயில் 11ல் 10 பங்கு அரசுக்குச் செலுத்தப்பட வேண்டும் என்றும் மீதத் தொகை ஜமீன்தாரர்களுக்கான ஊதியமாகவும் அறிவிக்கப்பட்டது.


2. மஹல்வாரி முறை அல்லது இனவாரி முறை

இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் மத்தியபிரதேசம் மற்றும் பஞ்சாபிற்கும் வரிவுபடுத்தப்பட்டது. இம்முறையில் கிராம மக்களாலான குழுவினர் நிலச் சொந்தக்காரர்களாக இருந்து நிர்வாகம் செய்தனர். அக்குழுவினர் நிலத்தை விவசாயிகளிடம் பிரித்துக் கொடுத்து அவர்களிடமிருந்து வருவாயைப் பெற்று அரசுக்குச் செலுத்தினர்.


3. இரயத்துவாரி முறை அல்லது சொந்த சாகுபடி முறை

இம்முறை முதன் முதலில் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் மகாராஷ்டிரா, குஜராத், அஸ்ஸாம், கூர்க், கிழக்கு பஞ்சாப் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இம்முறையில் நிலத்தைச் சொந்தம் கொண்டாடும் உரிமை மற்றும் நிலத்திற்கான கட்டுபாடு, நில உரிமையாளரிடமே இருந்தது. உரிமையாளர்களிடம் நேரடியான உறவு இருந்தது. சுதந்திரத்திற்கு முன்னர் இம்முறை குறைந்த அடக்குமுறை உடையதாக இருந்தது.

11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence : The Land Tenure Systems in India in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும் : இந்திய நில உடைமை முறைகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்