Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | எண்களின் விரிவாக்கம், இடமதிப்பு மற்றும் முகமதிப்பு

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - எண்களின் விரிவாக்கம், இடமதிப்பு மற்றும் முகமதிப்பு | 4th Maths : Term 1 Unit 2 : Numbers

   Posted On :  11.10.2023 06:30 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

எண்களின் விரிவாக்கம், இடமதிப்பு மற்றும் முகமதிப்பு

ஓர் எண்ணின் விரிவான வடிவத்திலுள்ள இலக்கங்கள் அவ்வெண்ணில் உள்ள இலக்கங்களின் இடமதிப்பினை நமக்கு தெரிவிக்கின்றன.

எண்களின் விரிவாக்கம், இடமதிப்பு மற்றும் முகமதிப்பு

534 என்ற எண்ணை 500 + 30 + 4 என விரிவாக்கம் செய்யலாம்.

இவ்வெண்ணை ஐந்நூற்று முப்பத்து நான்கு என நாம் படிக்க வேண்டும்

இதேபோன்று,

2936 = 2000 + 900 + 30 + 6 = இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து ஆறு

ஓர் எண்ணின் விரிவான வடிவத்திலுள்ள இலக்கங்கள் அவ்வெண்ணில் உள்ள இலக்கங்களின் இடமதிப்பினை நமக்கு தெரிவிக்கின்றன.

5269 என்ற எண்ணில்

• 5 ன் இடமதிப்பு ஆயிரம் ஆகும். எனவே, இதன் மதிப்பானது 5000 (ஐந்தாயிரம்

• 2 ன் இடமதிப்பு நூறு ஆகும். எனவே, இதன் மதிப்பானது 200 (இருநூறு)

• 6 ன் இடமதிப்பு பத்து ஆகும். எனவே, இதன் மதிப்பானது 60 (அறுபது)

• 9 ன் இடமதிப்பு ஒன்று ஆகும். எனவே, இதன் மதிப்பானது 9 (ஒன்பது)

ஓர் எண்ணிலுள்ள இலக்கத்தின் இடமதிப்பு என்பது அந்த எண்ணில் அவ்விலக்கம் அமைந்திருக்கும் இடத்தை கொண்டு மதிப்பிடப்படுகிறது. 5 என்ற எண்ணின் இடமதிப்பு ஆயிரமாகும். எனவே, இதன் மதிப்பானது 5000 இதுவே நூறாம் இடத்தில் இருந்தால் இதன் மதிப்பு 500 ஆகும்.

ஓர் இலக்கத்தின் முகமதிப்பு என்பது அந்த இலக்கம் ஓர் எண்ணில் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இலக்கமே ஆகும். முகமதிப்பு இடமதிப்பை பொறுத்து மாறுபடுவதில்லை. ஆனால் இடமதிப்பானது அந்த இலக்கத்தின் இடத்தைப் பொறுத்து மாறுபடும்.

ஒரு இலக்கத்தின் மதிப்பு = அவ்விலக்கத்தின் முகமதிப்பு × அவ்விலக்கத்தின் இடமதிப்பு

எடுத்துக்காட்டு

2745 என்ற எண்ணில் உள்ள முகமதிப்பு மற்றும் இடமதிப்பை கண்டுபிடி 2745 என்ற எண்ணில்

5 ன் மதிப்பு = 5×1=5; 5ன் முகமதிப்பு 5 மற்றும் 5ன் இடமதிப்பு ஒன்றுகள் ஆகும்

4 ன் மதிப்பு = 4 × 10 = 40; 4ன் முகமதிப்பு 4 மற்றும் 4ன் இடமதிப்பு பத்துகள் ஆகும்

7ன் மதிப்பு = 7 × 100 = 700; 7ன் முகமதிப்பு 7 மற்றும் 7ன் இடமதிப்பு நுறுகள் ஆகும்

2 ன் மதிப்பு = 2 × 1000 = 2000; 2ன் முகமதிப்பு 2 மற்றும் 2ன் இடமதிப்பு ஆயிரங்கள் ஆகும்.

Tags : Numbers | Term 1 Chapter 2 | 4th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 2 : Numbers : Write number with respect to place value expansion Numbers | Term 1 Chapter 2 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : எண்களின் விரிவாக்கம், இடமதிப்பு மற்றும் முகமதிப்பு - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்